மோடி- டொனால் டிரம்ப்பை கடுமையாக விமர்சித்த பிரபல கோடீசுவரர்

பிரபல கோடீசுவரர் ஜார்ஜ் சொரெஸ் சுவிட்சர்லாந்து டாவோஸ் நகரில் நடைபெற்ற மாநாட்டில் பேசினார். அப்போது அவர் உலக, அரசியல் மற்றும் தொழில்நுட்ப சிக்கல்கள் குறித்து பேசினார்.

அவர் பேசும் போது இந்தியாவில் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட நரேந்திர மோடி ஒரு இந்து தேசியவாத அரசை உருவாக்க முயற்சிக்கிறார். தன்னாட்சி முஸ்லிம் பிராந்தியமான காஷ்மீர் மீது தண்டனை நடவடிக்கைகளை எடுத்து உள்ளார். கோடிகணக்கான முஸ்லிம்களின் குடியுரிமையை பறிக்க அச்சுறுத்துகிறார் என்று கூறினார்.

இதுபோல் அமெரிக்க ஜனாதிபதி டொனால் டிரம்ப்பையும் குற்றம் சுமத்தி பேசினார்.

ஜனாதிபதி டிரம்ப் உலகம் தன்னைச் சுற்ற வேண்டும் என்று விரும்பும் இறுதி நாசீசவாதி. ஜனாதிபதியாகும் அவரது கற்பனை உண்மையாகிவிட்டபோது, அவரது நாசீசம் ஒரு நோயியல் பரிமாணத்தை உருவாக்கியது. உண்மையில், அவர் அரசியலமைப்பினால் ஜனாதிபதி பதவிக்கு விதிக்கப்பட்ட வரம்புகளை மீறியுள்ளார், அதற்காக அவர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது என கூறினார்.

Related posts