லண்டன் போலீசில் சிக்கிய ஸ்ரேயா!

விஜய் நடித்த ‘மதுர,’ விஜயகாந்த் நடித்த ‘அரசாங்கம்,’ திரிஷா நடித்த ‘மோகினி’ ஆகிய படங்களை டைரக்டு செய்தவர், ஆர்.மாதேஷ். அடுத்து இவர், ‘சண்டக்காரி’ என்ற படத்தை டைரக்டு செய்கிறார். ‘சண்டக்காரி’ படத்தில் விமல்-ஸ்ரேயா காதல் ஜோடியாக நடிக்கிறார்கள். படத்தை பற்றி டைரக்டர் ஆர்.மாதேஷ் கூறியதாவது:- “இந்த படத்தில், ஸ்ரேயா ஒரு சாப்ட்வேர் கம்பெனியின் உயர் அதிகாரியாகவும், விமல் என்ஜினீயராகவும் நடித்து வருகிறார்கள். படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்றது. முக்கிய காட்சிகள் லண்டன் விமான நிலையத்தில் படமாக்கப்பட்டன. விமல், ஸ்ரேயா, சத்யன் ஆகிய மூன்று பேர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமானது. அப்போது பாதுகாப்பு மிகுந்த குடியுரிமை பகுதியை ஸ்ரேயா தாண்டி போனார். உடனே அங்கிருந்த துப்பாக்கி ஏந்திய போலீசார் ஸ்ரேயாவை சூழ்ந்து கொண்டார்கள். “எப்படி உரிய ஆவணங்கள் இல்லாமல் குடியுரிமை பகுதியை தாண்டி வந்தீர்கள்?” என்று கேள்வி மேல் கேள்வி…

‘வலிமை’ படத்தில் அஜித் ஜோடி யாமி கவுதம்?

நேர்கொண்ட பார்வை படத்துக்கு பிறகு அஜித்குமார் ‘வலிமை’ படத்தில் நடிக்க தயாராகிறார். இந்த படத்தை வினோத் இயக்குகிறார். போனிகபூர் தயாரிக்கிறார். ‘வலிமை’ அதிரடி சண்டை படமாக தயாராகிறது. இதில் அஜித்குமார் போலீஸ் அதிகாரி உள்பட இரு வேடங்களில் நடிப்பதாக கூறப்படுகிறது. போலீஸ் அதிகாரி வேடத்துக்காக தனது தோற்றத்தை இளமையாக மாற்றி இருக்கிறார். மோட்டார் சைக்கிள் பந்தயம் மற்றும் கார்பந்தய காட்சிகள் இடம்பெறுகின்றன. கதாநாயகியாக நடிக்க நயன்தாரா, திரிஷா, தமன்னா, நஸ்ரியா ஆகியோர் பெயர்கள் அடிபட்டன. இந்த நிலையில் தற்போது யாமி கவுதமிடம் பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. யாமி கவுதம் தமிழில் ஜெய்யுடன் தமிழ் செல்வனும் தனியார் அஞ்சலும் மற்றும் கவுரவம் படங்களில் நடித்து இருக்கிறார். இந்தி, தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். வலிமை படப்பிடிப்பு வருகிற 13-ந்தேதி ஐதராபாத்தில் தொடங்குகிறது. இதற்காக அங்குள்ள ராமோஜிராவ்…

ஒரு கோடி ரூபாய் மான நஷ்ட ஈடு கேட்டு சிம்பு மனு

அவதூறு பரப்பியதாக தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் மீது ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்ட வழக்கில் நடிகர் சிம்பு மீண்டும் ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்ய அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் சிம்பு நடித்து 2016-ல் வெளியான படம் அன்பானவன், அடங்காதவன், அசராதவன். இந்த படத்தில் நடிக்க சிம்புக்கு ரூ. 8 கோடி சம்பளம் பேசப்பட்டு, ரூ.1.51 கோடி முன்பணமாக வழங்கப்பட்டது. இதில் சம்பள பாக்கி ரூ.6.48 கோடியை பெற்றுத்தரக் கோரி நடிகர் சிம்பு, நடிகர் சங்கத்தில் புகார் மனு அளித்திருந்தார். அதேசமயம், படத்தால் தனக்கு ஏற்பட்ட இழப்பை சிம்புவிடம் வசூலித்து தரக் கோரி தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன், தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்திருந்தார். இந்நிலையில், இணையதளங்களில் தனக்கு எதிராக தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் அவதூறு கருத்துக்களை பதிவிட்டதாக கூறி, மைக்கேல் ராயப்பனுக்கு எதிராக…

வங்கக் கடலில் தூக்கி எறியுங்கள்: வைகோ ஆவேசம்

மக்கள் ஆட்சிக் கோட்பாடுகளுக்கு எதிரான, வெறுப்பு ஊட்டுகின்ற, அதிர்ச்சி அளிக்கின்ற, முறையற்ற, மன்னிக்க முடியாத, நேர்மை அற்ற, குடியுரிமைச் சட்டத் திருத்த முன்வரைவு, இன்று நிறைவேற்றப்படுமானால், அது இந்த அவையின் வரலாற்றில் ஒரு கருப்பு நாள் ஆகி விடும் என வைகோ மாநிலங்களவையில் ஆவேசமாக பேசினார். குடியுரிமைத் திருத்தச் சட்ட முன்வரைவின் மீதான விவாதத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று 11.12.2019 ஆற்றிய உரை:“யமுனா நதிக்கரையில் எரிக்கப்பட்ட உலக உத்தமர் காந்தி அடிகளின் எலும்புத் துகள்கள் இன்று இந்த மசோதாவை, நாடாளுமன்றத்தில் கொண்டு வருவதை அறிந்து நடுங்கி இருக்கும். மக்கள் ஆட்சிக் கோட்பாடுகளுக்கு எதிரான, வெறுப்பு ஊட்டுகின்ற, அதிர்ச்சி அளிக்கின்ற, முறையற்ற, மன்னிக்க முடியாத, நேர்மை அற்ற, குடி உரிமைச் சட்டத் திருத்த முன்வரைவு, இன்று இந்த மாநிலங்கள் அவையில் நிறைவேற்றப்படுமானால், அது இந்த அவையின் வரலாற்றில்…

இலங்கையர்களுக்கு ஒருபோதும் இந்திய குடியுரிமை வழங்கப்பட மாட்டாது

இலங்கையில் இருந்து இடம்பெயர்ந்து இந்தியாவில் வாழும் இலங்கையர்களுக்கு ஒருபோதும் இந்திய குடியுரிமை வழங்கப்பட மாட்டாது என இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது. 30 வருடங்களுக்கும் மேலாக இந்தியாவில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு நிரந்தரக் குடியுரிமை வழங்கப்படுமா? என விழுப்புரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் இந்திய பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பதிலளித்த இந்திய மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் நித்தியானந்த ராய் இலங்கையர்களுக்கு ஒருபோதும் இந்திய குடியுரிமை வழங்கப்படமாட்டாது என திட்டவட்டமாக கூறியுள்ளார். 1955 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்திய குடியுரிமை சட்டத்திற்கமைய குடியுரிமை விதிகள் 2009 இன்படி இந்திய குடியுரிமை வழங்கப்பட்டுவருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த சட்டப்பிரிவின் 5 மற்றும் 6 ஆம் விதிகளின் படி, அயல்நாட்டவர் குடியுரிமைப் பெற முடியும் என தெரிவித்துள்ள அவர், சட்டவிரோதமாக குடிபெயர்ந்தவர்கள் இந்த இரு விதிகளின் கீழ்,…

மனித வாழ்வை பறித்தெடுக்க எந்தவொரு சக்திக்கும் இடமளிக்க முடியாது

மனித வாழ்வை பறித்தெடுக்க அல்லது மனித வாழ்வை மிதித்து செயற்பட எந்தவொரு சக்திக்கும் இடமளிக்க முடியாது என பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். வருடாந்தம் இராணுவத்தினர் நடத்தும் நத்தார் கெரோல் கீத நிகழ்வு நேற்று மாலை நெலும் பொக்குன கலையரங்கில் நடைப்பெற்றது. இங்கு உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார். நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர் சகல இன மக்களுக்கும் கௌரவமிக்க வாழ்வை கொண்டு நடத்தக்கூடிய சூழலை ஏற்படுத்தியமைக்காக முப்படையினருக்கு நன்றி தெரிவிப்பதாக தெரிவித்தார். மனித வாழ்வை பாதுகாப்பதற்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றுவதாகவும், பிழை செய்யபவர்களிலும் நல்லவர்களை பாதுகாப்பது அவசியம் எனவும் அவர் கூறினார். உயிரை அர்ப்பணித்து ஏனைய உயர்களை பாதுகாப்பது என்பது ஒரு போராட்டம் என தெரிவித்த அவர் அவ்வாறான அர்பணிப்பை செய்பவர்களுக்கு நன்றி தெரிவிப்பது அவசியம் எனவும் தெரிவித்துள்ளார். அனைவருக்கும் சுயகௌரவத்துடன் வாழக்கூடிய…