ரஜினிக்கு கொளத்தூர் மணி சவால் ..

தன் பேச்சுக்கு ஆதாரமாக துக்ளக் இதழின் அசலை ரஜினி காட்டாதது ஏன் என, திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி கேள்வி எழுப்பியுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற துக்ளக் 50-வது ஆண்டு விழாவில், ரஜினி பெரியார் தொடர்பான சில கருத்துகளைத் தனது பேச்சில் முன்வைத்தார். அவ்வாறான சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை. ரஜினி மன்னிப்பு கோர வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில், ரஜினி இன்று (ஜன. 21) செய்தியாளர்களைச் சந்தித்து இது தொடர்பாக விளக்கம் அளித்தார். அப்போது, "துக்ளக் 50-வது ஆண்டு விழாவில் நான் பேசியது சர்ச்சையாகி இருக்கிறது. நான் சொன்ன மாதிரியான நிகழ்வு நடக்கவில்லை என்று சொல்கிறார்கள். அவுட்லுக் பத்திரிகையில் என்ன நடந்தது என்பதை எழுதியிருக்கிறார்கள். அந்த ஊர்வலத்தில் ராமர் - சீதையை உடையில்லாமல் செருப்பு மாலை அணிந்து கொண்டு…

குடியுரிமைத் திருத்தச்சட்டத்துக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம்

குடியுரிமைத் திருத்தச்சட்டத்துக்கு எதிராக மற்ற மாநிலங்கள் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியதுபோல் தெலங்கானா தீர்மானம் நிறைவேற்றுவோம் என்று முதல்வர் சந்திரசேகர் ராவ் தெரிவித்தார் மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக ஏற்கனவே கேரளா, ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ள நிலையில் இப்போது தெலங்கானாவும் நிறைவேற்ற உள்ளது தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக மற்ற மாநிலங்கள் தீர்மானம் நிறைவேற்றியதுபோல் தெலங்கானா அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரும். குடியுரிமைத் திருத்தச் சட்டம் நாட்டின் எதிர்காலத்துக்கு உகந்தது அல்ல. மற்ற மாநிலங்களின் முதல்வர்களிடம் நான் ஏற்கனவே பேசிவிட்டேன். அடுத்த மாதத்தில் ஹைதராபாத்தில் பிராந்திய கட்சிகளின் தலைவர்கள் கொண்ட கூட்டம் நடத்த இருக்கிறேன். தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் கொள்கை மதச்சார்பற்றது, ஆதலால், இயல்பாகவே சிஏஏ…

சீனாவில் உள்ள மாணவர்களின் முதல் குழு 48 மணித்தியாலங்களுக்குள் இலங்கைக்கு

கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவியுள்ள சீனாவின் வூஹான் (Wuhan) மற்றும் சிச்சுஆன் (Sichuan) மாகாணங்களில் உள்ள மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து இலங்கையர்களையும் உடனடியாக நாட்டுக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார். இதற்காக ஜனாதிபதி அலுவலகம், வெளிவிவகார அமைச்சு, சுகாதார அமைச்சு, பீஜிங் நகரில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் ஸ்ரீ லங்கன் விமான சேவை ஆகியன இணைந்து விசேட நிகழ்ச்சித்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வூஹான் மாகாணத்திற்கு உள்வருவது மற்றும் அங்கிருந்து வெளியேறுவதை சீன அதிகாரிகள் தற்போது தடை செய்துள்ளனர். தடை நீக்கப்பட்டதும் அங்குள்ள மாணவர்களை அழைத்து வருவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. சிச்சுஆன் மாகாணத்தில் செங்டு நகரில் உள்ள சுமார் 150 மாணவர்களை அடுத்த 48 மணித்தியாலங்களுக்குள் அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதற்காக ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான…

கொரோனா வைரஸ் தொற்று – மேலும் இருவர் வைத்தியசாலையில் அனுமதி!

கொரோனா வைரஸ் தொற்றில் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகத்தின் பேரில் மேலும் இரண்டு பேர் ஐ,டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆண் ஒருவரும் சீன நாட்டு பெண் ஒருவருமே இவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஐ.டி.எச் வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். அதன்படி, கொரோனா வைரஸ் தொற்றில் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகத்தின் பேரில் இதுவரை மூன்று பெண்கள் உட்பட 4 பேர் ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானதாக தெரிவித்து ஐ.டி.எச் வைத்தியசாலையில் நேற்று (25) அனுமதிக்கப்பட்டுள்ள இரண்டு பெண்களுக்கும் உண்மையாகவே அந்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதா? என்பது குறித்து ஆராய்ந்து வருவதாக இலங்கை வைத்திய ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. குறித்த இரு பெண்களினதும் இரத்த மாதிரிகளை இலங்கை வைத்திய ஆய்வு நிறுவனத்திற்கு அனுப்பியுள்ளதாக ஐ.டி.எச் வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் அசித்த அத்தநாயக்க தெரிவித்துள்ளார். சீனாவில் கல்வி…