மம்மியின் குரல் கண்டுபிடிப்பு ஆய்வாளர்கள் சாதனை

எகிப்தில் உள்ள தீப்ஸ் என்ற இடத்தில் இருந்த கனார்க் கோவிலில் பூசாரி நேஸியாமன் என்பவரின் மம்மியை ஆய்வாளர்கள் சோதனை செய்து வந்தனர்.

இந்த மம்மி 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. கிமு 11 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆட்சி செய்த 11வது பாரோ ரமேசஸ் ஆட்சியின் கீழ் நேஸியாமன் வாழ்ந்தார். தற்போது லீட்ஸ் சிட்டி மியூசியத்தில் உள்ள நேஸியாமன் மம்மி பல ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இது 1824 ஆம் ஆண்டில் அவிழ்க்கப்பட்டது. அவர் இறக்கும் போது தனது 50 வயதில் இருந்தார் என்று அடுத்தடுத்த ஆய்வுகள் வெளிப்படுத்தின.

நேஸியாமன் மரணம் துரதிர்ஷ்டவசமாக இருந்திருக்கலாம். ஆனால், அதன் பிறகு அவர் அதிர்ஷ்டசாலி. 1941ல் லீட்ஸ் மீது குண்டுவெடிப்புத் தாக்குதலுக்கு சற்று முன்னர் அவரது மம்மி அங்கிருந்து அகற்றப்பட்டது. அந்த குண்டு வெடிப்பில் அருங்காட்சியகமும், அங்கிருந்த பல கலைப்பொருட்களும் அழிந்து போயின.

இந்த மம்மியை சிடி ஸ்கேன் செய்த ஆய்வாளர்கள், அவரின் குரல்வளையை 3டி பிரிண்டிங் முறையில் உருவாக்கினர். பின்னர் அதன் மூலம் மெல்லின வார்த்தைகளான ஆ மற்றும் ஏ என்ற உயிரெழுத்துக்களை உச்சரித்துப் பார்த்தனர்.

தற்போதைக்கு குரல் சோதனை வெற்றியடைந்திருந்தாலும் எதிர்காலத்தில் நேஸியாமனின் குரல் மற்றும் வார்த்தைகள் எப்படி இருந்திருக்கும் என்பது கண்டுபிடிக்க முடியும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Related posts