பிரிகேடியர் பிரியங்கவுக்கு அபராதம் விதித்து தீர்ப்பு

ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி 'கழுத்து அறுப்பது போன்ற' சைகை காட்டியமை தொடர்பில் லண்டன், வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்த வழக்கில் பிரிகேடியர் பிரியங்க பெனாண்டோ குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, அந்நாட்டின் பொது ஒழுங்குகள் சட்டத்தின் 4 A பிரிவின் கீழ் அவர் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளார். அதற்கமைய அவருக்கு 2,400 ஸ்ரேலிங் பவுண் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி 04 ஆம் திகதி லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்தில் இலங்கையின் சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த நிலையில், அதற்கு எதிரில் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறி கோரி ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது. இவ்வார்ப்பாட்டத்தின் போது ஆர்ப்பாட்டகார்களை நோக்கி 'கழுத்து அறுப்பது போன்ற" சைகை காட்டி அச்சுறுத்தியதாக பிரிகேடியர் பிரியங்க பெனாண்டோவுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டு வழக்கு தாக்கல்…

கர்தினால் ரஞ்சித் ஆண்டகை ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை

பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். 2 ஆவது நாளாக சாட்சியம் வழங்குவதற்காக அவர் ஆணைக்குழுவில் முன்னிலையில் முன்னிலையாகியுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு அறிக்கை வெளியிடுவதற்கும் மற்றும் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காகவும் இந்த ஐவர் அடங்கிய ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

35 வருடங்களுக்கு பின் Mrs.World மகுடம் இலங்கைக்கு

2020 ஆம் ஆண்டிற்கான திருமணமான பெண்களுக்கான உலக அழகிப் போட்டியில் (Mrs.World) இலங்கையை சேர்ந்த கரோலின் ஜூரி மகுடத்தை வென்றுள்ளார். 35 வருடங்களுக்கு பிறகு இலங்கை பெண் ஒருவர் இந்த மகுடத்தை வென்றுள்ளார் அமெரிக்காவின் லொஸ்வேகாஸில் இடம்பெற்ற இறுதிப் போட்டியின் போதே அவர் மகுடத்தை வென்றுள்ளார். இதற்கு முன்னர் இந்த விருதை 1984 ஆம் ஆண்டு ரோஸி சேனாநாயக்க வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது