நடிகை சினேகாவுக்கு பெண் குழந்தை பிறந்தது

நடிகை சினேகாவுக்கு சென்னை ஆஸ்பத்திரியில் பெண் குழந்தை பிறந்தது. நடிகை சினேகாவும், நடிகர் பிரசன்னாவும் கடந்த 2012–ம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு கடந்த 2015–ம் ஆண்டு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு விஹான் என்று பெயர் சூட்டினார்கள். இந்தநிலையில் சினேகா மீண்டும் கர்ப்பம் ஆனார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு, சென்னை தியாகராயநகரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பிற்பகல் 2.50 மணிக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. தகவல் அறிந்ததும், பிரசன்னா ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்து மனைவியையும், குழந்தையையும் பார்த்து மகிழ்ந்தார். ஆஸ்பத்திரி ஊழியர்களுக்கு அவர் இனிப்பு வழங்கினார். சினேகாவும், அவருடைய குழந்தையும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

நடிகைகளின் சம்பள பட்டியல் நயன்தாரா ரூ.5 கோடி, அனுஷ்கா ரூ.2 கோடி

நடிகைகளின் புதிய சம்பள பட்டியல் விவரம் இணையதளத்தில் பரவி வருகிறது. திரையுலகில் நடிகர்களை ஒப்பிடும்போது நடிகைகள் சம்பளம் குறைவாகவே உள்ளது. சமீப காலமாக கதாநாயகர்களுக்கு இணையாக கதாநாயகிகளை முன்னிலைப்படுத்தும் படங்களும் வசூல் குவிக்கின்றன. இதனால் நயன்தாரா, திரிஷா, தமன்னா, காஜல் அகர்வால், சமந்தா உள்ளிட்ட நடிகைகள் சம்பளத்தை உயர்த்தி இருப்பதாக கூறப்படுகிறது. புதிய சம்பள பட்டியல் விவரமும் இணையதளத்தில் பரவி வருகிறது. நயன்தாரா முன்னணி கதாநாயகர்களின் ஜோடியாகவும், தனக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதைகளில் தனித்தும் நடித்து தொடர்ந்து நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார். ரஜினிகாந்துடன் ஜோடி சேர்ந்த தர்பார் படம் பொங்கலுக்கு வந்தது. ஏற்கனவே ரூ.4 கோடி வரை வாங்கிய அவர் தற்போது சம்பளத்தை ரூ.5 கோடியாக உயர்த்தி இருப்பதாக தகவல். அனுஷ்கா இப்போது நிசப்தம் படத்தில் நடித்துள்ளார். இவர் ஒரு படத்துக்கு ரூ.2 கோடி வாங்குவதாக…

ஜெப் பெசோசின் அந்தரங்கம் வெளியாக காதலியே காரணம்

அமேசான் நிறுவனர் ஜெப் பெசோசின் அந்தரங்க செய்திகள் வெளியாக காதலியே மூல காரணம் என தெரியவந்து உள்ளது. அமேசான் உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்று. ஜெஃப் பெசோஸ் அமேசான் நிறுவனத்தை தொடங்குவதற்கு முன்பே, நாவலாசிரியரான மக்கின்சியை காதலித்து, திருமணம் செய்துகொண்டார். 1994-ல் அமேசான் நிறுவனத்தைத் தொடங்கினார். இவர்கள் இருவரின் திருமணம் 1993 செப்டம்பரில் நடந்தது. கடந்த சில ஆண்டுகளாகவே இருவரும் பிரிந்து வாழ்ந்துவந்த நிலையில் தங்களது விவாகரத்து முடிவை அறிவித்தனர். அமேசான் தலைமை நிர்வாக அதிகாரியின் தொலைபேசியை சவுதி அரசு அணுகியதாகவும், அவரது தனிப்பட்ட தகவல்கள் ஹேக் செய்யப்பட்டதாகவும் 2019 மார்ச் மாதம் பெசோஸின் பாதுகாப்புத் தலைவர் கூறியிருந்தார். அமேசான் நிறுவனர் ஜெப் பெசோசின் அந்தரங்க செய்திகளை வெளியிட்டது சவுதி அரேபியா என ஒரு பக்கம் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த செய்தியை…

கொரோனா வைரஸ்: சீனாவின் ரகசிய உயிரியல் ஆயுதத் திட்டத்துடன் தொடர்புடையதா?

கொடிய கொரோனா வைரஸ் தொற்றுநோய் சீனாவின் ரகசிய உயிரியல் ஆயுதத் திட்டத்துடன் தொடர்புடையது என இஸ்ரேலிய உயிரியல் போர் நிபுணர் தெரிவித்துள்ளார். சீனாவில் தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸ் காய்ச்சல் அந்நாட்டு மக்களிடையே அதிக அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது. முதலில் வுகான் நகரில் உள்ள ஒரு கடல் உணவு மற்றும் வனவிலங்கு சந்தையில் பாதிக்கப்பட்ட விலங்குகளிடம் இருந்துதான் இந்த வைரஸ் தோன்றியதாக தகவல்கள் கூறுகின்றன. இதேபோன்று ஜப்பான் மற்றும் தென்கொரியாவில் தலா ஒருவரும், தாய்லாந்து நாட்டில் 3 பேரும், அமெரிக்கா மற்றும் தைவான் நாடுகளில் தலா ஒருவரும் வைரஸ் பாதிப்பிற்கு ஆளாகினர். ஆஸ்திரேலியா மற்றும் பிரான்சிலும் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. சீனாவில் கொரோனா வைரசால் இதுவரை 26 பேர் பலியாகி இருந்தனர். இந்நிலையில், இன்று காலை வரை ஒரே நாளில் 15 பேர் மரணம்…

உயிர்த்த ஞாயிறு விசாரணை ஆணைக்குழுவில் பூஜித் ஜயசுந்தர

கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்குவதற்காக முன்னிலையாகியுள்ளார். தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அவர், இன்று (25) காலை 10 மணியளவில் சிறைச்சாலையிலிருந்து சிறைச்சாலை வேன் மூலம் BMICH இலுள்ள ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அழைத்து வரப்பட்டார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான பாராளுமன்ற தெரிவுக்குழுவில் பூஜித் ஜயசுந்தர வாக்குமூலம் வழங்கியபோதிலும், ஜனாதிபதி ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்கும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். உரிய தகவல்கள் கிடைக்கப்பெற்ற போதிலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்காததன் மூலம் உயிர் அழிவுகள் உள்ளிட்ட பல்வேறு சேதங்கள் இடம்பெற்றதாக, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெனாண்டோ மற்றும் கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் கைது செய்யப்பட்டு தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். கடந்த…

அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவராக எம்.ஏ. சுமந்திரன்

அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை நியமிப்பதற்கு பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு தீர்மானித்துள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நேற்று பிற்பகல் கூடிய தெரிவுக் குழுக் கூட்டத்தில் இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம், அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு, அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு, அரசாங்க நிதி பற்றிய குழு ஆகியவற்றுக்கான உறுப்பினர்களும் இங்கு பெயரிடப்பட்டுள்ளனர். அடுத்த மாதம் 05ஆம் திகதி இப்பெயர்கள் சபையில் அறிவிக்கப்படும். இந்தக் குழுக்களுக்கான தலைவர்களின் தெரிவு உறுப்பினர்களின் உறுதிப்படுத்தல்களுடன் மேற்கொள்ளப்படும்.