பலத்துடன் பாராளுமன்றத்தில் இருந்து தமிழ் மக்களுக்கு பெற்றுத் தந்தது என்ன..?

வடக்கில் புதிய கூட்டணியொன்றை உருவாக்குவது தற்போதைய சூழ்நிலையில் தமிழ் பிரதிநிதிகளின் பாராளுமன்ற பலத்தை குறைப்பதற்கான நிலையையே உருவாக்கும் என்பதுடன், தெற்கின் கடும்போக்குவாதத்திற்கு சாதகமாக மாறக்கூடிய சூழலும் உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

வடக்கில் உருவாக்கப்படும் புதிய கூட்டணி பொதுத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு சவாலாக அமையுமா என வினவிய போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

புதிய கூட்டணியை உருவாக்கிய பின்னர் தான் அது தொடர்பிலான உறுதியான கருத்தை எம்மால் வெளிப்படுத்த முடியும். அவர்களின் நிலைப்பாடு என்னவென இதுவரை அறிவிக்கப்படவில்லை. இன்றைய அரசியல் சூழலில் குறிப்பாக தெற்கில் தலைத்தூக்கியுள்ள கடும்போக்குவாதத்தால் புதிய கூட்டணி மேலும் தமிழர்களின் வாக்குகளை பலமிழக்கச் செய்யும்.

குறைந்த பலத்துடன் தமிழ் பிரதிநிதிகள் பாராளுமன்றத்துக்குச் செல்வதானது தெற்கில் உள்ள அரசியல்வாதிகளின் இலக்குகளை அடைந்துக்கொள்வதை இலகுவாக்கிவிடும்.

எமக்குள் பிளவுகளை வைத்துக்கொண்டு பேச்சுவார்த்தைகளையோ அல்லது வேறு விடயங்களையோ மேற்கொள்ள முடியாது. பிளவுகள் ஏற்பட்டால் அதனை தெற்கின் அரசியல்வாதிகள் சாதகமாக பயன்படுத்திக்கொள்ளக் கூடும். இந்தக் கூட்டணி என்னை பொறுத்தவரை மிகப் பெரிய கேள்விக்குறி என்பதுடன் இந்த தருணத்துக்கு பொறுத்தமற்றதாகும். தேர்தலுக்கும் இன்னமும் குறுகிய காலம்தான் உள்ளது. இணைந்து பயணிப்பது தொடர்பில் எம்முடனும் சிலர் பேச்சுகள் நடத்தினர். என்றாலும் ஏனையவர்களுடன் எவ்வளவு தூரம் பேச்சுகளை நடத்தியுள்ளனரென தெரியவில்லை. அவர்கள் எம்முடன் பேசினால் சாதகமான முறையில் தேர்தலை சந்திக்கலாம். இருதரப்பு இணைந்து பயணிப்பது குறித்து பேசப்பட்டுள்ள போதிலும் அதில் சாதகம் எட்டப்படவில்லை என்றார்.

Related posts