ரூபாய் நோட்டில் லட்சுமி படம் இருந்தால் பொருளாதாரம் மேம்படும்

ரூபாய் நோட்டுகளில் கடவுள் லட்சுமியின் படம் அச்சிடப்பட்டால் இந்தியப் பொருளாதாரம் மேம்படும் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை (14.01.2020) அன்று மத்தியப் பிரதேச மாநிலம் கந்த்வா மாவட்டத்தில் சுவாமி விவேகானந்தர் குறித்த நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் பாஜக மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி கலந்து கொண்டு உரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார். அப்போது இந்தோனேசிய பணத்தில் விநாயகர் படம் அச்சிடப்பட்டிருப்பது குறித்த கேள்விக்குப் பதிலளித்த சுப்பிரமணியன் சுவாமி, "இந்தக் கேள்விக்கு பிரதமர் மோடிதான் பதிலளிக்க வேண்டும். நான் இதை ஆதரிக்கிறேன். விநாயகர் தடைகளை நீக்குபவர். இந்திய ரூபாய் நோட்டுகளில் கடவுள் லட்சுமியின் படம் அச்சிடப்பட்டால் இந்தியப் பொருளாதாரம் மேம்படலாம். இதைப் பற்றி யாரும் மோசமாக உணரக்கூடாது. குடியுரிமைத் திருத்தச் சட்டத்தில் ஆட்சேபகரமாக எதுவும் இல்லை.…

ஒரு படத்தின் தோல்வியால் நடிகனுக்கு பாதிப்பில்லை சூர்யா

செல்வராகவன் இயக்கத்தில் உருவான 'என்.ஜி.கே' தோல்விக் குறித்த கேள்விக்குப் பதிலளித்துள்ளார் நடிகர் சூர்யா செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'என்.ஜி.கே'. ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரிப்பில் உருவான இந்தப் படம் மே 31-ம் தேதி வெளியானது. விமர்சன ரீதியாகக் கலவையாக இருந்தாலும், வசூல் ரீதியில் தோல்வியைத் தழுவியது. இந்தப் படம் தொடர்பான விமர்சனங்கள் மற்றும் கருத்துகளுக்கு சூர்யா தனது ட்விட்டர் பதிவில் "என்.ஜி.கே திரைப்படம் குறித்த அத்தனை கருத்துகளையும் தலைவணங்கி ஏற்கிறேன். மாறுபட்ட கதையம்சத்தையும் நடிகர்களின் வித்தியாசமான நடிப்பையும் நுட்பமாகக் கவனித்துப் பாராட்டிய அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் நன்றி. இத்திரைப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி #கத்துக்கறேன்தலைவரே" என்று தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து தனது அடுத்த படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினார் சூர்யா. இந்நிலையில், நேற்று…

கலை மீது தீராத மோகம் கொண்ட கலைஞர் ஸ்ரீசங்கர்

ஸ்ரீசங்கர் யாழ்ப்பாணம் பருத்தித்துறையைச் சேர்ந்த ஒரு நடிகர். இவர் அந்தனி ஜீவாவின் முள்ளில் ரோஜா, பறவைகள், அக்கினிப்பூக்கள் ஆகிய நாடகங்களில் நடித்ததுடன் கலைஞர் கலைச்செல்வனின் கொள்ளைக்காரன், ஒரு மனிதன் ஒரு உலகம் போன்ற நாடகங்களிலும் மஞ்சள் குங்குமம், குத்துவிளக்கு ஆகிய திரைப்படங்களிலும் நடித்திருக்கின்றார். இவர் சிவாஜி கணேசனின் ராஜராஜ சோழன் படத்தில் ஈழத்துப் புலவராகவும் நடித்தார். "கொள்ளைக்காரன்", "ஒரு மனிதன் இரு உலகம்" முதலான பல நாடகங்களை மேடையேற்றினார். இலங்கையின் தமிழ்த் திரைப்படத்துறைக்கும் நாடகத்துறைக்கும் பாரிய பங்களிப்புகளை செய்த ஸ்ரீசங்கர் . தேயிலை ஏற்றுமதி செய்யும் நிறுவனமொன்றில் தேயிலை பரிசோதகராக பணியாற்றியவர். கலைத்துறையின் மீது இவர் கொண்ட தீராத பித்தத்தினால் அப்போதே மாதாந்தம் ஆயிரம் ரூபாய் சம்பளத்தை அள்ளித் தந்த தொழிலையையும் தன்னிடம் இருந்த நிதியையும் அர்ப்பணித்தவர். இவரது நினைவு நாள் நிகழ்வை கடந்த 40ஆண்டுகளாக இடைவிடாது…

நுவரெலிய சீதாதேவி கோயிலை புதுப்பிக்க இந்தியா ரூ.5 கோடி நிதி

நுவரெலியாவில் உள்ள சீதையம்மன் கோயிலை புதுப்பிக்க இந்தியா அரசு ரூ.5கோடி நிதியை வழங்கவுள்ளது. இந்த கோயில் புனரமைப்புப் பணியை உடனடியாக தொடக்க வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தி உள்ளது . இந்திய மத்திய பிரதேச கலாசார துறை அமைச்சர் சர்மா தலைமையிலான குழுவினர் அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தனர். இவர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்து பேசினர். இந்த சந்திப்பில், சீதை சிறைப்பிடித்து இலங்கையில் அவர் தங்க வைக்கப்பட்டிருந்த நுவரெலியா பகுதியில் சீதா கோயில் உள்ளது. இந்த கோயிலை மேம்படுத்த மத்திய பிரதேச அரசின் பட்ஜெட்டில் ரூ. 5கோடி ஒதுக்கியுள்ளோம். எனவே இதற்கான பணிகளை தொடக்குங்கள் என்றும் அமைச்சர் குழுவினர் கேட்டு கொண்டனர். இது தொடர்பாக மத்திய பிரதேச, மாநில பா.ஜ.க தலைவரும் பாராளுமன்ற உறுப்பினரிமான ராகேஷ் சிங் கூறுகையில்: அறிவிப்புகளை வெளியிடுவதில் முதல்வர் கமல்நாத் திறமையானவர்.…

பஸ்களில் பாடல் இசைக்க தடை; மீறினால் 1955க்கு அறிவிக்கவும்

தனியார் பஸ்களில் பயணிகள் அசௌகரியத்திற்கு உள்ளாகும் வகையில் அதிக சத்தத்துடன் பாடல்கள் மற்றும் காணொளிகளை ஒலி, ஒளிபரப்புவதற்கான தடை நேற்று முன்தினம் முதல் அமுலுக்கு வந்துள்ளது.இதனை மீறி செயற்பட்டால் கடுமையான நடைவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ள பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தேவையேற்படின் பஸ்களில் பாடல் ஒலி,ஒளிபரப்பு செய்வதை முற்றாக தடைசெய்வதற்கு சட்டம் உருவாக்குவதாகவும் குறிப்பிட்டார். தனியார் பஸ்களில் அதிக சத்தத்துடன் பாடல்கள் ஒலிபரப்பப்படும் பட்சத்தில் அது குறித்து முறைப்பாடுகளை 1955என்ற தொலைபேசி மூலம் அறிவிக்க முடியும் என பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது. பொதுமக்களின் முறைப்பாடுகளுக்கு அமைய பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சின் பணிப்பிற்கமைய பஸ்களில் பாடல் ஒலி, ஒளிபரப்பப்படுகிறதா என ஆராய்வதற்காக அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்று முன்தினம் பஸ் நிலையங்களுக்கு…

நிலையான அபிவிருத்தியின் கீழ் சிறுபான்மை மக்களுக்கு தீர்வு

சிறுபான்மை மக்களினுடைய அடிப்படைத் தேவைகளை இலகு தீர்வின் ஊடாக தீர்ப்பதற்கு மக்கள் ஆட்சியினை எதிர்வரும் காலங்களை உருவாக்கவேண்டும். அது காலத்தில் கட்டாயம் என சிறிய நடுத்தர தொழில் துறை, கைத்தொழில் மற்றும் வளங்கள் முகாமைத்துவ அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார். யாழ் கைதடியில் அமைந்துள்ள பனை அபிவிருத்தி ஆராய்ச்சி நிலையத்தின் தற்போதைய அபிவிருத்தி திட்டங்களை அவதானிக்கும் நோக்கில் நேற்று (17) அமைச்சர் களவிஐயத்தினை மேற்கொண்டார். இதன் போது அதன் உற்பத்திப்பொருட்கள், சந்தைப்படுத்தல் முறைகள், வேலைவாய்ப்புகள், உணவு உற்பத்தியின் தராதரம், பங்கீடுத்தன்மை, பொருளாதார முதலீடுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளன. அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர், பெரும்பான்மை தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப் படுத்தும் நிலையில் அவர்களுக்கு தமிழ் மக்கள் சார்பாக எந்த அபிவிருத்திகளையும், அபிலாசைகளையும் பெற்றுக் கொடுக்க முடியாத நிலையில் இருப்பதாக அவர் தெரிவித்தார்.…