வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூர்யா

நடிகர் சூர்யா நடித்துள்ள ‘சூரரைப்போற்று’ என்ற படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தின் ‘ரிலீஸ்’ தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சூர்யாவின் அடுத்த படத்தை இயக்குவது யார்? என்பது குறித்த பட்டியலில் வெற்றிமாறன் உள்பட பலர் இருந்தனர். தற்போது சூர்யாவின் 40-வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சூர்யாவின் 40-வது படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்குவதாகவும், இந்த படத்தை எஸ்.தாணு தயாரிக்க இருப்பதையும் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

எஸ்.தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் சமீபத்தில் தனுஷ் நடித்த ‘அசுரன்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதை அடுத்து தற்போது தாணு-வெற்றிமாறன் கூட்டணி மீண்டும் இணைந்துள்ளனர் என்பதும் இந்த கூட்டணியில் சூர்யா தற்போது இணைந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts