முஸ்லிம் என்ற ஒரே காரணத்துக்காக விசா மறுப்பு..!

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவன தலைவர் சரத்பவார் மும்பையில் நடந்த அக்கட்சியின் சிறுபான்மையினர் பிரிவு கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.

கிரிக்கெட் துறையில் பணிபுரிந்த போது, நான் ஒரு கூட்டத்திற்காக பாகிஸ்தானுக்கு சென்றிருந்தேன். அப்போது இந்தியாவில் ஒரே ஒரு உறவினரையாவது கொண்ட மக்கள் பலரை அங்கு சந்தித்தேன். அவர்கள் இந்தியா வந்து தங்கள் உறவினர்களை சந்திக்க விரும்புகிறார்கள். ஆனால் முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக அவர்களுக்கு இந்திய விசா மறுக்கப்படுகிறது.

குடியுரிமை சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு போன்ற மத்திய அரசின் சில முடிவுகள் சமூகத்தின் ஒரு பிரிவுக்கு பாதுகாப்பின்மையை உருவாக்கியுள்ளன.

இன்றைய அரசு சமூகங்களை பிளவுபடுத்துகிறது. இது நாட்டின் ஒற்றுமைக்கு அச்சுறுத்தலாக அமைகிறது. இதுபோன்ற சித்தாந்தவாதிகளை அதிகாரத்திலிருந்து எவ்வாறு விலக்கி வைக்க வேண்டும் என்பதை பற்றி நாம் சிந்திக்க வேண்டும்.

பாரதீய ஜனதாவை அதிகாரத்தில் இருந்து ஒதுக்கி வைக்க சிவசேனாவுடன் கூட்டணி வைக்கலாம் என சிறுபான்மையினர் சார்பாகவும் எங்களுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்படி சிவசேனாவுடன் கூட்டணி சேர்ந்ததை அவர்கள் வரவேற்றார்கள். இவ்வாறு சரத்பவார் பேசினார்.

கூட்டத்தில் துணை முதல்-மந்திரி அஜித்பவார் மற்றும் மந்திரிகள் ஜெயந்த் பாட்டீல், நவாப் மாலிக் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Related posts