ஜனாதிபதி தேர்தல் தோல்விக்கான காரணத்தை கண்டறிந்த ரணில்

பௌத்த மக்களினதும், இளைஞர்களினதும் மற்றும் மத்திய வர்க்கத்தினரினதும் வாக்குகள் கிடைக்காமையே ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைய பிரதான காரணம் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஆய்வுகளில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் இளைஞர் முன்னணி உறுப்பினர்களை இன்று (09) சிறிகொத்தாவில் சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் எதிர்நோக்கிய சரிவை எண்ணி குறைமதிப்பிற்கு உட்படுவது உகந்ததல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே அடுத்த பாராளுமன்ற தேர்தலை இலக்கு வைத்து ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் ஜனாநாயக விரும்பிகள் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் 113 ஆசனங்களை வெற்றிக்கொள்ளவதற்காக பணியாற்ற வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிடைத்துள்ள தேர்தல் முடிவுகளுக்கமைய அனைவருக்கும் 105 அல்லது 106 பிரதிநிதிதுவம் கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பல்வேறு ஆய்வுகள் ஐக்கிய தேசியக் கட்சி பின்னடைவை சந்தித்துள்ளதாக தெரிவித்திருந்ததாகவும் எனவே அவை தொடர்பில் பகுப்பாய்வு செய்வது சிறந்தது எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் பௌத்த மக்களினது விருப்பம், இளைஞர்களினதும் மற்றும் மத்திய வர்க்கத்தினரினதும் வாக்குகள் தொடர்பில் கவனம் எடுக்க வேண்டியது அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முதலாவதாக பௌத்த பிக்குகளுடன் கலந்துரையாடல்களை நடத்துவது அவசியம் எனவும் மற்றையவர்கள் இளைஞர் யுவதிகளின் பெரும்பான்மையான வாக்குகளை பெற்றுகொள்வதற்கு பணியாற்ற வேண்டியது முக்கியம் அவர் எனவும் தெரிவித்தார்.

பாராளுமன்ற நடவடிக்கைகளை சஜித் பிரேமதாசவிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவித்த ரணில் விக்ரமசிங்க கட்சியில் உள்ள இளைஞர் அமைப்புக்களிடத்தில் பல திட்டங்கள் உள்ளதாகவும் கூறினார்.

கட்சியின் இரண்டாம் நிலை தலைமைத்துவத்தை முன்கொண்டு வந்து அதனூடாக எதிர்வரும் தேர்தலை சந்திக்க வேண்டும் என கூறிய அவர் கட்சியில் காணப்படும் குறைப்பாடுகளில் இருந்து பாடம் கற்று கொள்ள வேண்டுமே தவிர மற்றவர்களுடன் வாதம் புரிவதில் பலனில்லை எனவும் தெரிவித்துள்ளர்.

Related posts