இன்னல்கள் நீங்கி வாழ்வில் ஒளி பிறக்க வேண்டும்

புரையாடிபோயுள்ள தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள், சமத்துவமும் மற்றும் நீதி ஆகியவற்றை கண்டடைய மலர்ந்துள்ள தைத் திருநாளில் வழி ஏற்படட்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தை திருநாளை முன்னிட்டு கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தமிழ் மக்களின் பூர்விக நிலங்கள் அதிக விளைச்சலையும், செழிப்பையும் தந்து தமிழர்கள் தன்னிறைவுள்ள சமூகமாக மீண்டெழ இறைவனை பிரார்த்திப்பதாகவும் சம்பந்தன் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் உழவர் திருநாளாம் தை திருநாளில் தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள இன்னல்கள் நீங்கி அவர்களின் வாழ்வில் ஒளி பிறக்க வேண்டும் எனவும் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

Related posts