நடிகை சினேகாவுக்கு பெண் குழந்தை பிறந்தது

நடிகை சினேகாவுக்கு சென்னை ஆஸ்பத்திரியில் பெண் குழந்தை பிறந்தது.

நடிகை சினேகாவும், நடிகர் பிரசன்னாவும் கடந்த 2012–ம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு கடந்த 2015–ம் ஆண்டு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு விஹான் என்று பெயர் சூட்டினார்கள்.

இந்தநிலையில் சினேகா மீண்டும் கர்ப்பம் ஆனார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு, சென்னை தியாகராயநகரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பிற்பகல் 2.50 மணிக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது.

தகவல் அறிந்ததும், பிரசன்னா ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்து மனைவியையும், குழந்தையையும் பார்த்து மகிழ்ந்தார். ஆஸ்பத்திரி ஊழியர்களுக்கு அவர் இனிப்பு வழங்கினார். சினேகாவும், அவருடைய குழந்தையும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

Related posts