எஸ்.ஜே.சூர்யா காதலை நிராகரித்த நடிகை

எஸ்.ஜே.சூர்யாவின் காதலை நடிகை பிரியா பவானி சங்கர் நிராகரித்ததாக தகவல் பரவி வருகிறது.

தமிழ் பட உலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் எஸ்.ஜே.சூர்யா. இவரது இயக்கத்தில் வந்த வாலி, குஷி படங்கள் பெரிய வெற்றி பெற்றன. நியூ, அன்பே ஆருயிரே, இசை உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்து இயக்கினார். தற்போது பொம்மை என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

இதில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். இவர் மேயாத மான் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். கார்த்தியின் கடைக்குட்டி சிங்கம் படத்திலும் நடித்துள்ளார். எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக மான்ஸ்டர் படத்தில் நடித்தார். தற்போது மீண்டும் பொம்மை படத்தில் அவருடன் ஜோடி சேர்ந்துள்ளார்.

பொம்மை படத்தை ராதாமோகன் இயக்கி வருகிறார். சமீபத்தில் படத்தின் முதல் தோற்ற போஸ்டரை டுவிட்டரில் படக்குழுவினர் வெளியிட்டனர். அந்த போஸ்டரில் பிரியா பவானி சங்கர் படத்தின் கீழே கொஞ்சம் சிம்ரன் கொஞ்சம் திரிஷா போன்று தெரிகிறது இல்லையா என்று எஸ்.ஜே.சூர்யா பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் பொம்மை படப்பிடிப்பில் பிரியா பவானி சங்கர் மீது எஸ்.ஜே.சூர்யா காதல் வயப்பட்டு தனது காதலை அவரிடம் சொன்னதாகவும், அவரது காதலை ஏற்க பிரியா பவானி சங்கர் மறுத்து விட்டதாகவும் தகவல் பரவி வருகிறது. வயது வித்தியாசத்தை காரணமாக சொல்லி காதலை பிரியா பவானி சங்கர் நிராகரித்ததாக கூறப்படுகிறது.

Related posts