இலங்கை தேங்காய் இறக்குமதிக்கு மத்திய அரசு தடை ?

இலங்கையில் இருந்து அதிகஅளவு தேங்காய் இறக்குமதியாகும் நிலையில் உள்நாட்டு உற்பத்தியாளர்களை காப்பாற்றும் பொருட்டு கிலோ 150 ரூபாய்க்கும் குறைவான தேங்காய் இறக்குமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

நடப்பு சீசனில் இலங்கை உள்ளிட்ட நாடுகளில் அதிகஅளவு தேங்காய் உற்பத்தியாகியுள்ளது. இதனால் அந்த நாடுகளில் தேங்காய் விலை சரிவடைந்துள்ளது. இதனால் விலை குறைந்த உலர் தேங்காய் அதிகஅளவில் இந்தியாவில் இறக்குமதியாகி வருகிறது.

2018- 2019-ம் ஆண்டில் இலங்கையில் இருந்து 4,340 டன்கள் அளவுக்கு உலர் தேங்காய் இறக்குமதியாகியுள்ளது. முந்தைய ஆண்டில் 314 டன்கள் அளவுக்கு உலர் தேங்காய் இறக்குமதியாகியுள்ளது.

இந்தியாவில் தற்போது உலர் தேங்காய் கிலோ ரூ.150 என்ற அளவில் விற்பனையாகி வருகிறது. வெளிநாடுகளில் குறிப்பாக இலங்கையில் இருந்து அதிகஅளவில் விலை குறைவாக உலர் தேங்காய் இறக்குமதியாகி வருவதால் உள்நாட்டு உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதையடுத்து இலங்கையில் இருந்து அதிகஅளவு தேங்காய் இறக்குமதியாகும் நிலையில் உள்நாட்டு உற்பத்தியாளர்களை காப்பாற்றும் பொருட்டு கிலோ 150 ரூபாய்க்கும் குறைவான உலர் தேங்காய் இறக்குமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

Related posts