நடிகர் ரஜினிகாந்த் மீது போலீசில் புகார்

பெரியாரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியதாக நடிகர் ரஜினிகாந்த் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

பெரியாரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியதாக நடிகர் ரஜினிகாந்துக்கு எதிராக கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் திராவிடர் விடுதலை கழகம் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டு உள்ளது.

திராவிடர் விடுதலை கழக மாநகர தலைவர் நேருதாஸ், கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒரு மனு அளித்துள்ளார். அதில், துக்ளக் விழாவில் ரஜினிகாந்த் பேசுகையில் பெரியாரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு பொய்யான தகவலை வெளியிட்டதாகவும், இதற்காக அவர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த நேருதாஸ், ரஜினி மீது நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் தர்பார் படம் திரையிடப்பட்டு இருக்கும் திரையரங்குகளின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என கூறினார்.

Related posts