தனுஷ் தயாரிப்பில் மீண்டும் புதிய படத்தில் ரஜினி?

ரஜினிகாந்த் தர்பார் படத்தை முடித்து விட்டு சிவா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். பல வருடங்களுக்கு முன்பு அவருடன் ஜோடி சேர்ந்து நடித்த குஷ்புவும் மீனாவும் இந்த படத்தில் இணைந்துள்ளனர்.

கீர்த்தி சுரேசையும் ஒப்பந்தம் செய்துள்ளனர். ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் திரைப்பட நகரில் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது.

இந்த படத்தோடு நடிப்புக்கு முழுக்கு போட்டு விட்டு அரசியலுக்கு வந்து விடுவார் என்று எதிர்பார்த்த நிலையில் மீண்டும் புதிய படமொன்றில் நடிக்க தயாராவதாக தகவல் வெளியாகி உள்ளது. ரஜினியின் 169-வது படமாக தயாராகும் இந்த படத்தை நடிகர் தனுஷ் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே ரஜினி நடித்து கடந்த வருடம் ஜூன் மாதம் திரைக்கு வந்த காலா படத்தையும் தனுஷ் தயாரித்து இருந்தார். புதிய படத்தின் இயக்குனர் உள்ளிட்ட மற்ற விவரங்கள் விரைவில் தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சட்டமன்ற தேர்தலே தனது இலக்கு என்று ரஜினி ஏற்கனவே தெளிவுபடுத்தி உள்ளார்.

இதனால் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அவரது ரசிகர்கள் போட்டியிடவும் இல்லை. எந்த கட்சிக்கும் ஆதரவு தெரிவிக்கவும் இல்லை. அதுபோல் உள்ளாட்சி தேர்தலிலும் ரசிகர்கள் போட்டியிடக் கூடாது என்று அறிவித்து உள்ளார். சட்டமன்ற தேர்தல் 2021 மே மாதம்தான் வருகிறது. எனவே அதற்கு முன்பாக இன்னொரு படத்தில் நடிக்கும் முடிவில் ரஜினி இருப்பதாக கூறப்படுகிறது.

Related posts