உன்னதத்தின் ஆறுதல்! வாரம் 20. 04

உன்னதத்தின் ஆறுதல்! வாரம் 20. 04
பயமற்ற வாழ்வு – என்னிடத்திலே வா.
சகோதரன். பிரான்ஸ்சீஸ் அந்தோனிப்பிள்ளை.
ரெகொபோத் ஊழியங்கள் டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம்.

அவர் ஸ்திhPயை நோக்கி, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, சமாதானத்தோடே போ என்றார். லூக்கா 7:50
தேவன்பேரில் வைக்கும் விசுவாசத்தால் எப்படி ஆறுதலை, ஆசீர்வாதத்தத்தை கண்டடைவது பற்றி இன்று உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.
வேதம் சொல்கிறது, எல்லாரும் பாவஞ்செய்து, தேவமகிமையற்றவர்களாகி என்று ரோமர் 3:23. அப்படிப்பட்ட மக்களை தேவன், இலவசமாய் அவருடைய கிருபை யினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு (மரணத்தின்மூலம்) நீதிமான் களாக்குகிறார். அதாவது தேவன் பேரில் வைக்கும் விசுவாசத்தால் நித்திய ஜீவனை சுதந்தரித்துக்கொள்ள உதவுகிறார்;.
தேவனைத்தேடி அவர்பேரில் விசுவாசம் வைத்தல் என்பது, தண்ணீரில் அமிழ்ந்து போகும் ஒரு மனிதன், உயிர்காக்கும் மனிதர்களைக் கண்டு, அவர்கள் மூலம் தனது உயிரைக்காத்துக் கொள்வது போன்றது. (இதை ஆங்கிலத்தில் லைவ் சேவிங் சென்ரறை அடைதல் என அழைப்பர்). இந்த உண்மையை விளங்கிக்கொள்ள பின்வரும் வேதப்பகுதியை தியானத்தோடு வாசிப்போம்.
பரிசேயரில் ஒருவன் தன்னுடனே போஜனம் பண்ணவேண்டுமென்று அவரை (இயேசுவை) வேண்டிக்கொண்டான். அவர் அந்தப் பரிசேயனுடைய வீட்டில் பிரவேசித்துப் பந்தியிருந்தார். அப்பொழுது அந்த ஊரிலிருந்த பாவியாகிய ஒருஸ்திhP அவர் பரிசேயன் வீட்டிலே பந்தியிருக்கிறதை அறிந்து, ஒரு பரணியில் பரிமளதைலம் கொண்டு வந்து, அவருடைய பாதங்களின் அருகே பின்னாக நின்று அழுதுகொண்டு, அவருடைய பாதங்களைத் தன் கண்ணீரினால் நனைத்து, தன் தலைமயிரினால் துடைத்து, அவருடைய பாதங்களை முத்தஞ்செய்து, பரிமளதைலத்தைப் ப10சினாள். அவரை (இயேசுவை) அழைத்த பரிசேயன் அதைக் கண்டபோது, இவர் தீர்க்கதரிசி யாயிருந்தால் தம்மைத் தொடுகிற ஸ்திhP (பெண்) இன்னாளென்றும் எப்படிப் பட்டவளென்றும் அறிந்திருப்பார், இவள் பாவியாயிருக்கிறாளே என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டான்.
இயேசு அவனைநோக்கி, சீமோனே, உனக்கு நான் ஒருகாரியம் சொல்ல வேண்டும் என்றார். அதற்கு அவன், போதகரே, சொல்லும் என்றான். அப்பொழுது அவர், ஒருவனிடத்தில் இரண்டுபேர் கடன்பட்டிருந்தார்கள், ஒருவன் ஐந்நு}று வெள்ளிக்காசும் மற்றவன் ஐம்பது வெள்ளிக்காசும் கொடுக்க வேண்டியதாயிருந்தது. கொடுக்க அவர்களுக்கு நிர்வாகமில்லாதபோது, இருவருக்கும் கடனை மன்னித்து விட்டான். இப்படியிருக்க, அவர்களில் எவன் அவனிடத்தில் அதிக அன்பாயிருப்பான்? அதைச் சொல் என்றார்.
சீமோன் பிரதியுத்தரமாக, எவனுக்கு அதிகமாய் மன்னித்துவிட்டானோ அவனே அதிக அன்பாயிருப்பான் என்று நினைக்கிறேன் என்றான். அதற்கு அவர், சரியாய் நிதானித்தாய் என்று சொல்லி, ஸ்திhPயினிடமாய்த் திரும்பி, சீமோனை நோக்கி, இந்த ஸ்திhPயைப் பார்க்கிறாயே, நான் உன் வீட்டில் பிரவேசித்தேன், நீ என் கால்களுக்குத் தண்ணீர் தரவில்லை, இவளோ, கண்ணீரினால் என் கால்களை நனைத்து, தன் தலைமயிரினால் அவைகளைத் துடைத்தாள்.
நீ என்னை முத்தஞ்செய்யவில்லை, இவளோ, நான் உட்பிரவேசித்தது முதல், என் பாதங்களை ஓயாமல் முத்தஞ்செய்தாள். நீ என் தலையில் எண்ணெய் ப10சவில்லை, இவளோ, என் பாதங்களில் பரிமளதைலம் ப10சினாள். ஆதலால் நான் உனக்குச் சொல்லுகிறேன், இவள் செய்த அநேக பாவங்கள் மன்னிக்கப்பட்டது. இவள் மிகவும் அன்பு கூர்ந்தாளே. எவனுக்குக் கொஞ்சம் மன்னிக்கப்படுகிறதோ, அவன் கொஞ்ச மாய் அன்புகூருவான் என்று சொல்லி, அவளை நோக்கி, உன் பாவங்கள் மன்னிக்கப் பட்டது என்றார்.
அப்பொழுது கூடப்பந்தியிருந்தவர்கள், பாவங்களை மன்னிக்கிற இவன் யார்? என்று தங்களுக்குள்ளே சொல்லிக்கொண்டார்கள். அவர் ஸ்திhPயை நோக்கி, உன்விசுவாசம் உன்னை இரட்சித்தது, சமாதானத்தோடேபோ என்றார். லூக்கா 7:36-50.
இன்று நீங்களும் நானும் தினசரி பத்திரிகையிலும், தொலைக்காட்சியிலும் அறிந்த விடையம், ஆப்கானிஸ்தானில், ஆபிரிக்காவில், இந்தியாவில், அரபுநாடுகளில் தவறு செய்த பெண்ணை கொன்ற செய்தியாகும். மேலே நாம்வாசித்த வேதப்பகுதியில் குறிப்பிடும் அந்தப்பெண்ணும் தவறுசெய்து சமுதாயத்தால் தள்ளப்பட்ட, ஒதுக்கப்பட்ட, மரணத்தைக் காத்திருக்கும் ஒரு பெண் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்தப்பெண், இயேசு பாவத்தை மன்னித்து மக்களுக்கு விடுதலை தரவந்த தெய்வம் என அறிந்திருந்தாள். அதனால் அவர் தனது பாவத்தை, தவறை மன்னித்து தனக்கு விடுதலை தருவார் என்ற விசுவாசத்துடன் கூடிய நம்பிக்கையோடே இயேசுவிடத்தில் சென்றாள். இயேசு அவளின் செயலைப் பார்க்கிறார். அவள் அவரின் பாதத்தடியில் அழுதுகொண்டு, தனது கண்ணீரினால் அவரின் பாதங்களை நனைத்து, பாதங்களை முத்தம்செய்து, அவரின் பாதங்களுக்கு பரிமளதைலம் பூசினாள்.
அவளின் செய்கையை அங்கு அவருடன்கூட இருந்தவர்கள் பார்க்கிறார்கள் ஒருவருடன் ஒருவர் முறுமுறுக்கிறார்கள். சமுதாயத்தில் தள்ளிவிடப்பட்ட இந்தப்பெண் சர்வவல்ல தேவனுக்கருகிலிருந்து, அவரைத் தொடுகிறாளே, இவள் எப்படிப்பட்டவள் என்று தெரியாமல் இயேசு இருக்கிறாரே என தங்களுக்குள் பேசிக்கொள்கிறார்கள்.
அவர்களின் இருதயத்தின் நினைவுகளை அறிந்த இயேசு அவiனை நோக்கி, சீமோனே, உனக்கு நான் ஒருகாரியம் சொல்லவேண்டும் என்றார். அதற்கு அவன், போதகரே, சொல்லும் என்றான். அப்பொழுது அவர், ஒருவனிடத்தில் இரண்டுபேர் கடன்பட்டிருந்தார்கள், ஒருவன் ஐந்நு}று வெள்ளிக்காசும் மற்றவன் ஐம்பது வெள்ளிக்காசும் கொடுக்க வேண்டியதாயிருந்தது கொடுக்க அவர்களுக்கு நிர்வாக மில்லாதபோது, இருவருக்கும் கடனை மன்னித்துவிட்டான். இப்படியிருக்க, அவர்களில் எவன் அவனிடத்தில் அதிக அன்பாயிருப்பான்? அதைச் சொல்என்றார். சீமோன் பிரதியுத்தரமாக, எவனுக்கு அதிகமாய் மன்னித்துவிட்டானோ அவனே அதிக அன்பாயி ருப்பான் என்று நினைக்கிறேன் என்றான்.
அன்பான அலைகள் வாசகநேயர்களே, ஒருசில வேளை இந்தப் பெண்ணைப்போல சமுதாயத்தில் தள்ளிவிடப்பட்ட ஒருவராக, கடன் சுமையினால் வாழ்வே அமைதி இழந்த நிலையில் வாழ்பவராக, நோயின் கொடுமையினால் அமைதியை இழந்து மரணம் எப்போதுவரும் என்ற அங்கலாப்புடன் வாழ்பவராக, பாவவாழ்க்கையின் கொடுரத்தினை அனுபவிப்பவராக, குடும்பவாழ்வில் அமைதியை இழந்து நடைப்பிணம் போல் எனது வாழ்வு உள்ளது என வேதனையுடன் வாழ்பவராக இருந்தால், இன்று தேவன் தரும் ஆறுதலின் செய்தி, என்னிடத்திலே வா உனக்கு ஆறுதல் உண்டென்பதாகும்.
அதே ஆண்டவர் இன்றும் பாவங்களை மன்னித்து, நோய்ககை; குணமாக்கியும், தம்மைத் தேடிவந்த மக்களை புறம்பே தள்ளாமலும், அவர்களை அணைத்து ஆறுதலைக் கொடுக்கிறார். இன்றே உனது உள்ளத்தில் ஓர் நல்ல தீர்மானம் எடுத்து, உன்னை தேவனிடம் விட்டுக்கொடு.
இதை வாசிக்கிற இந்த 10 நிமிடமும் ஆண்டவரே நான், எனது வாழ்வில் இருக்கும் சகல வேதனைகளில் இருந்தும் ஆறுதலைக்காண விரும்புகிறேன் என்று ஓர் நல்ல தீர்மானத்தை எடு. அந்த தீர்மானத்தை தேவனை நோக்கி அறிக்கை பண்ணு. நீ எடுத்த இந்த தீர்மானத்தின்படி தேவன் உன்னை ஆறுதற்படுத்தி, ஆசீர்வதிப்பார்.
அன்பின் பரலோக பிதாவே, உமக்கு கோடி நன்றி அப்பா. இன்று உம்மில் விசுவாசம் வைப்பதனால்வரும் ஆறுதலையும், இரட்சிப்பின் சந்தோசத்தையும் குறித்து அறிந்து கொள்ளக்கூடிய வேளையை எனக்குத் தந்ததற்காக உமக்கு நன்றி அப்பா. நானும் உம்மேல் விசுவாசம் வைத்து, உம்மிடத்தில் இருந்து ஆறுதலையும், இரட்சிப்பையும் கண்டடைந்து, உமக்குள் ஆறுதலடைந்து வாழ உதவி செய்யும்ப8டியாக இயேவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல தகப்பனே, ஆமேன்.

கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.

Related posts