கடமைகளை நிறைவேற்றிக் கொள்ள வாய்ப்பளிக்க வேண்டும்

இன்று பதவிப் பிரமாணம் செய்துக் கொண்ட இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களுக்கு அவர்களின் கடமைகளை நிறைவேற்றிக் கொள்ள வாய்ப்பளிக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அமைச்சர்களிடம் கோரியுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்ற இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சுப் பதவிகளுக்கான பதவிப் பிரமாண நிகழ்வின் பின்னர் ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த போது,

இந்த பதவிகள் சிறப்புரிமை அல்ல, பொறுப்பாகும்.

பொதுமக்கள் மிகுந்த எதிர்ப்பார்ப்புடனே எமதுக்கு பாரிய மக்கள் ஆணையை பெற்றுக் கொடுத்துள்ளனர்.

அதனை மனதில் வைத்து செயற்பட வேண்டும்.

இராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கையை குறைக்க எண்ணம் இருந்தாலும் எமது தேர்தல் விஞ்ஞாபனத்தை பொறுத்த வரையில் பாரிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்க வேண்டியிருப்பதால் தான் இந்த அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்யவே விசேடமாக இந்த இராஜாங்க அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

இவற்றை நிறைவேற்ற அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும்.

இந்த இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களுக்கு தமது கடமைகளை உரிய முறையில் நிறைவேற்ற வாய்ப்பளிக்குமாறு அமைச்சர்களுக்கு கோரிக்கை விடுக்கிறேன்.

பொதுத்துறையை ஊக்குவித்து பொதுமக்களுக்கு சேவையாற்ற தேவையான புதிய யுகத்தை உருவாக்க அனைவரும் செயற்பட வேண்டும் என கூறிய ஜனாதிபதி இன்று பதவிப்பிரமாணம் செய்துக் கொண்ட இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

Related posts