யோகி பாபு – சந்தானம் இணைந்து நடிக்கிறார்கள்

சந்தானம் கதாநாயகனாக நடிக்க, அவருடன் முதல்முறையாக யோகி பாபு இணைந்து நடிக்கிறார். இந்த படத்துக்கு, `டகால்டி’ என்று தமாசாக பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.

சந்தானம் ஜோடியாக பிரபல வங்காள பட நாயகி ரித்திகா சென் நடிக்கிறார். தெலுங்கு பட உலகின் பிரபல நடிகர் பிரம்மானந்தம், ராதாரவி, மனோபாலா, நமோநாராயணன், ஸ்டண்ட் சில்வா, சந்தானபாரதி, பிரபல இந்தி நடிகர் தருண் அரோரா ஆகியோரும் நடிக்கிறார்கள்.

டைரக்டர் ஷங்கரிடம் பல படங்களில் அசோசியேட் டைரக்டராக பணிபுரிந்த விஜய் ஆனந்த் கதை-திரைக்கதை-வசனம் எழுதி டைரக்டராக அறிமுகம் ஆகிறார். குழந்தைகள் நல மருத்துவரும், வினியோகஸ்தருமான எஸ்.பி.சவுத்ரி தயாரிக்கிறார். சென்னை, திருக்கழுக்குன்றம், திருச்செந்தூர், கடப்பா, மும்பை, புனே, ஜெய்ப்பூர் ஆகிய இடங்களில் படம் வளர்ந்து இருக்கிறது. இம்மாதம், படம் திரைக்கு வர இருக்கிறது.

Related posts