உன்னதத்தின் ஆறுதல்! வாரம் 19. 45

உனக்கு அடைக்கலமும் பெலனுமாகிய தேவன்.
சகோதரன். பிரான்சீஸ் அந்தோனிப்பிள்ளை.
ரெகொபோத் ஊழியங்கள் – டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம்.

தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனும், ஆபத்துக் காலத்தில் அநுகூலமான துணையுமானவர். ஆகையால் ப10மி நிலைமாறினாலும், மலைகள் நடுச்சமுத்திரத்தில் சாய்ந்து போனாலும், அதின் ஜலங்கள் கொந்தளித்துப் பொங்கி, அதின் பெருக் கினால் பர்வதங்கள் அதிர்ந்தாலும், நாம் பயப்படோம். (சேலா.) ஒரு நதியுண்டு, அதின் நீர்க்கால்கள் தேவனுடைய நகரத்தையும், உன்னதமானவர் வாசம்பண்ணும் பரிசுத்த ஸ்தலத்தையும் சந்தோஷிப்பிக்கும்.

தேவன் அதின் நடுவில் இருக்கிறார், அது அசையாது, அதிகாலையிலே தேவன் அதற்குச் சகாயம் பண்ணுவார். ஜாதிகள் கொந்தளித்தது, ராஜ்யங்கள் தத்தளித்தது, அவர் தமது சத்தத்தை முழங்கப்பண்ணினார், ப10மி உருகிப்போயிற்று. சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார், யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கல மானவர். (சேலா.) ப10மியிலே பாழ்க்கடிப்புகளை நடப்பிக்கிற கர்த்தருடைய செய்கைகளை வந்து பாருங்கள். அவர் ப10மியின் கடைமுனைமட்டும் யுத்தங்களை ஓயப்பண்ணுகிறார், வில்லை ஒடித்து, ஈட்டியை முறிக்கிறார், இரதங்களை நெருப்பினால் சுட்டெரிக்கிறார். நீங்கள் அமர்ந்திருந்து, நானே தேவனென்று அறிந்து கொள்ளுங்கள், ஜாதிகளுக் குள்ளே உயர்ந்திருப்பேன், ப10மியிலே உயர்ந்திருப்பேன். சேனைகளின் கர்த்தர் நம்மோடிருக்கிறார், யாக்கோபின் தேவன் நமக்கு உயர்ந்த அடைக்கலமானவர். (சேலா.) சங்கீதம் 46.

கர்த்தரை நம்புகிறோம் என்று சொல்லுகிறோம். எவ்வளவு தூரம் நம்புகிறோம் என்பது ஒரு நெருக்கம் அல்லது ஒரு ஆபத்து வரும்போதுதான் தெரியும். தேவனை நம்பும்போது ஆபத்து நேரிடாது என்பது அல்ல. ஆபத்து வந்தாலும், நாம் தேவனை நம்பி அவரோடு இருந்தால், அவரும் நம்மோடு இருப்பார் என்பதுதான் அவரைக் குறித்து நமக்கிருக்கும் நம்பிக்கை.

இந்த மாபெரும் உண்மையை விளங்கிக்கொள்ள தானியேலின் புஸ்த்தகம் 3ம் அதிகாரம் முழுவதையும் வாசித்துப் பார்க்கவும். இப்போதும் எக்காளம், நாகசுரம், கின்னரம், வீணை, சுரமண்டலம், தம்புரு முதலான சகலவித கீதவாத்தியங்களின் சத்தத்தையும் நீங்கள் கேட்கும்போது, தாழவிழுந்து, நான் பண்ணிவைத்த சிலையைப் பணிந்து கொள்ள ஆயத்தமாயிருந்தால் நல்லது, பணிந்து கொள்ளாதிருந்தீர் களேயாகில், அந்நேரமே எரிகிற அக்கினிச்சூளையின் நடுவிலே போடப்படுவீர்கள்.

உங்களை என் கைக்குத் தப்புவிக்கப்போகிற தேவன் யார் என்றான்.
சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள் ராஜாவை நோக்கி, நேபுகாத் நேச்சாரே, இந்தக் காரியத்தைக் குறித்து உமக்கு உத்தரவு சொல்ல எங்களுக்கு அவசியமில்லை. நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார். அவர் எரிகிறஅக்கினிச் சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார். விடுவிக்காமற் போனாலும், நாங்கள் உம்முடைய தேவர்களுக்கு ஆராதனை செய்வதுமில்லை, நீர் நிறுத்தின பொற்சிலையைப் பணிந்து கொள்வது மில்லை என்கிறது ராஜாவாகிய உமக்குத் தெரிந்திருக்கக்கடவது என்றார்கள்.

இந்த நம்பிக்கை அன்று தானியேலுக்கு இருந்தது. அமுலாக்கப்பட்ட புதிய கட்டளைக்கு மாறாகவே தான் நடப்பது தெரிந்திருந்தும் தானியேல் தன்னை ஒளித்துக் கொள்ளவில்லை. அவர் தான் தினமும் தேவனுக்கு செய்தகாரியங்களை எல்லாம் தொடர்ந்து செய்து வந்தார். ஜெபித்தால் சிங்கங்களின் கெபிக்குள் போடப்படும் என்ற கட்டளை வந்தும் அவர் பயப்படவில்லை. இராஜாவிடம் இருந்தோ, ஏனைய மனுசரிடம் இருந்தோ அவர் தயவை நாடவில்லை.

மரணபயமுறுத்தல் வந்த வேளையிலும்கூட தானியேல் கலங்கவில்லை. தொடர்ந்து தேவனை ஸ்தோத்தரித்தார். தேவன் அவரை சகல இக்கட்டுக்களிலும் இருந்து விடுவித்தார்.

இன்று நாம் வாசித்த சங்கீதத்தில் உள்ள காட்சியைப் பாருங்கள். பூமி நிலைமாறியது. சமுத்திரங்கள் கொந்தளித்து, பர்வதங்கள் அதிர்ந்தது, ஜனங்கள் கொந்தளித்து இராட்சியங்கள் தத்தளித்தது. இத்தனை அனர்த்தங்களினால் தாக்கப்பட்ட ஓர் சமூகம் எப்படி இருக்கும்?; ஆனால் இதை எழுதிய சங்கீதக்காரனின் வார்த்தைகளே எவ்வளவு உறுதியாக வெளிப்படுகிறது.

பயப்படோம், சந்தோசிப்பிக்கும், தேவன் நடுவில் இருக்கிறார். இந்த வார்த்தை களுக்குக் காரணம் அவர் தனது நம்பிக்கையை தேவனில் வைத்ததுதான். எமது கவனம் எங்கே உண்டு என்பதுதான், நாம் எமது துன்பத்துக்குள் அமிழ்ந்து போகிறோமா அல்லது, தேவனுக்குள் உறுதி கொள்கிறோமா என்பதைக் தீர்மானிக்கும். துன்பத்தால் வாடும் அநேக மக்கள் தமது கவனத்தை அத்துன்பத்தின் மேலும், அதனால் வாடும் தம்மிலும் வைப்பதுண்டு. இது ஆரோக்கியமற்றது.

அதே நேரம் எமது கவனத்தை தேவனிலும், அவரது செய்கைகளிலும், அவரின் அன்பிலும் செலுத்தும்போது நாம் தேவனைப்பற்றி அறிந்து கொள்ளும் அறிவானது எமது சொந்தப் பிரட்சனைகளை வெற்றி கொள்ளவும், மேற்கொள்ளவும் உதவும். தேவனில் மையங்கொண்டு எமது பிரட்சனைகளை எதிர்நோக்கும்போது, எமது முன்னேற்றத்திற்காக அதனுள் அடங்கியுள்ள சர்ந்தப்பங்களும், அவற்றைப் பயன் படுத்தும் முறைகளும் எமக்குத்தெரியும்.

செம்மறி ஆடுகளைக் கவனித்திருக்கிறீர்களா? அவைகள் தமது தலையை நிலத்தை நோக்கிச்காய்த்தபடியே செல்லும். அவைகளுக்கு தூரத்தில் உள்ள பசுமைகள் தெரியாது. ஆனால் வெள்ளாடுகள் தலையை நீட்டி நிமிர்த்தி தூரத்தில் உள்ள பசுமையையும், அவற்றை எப்படி அடைவது என்பதையும் கண்டறிந்து கொள்ளும்.

நாம் பிரட்சனைகளுக்கு தலையைச் சாய்த்துத் திரிபவர்களா அல்லது, தேவனில் மையங்கொண்டு தூரநோக்கைக் காணவர்களா? எடுத்த நல்ல தீர்மானத்தோடு இந்த ஜெபத்தை தேவனிடம் ஒப்புக்கொடு.

அன்பின் தேவனே, இன்று எனக்கு அடைக்கலமான ஓர் தேவன் ஒன்று உண்டு என்பதை அலைகள் பாத்திரிகையூடாக கற்றுக்கொள்ள உதவியதற்காக உமக்கு நன்றி அப்பா. எனது துன்பதுயர வேளைகளில் நான் உம்மீது என் கவனத்தை வைத்து, என் பிரட்சனையை கண்டுபிடித்து நீர் காட்டும் தூரநோக்கிலே அவற்றை அணுகும்படி உதவி செய்யும். சகலவித துன்பங்கள் துயரங்களில் இருந்து என்னையும் எனது குடும்பத்தையும் காத்து நடத்தி ஆண்டுகொள்ளும் படியாக உமது கரத்தில் தருகிறேன் நல்ல பிதாவே, ஆமென்.

கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.

Related posts