ராமர் பாலம் தொடர்பாக மத்திய அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க..!

ராமர் பாலத்தை பழங்கால வரலாற்று சின்னமாக அறிவிப்பது தொடர்பான நிலைப்பாட்டை தெரிவிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியா-இலங்கை இடையே மணல் திட்டுகளால் ஆன பாலம் போன்ற அமைப்பு அமைந்துள்ளது. இது இந்தியாவிலிருந்து இலங்கைக்குச் செல்ல ராமரால் கட்டப்பட்டதாக ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பகுதியில் சேது சமுத்திரம் கால்வாய் அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் இது இந்து மதத்தின் அடையாளம் என்பதால் பண்டையகால வரலாற்றுச் சின்னமாக அறிவிக்கவேண்டும் என பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை இன்று விசாரணைக்கு வந்த போது, இந்த விவகாரத்தை மூன்று மாதங்களுக்கு பிறகு எழுப்பும்படி நீதிபதிகள் குறிப்பிட்டனர். மேலும் இது தொடர்பாக மத்திய அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related posts