கொரோனா வைரஸ்: சீனாவின் ரகசிய உயிரியல் ஆயுதத் திட்டத்துடன் தொடர்புடையதா?

கொடிய கொரோனா வைரஸ் தொற்றுநோய் சீனாவின் ரகசிய உயிரியல் ஆயுதத் திட்டத்துடன் தொடர்புடையது என இஸ்ரேலிய உயிரியல் போர் நிபுணர் தெரிவித்துள்ளார்.

சீனாவில் தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸ் காய்ச்சல் அந்நாட்டு மக்களிடையே அதிக அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது.

முதலில் வுகான் நகரில் உள்ள ஒரு கடல் உணவு மற்றும் வனவிலங்கு சந்தையில் பாதிக்கப்பட்ட விலங்குகளிடம் இருந்துதான் இந்த வைரஸ் தோன்றியதாக தகவல்கள் கூறுகின்றன.

இதேபோன்று ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் தலா ஒருவரும், தாய்லாந்து நாட்டில் 3 பேரும், அமெரிக்கா மற்றும் தைவான் நாடுகளில் தலா ஒருவரும் வைரஸ் பாதிப்பிற்கு ஆளாகினர். ஆஸ்திரேலியா மற்றும் பிரான்சிலும் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

சீனாவில் கொரோனா வைரசால் இதுவரை 26 பேர் பலியாகி இருந்தனர். இந்நிலையில், இன்று காலை வரை ஒரே நாளில் 15 பேர் மரணம் அடைந்து உள்ளனர். இதனால் வைரஸ் பாதிப்புக்கு பலியானோர் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. பலியானோர் அனைவரும் 55 வயது முதல் 87 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர். அவர்களில் 11 பேர் ஆண்கள். 4 பேர் பெண்கள். கொரோனா வைரஸ் தொற்றுநோய் பாதிப்பு வயதானவர்களுக்கே ஏற்படுகிறது.

உலகளவில் பரவும் கொடிய கொரோனா வைரஸ் தொற்றுநோய் சீனாவின் ரகசிய உயிரியல் ஆயுதத் திட்டத்துடன் தொடர்புடைய வுகான் ஆய்வகத்தில் தோன்றியிருக்கலாம் என்று இஸ்ரேலிய உயிரியல் போர் நிபுணர் தெரிவித்துள்ளார்.

சீனாவின் மிக மேம்பட்ட வைரஸ் ஆராய்ச்சி ஆய்வகமான வுகான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி குறித்த செய்தியை 2015 ஆம் ஆண்டு உள்ளுர் வுஹான் தொலைக்காட்சி முதலில் வெளியிட்டது, அதே செய்தியை ரேடியோ ஃப்ரீ ஆசியா இந்த வாரம் மறு ஒளிபரப்பியது. சீனாவில் ஆபத்தான வைரஸ்களை ஆய்வு செய்யும் திறன் கொண்ட ஒரே தளம் இந்த ஆய்வகமாகும்.

சீன உயிரியல் ஆயுதம் குறித்து ஆய்வு செய்த முன்னாள் இஸ்ரேலிய இராணுவ புலனாய்வு அதிகாரி டேனி ஷோஹாம் கூறியதாவது:-

இந்த வுகான் இன்ஸ்டிடியூட் சீனாவின் ரகசிய உயிரியல் ஆயுத திட்டத்துடன் தொடர்புடையது . . இந்த இன்ஸ்டிடியூட்ல் உள்ள சில ஆய்வகங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டின் அடிப்படையில், சீன உயிரியல் ஆயுத திட்டத்துடன் குறைந்தபட்சம் தொடர்புடையது. ஆனால் சீன உயிரியல் போரின் முக்கிய அங்கமாக இல்லை.

உயிரியல் ஆயுதங்களுக்கான பணிகள் இரட்டை உள்ளூர்-இராணுவ ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக நடத்தப்படுகின்றன, மேலும் இது நிச்சயமாக ரகசியமானது என கூறினார்.

ஷோஹாம் மருத்துவ நுண்ணுயிரியலில் முனைவர் பட்டம் பெற்றார். 1970 முதல் 1991 வரை அவர் மத்திய கிழக்கு மற்றும் உலகளவில் உயிரியல் மற்றும் வேதியியல் போருக்கான இஸ்ரேலிய இராணுவ உளவுத்துறையுடன் மூத்த ஆய்வாளராக இருந்தார், லெப்டினன்ட் கர்னல் பதவியிலும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்க

Related posts