தர்பார் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு

ரஜினிகாந்தின் "தர்பார்" படத்தின் மோஷன் போஸ்டர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் மலையாளம் ஆகிய 4 மொழிகளில் வெளியாகியுள்ளது. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் இந்த படம் பொங்கல் விருந்தாக திரைக்கு வர இருக்கிறது. இன்று மாலை 5.30 மணியளவில் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்படப்பட்டது. படத்தின் தீம் மியூஸிக்கும் வெளியாகியுள்ளது. இந்த போஸ்டரை தமிழிலில் கமல்ஹாசனும், தெலுங்கில் மகேஷ் பாபுவும் பாலிவுட்டில் சல்மான்கானும், மலையாளத்தில் மோகன்லாலும் வெளியிட்டனர்.

4 மொழிகளில் ரஜினியின் ‘தர்பார்’

பேட்ட’ படத்துக்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘தர்பார்’ படப்பிடிப்பு முடிந்து கிராபிக்ஸ், இசை கோர்ப்பு உள்ளிட்ட தொழில்நுட்ப பணிகள் நடக்கின்றன. நயன்தாரா, பிரகாஷ்ராஜ், நிவேதா தாமஸ், பிரதீக் பாபர், தலிப் தாஹில், யோகிபாபு, மனோபாலா, சுமன், ஹரிஷ் உத்தமன், ஆனந்தராஜ், ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தர்பார் படத்தில் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக வருகிறார். தாதாக்களுக்கும் போலீசுக்கும் நடக்கும் மோதலே கதை. இதன் பெரும்பகுதி படப்பிடிப்பு வடமாநிலங்களில் நடந்துள்ளது. படப்பிடிப்பு காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தின. தர்பார் படத்தை பொங்கல் பண்டிகையில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய 4 மொழிகளில் இந்த படம் வெளியாகிறது. இதற்கான டப்பிங் பணிகள் நடக்கின்றன. அந்தந்த மொழிகளில் உள்ள முன்னணி நடிகர்கள் இன்று மாலை ரஜினியின்…

கமல் பிறந்தநாள் புகைப்படத்தில் பூஜா குமார் ?

பரமக்குடியில் நீண்ட நாட்களுக்கு பின் கமலின் குடும்ப உறவுகள் ஒரே இடத்தில் சந்தித்தனர். அதே சமயம் இவர்களின் குடும்ப உறுப்பினர்களின் புகைப்படத்தில் பூஜா குமார் இருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இன்று தனது 65-வது பிறந்த நாளைக் கொண்டாடும் கமல்ஹாசன் தனது நண்பர்கள் மற்றும் ரசிகர்களிடமிருந்து அன்பான வாழ்த்துக்களைப் பெற்று வருகிறார். கமல் தனது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடினார். கமல் தனது 65- வது பிறந்தநாளை குடும்பத்தினருடன் சொந்த ஊரான ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் கொண்டாடினர். அதன் ஒருபகுதியாக, பரமக்குடி அருகே தெளிச்சாத்தநல்லூரில் நடைபெற்ற சிலை திறப்பு விழாவில் பங்கேற்ற கமல், சகோதரர் சாருஹாசனுடன் சேர்ந்து தந்தை சீனிவாசனின் சிலையை திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து மக்கள் நீதி மய்யம் கட்சிக்கொடியை ஏற்றி வைத்துப் பேசிய கமல், சொந்தமண்ணில் குடும்பத்தினருடன் சேர்ந்து தந்தையின் சிலையை திறந்து வைத்தது…

தமிழகத்தில் ஆளுமையான தலைமைக்கு வெற்றிடம் இருக்கிறது-ரஜினி

தமிழகத்தில் ஆளுமையான தலைமைக்கு வெற்றிடம் உள்ளது என்று ரஜினிகாந்த் பேட்டி அளிக்கையில் தெரிவித்தார். நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசியது போல தனக்கு பாஜக சாயம் பூச முயற்சி நடப்பதாக கூறினார். நடிகர் ரஜினிகாந்த்தின் பேட்டி சமூக வலைத்தளங்களிலும் ஊடகங்களிலும் பெரும் பேசுபொருளாக மாறிப்போனது. இதையடுத்து, சிறிது நேரத்தில் மீண்டும் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த ரஜினிகாந்த் கூறியதாவது:- நான் எப்போதும் வெளிப்படையாக பேசி வருகிறேன். நான் கட்சி தொடங்கும் வரை சினிமாவில் நடிப்பேன். தமிழகத்தில் ஆளுமையான தலைமைக்கு வெற்றிடம் இருக்கிறது. திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசியதை ஊடகங்கள் பெரிதாக்கிவிட்டன. சிலர் பாஜக சாயம் பூச நினைக்கிறார்கள். அரசியலில் இது சகஜம். அயோத்தி வழக்கில் தீர்ப்பு எப்படி வந்தாலும் மக்கள் அமைதி காக்க வேண்டும். எம்.ஜி.ஆர் கூட கட்சி…

வடக்கு, கிழக்கில் இன்றும் நாளையும் சஜித் சூறாவளி பிரசாரம்

புதிய ஜன­நா­யக முன்­ன­ணியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தாச இன்றும் நாளையும் வடக்கு கிழக்கு மாகா­ணங்­களில் சூறா­வளி பிர­சா­ர­த்தில் ஈடு­ப­ட­வுள்ளார். இன்று வட பகு­திக்கு விஜயம் செய்யும் அவர், நாளைய தினம் கிழக்கில் பல பகு­தி­க­ளிலும் பிர­சா­ரக்­கூட்­டங்­களை நடத்­த­வுள்ளார். இன்று காலை மன்­னாரில் இடம்­பெறும் பிர­சா­ரக்­கூட்­டத்தில் பங்­கேற்கும் சஜித் பிரே­ம­தாச அத­னை­ய­டுத்து கிளி­நொச்சி, யாழ்ப்­பாணம் ஆகிய இடங்­களில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்ள கூட்­டங்­க­ளிலும் கலந்­து­கொண்டு உரை­யாற்­ற­வுள்ளார். நாளை சனிக்­கி­ழமை அம்­பாறை மாவட்­டத்­திற்கு சஜித் பிரே­ம­தாச விஜயம் செய்­ய­வுள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் கட்­சி­யினால் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்ள அட்­டா­ளைச்­சேனை, கல்­முனை மற்றும் பொத்­துவில் ஆகிய பிர­தே­சங்­களில் இடம்­பெ­ற­வுள்ள தேர்தல் பிர­சாரக் கூட்­டங்­களில் சஜித் பிரே­ம­தாச கலந்து கொள்­ள­வுள்ளார். வடக்கு கிழக்கில் இடம்­பெறும் பிர­சா­ர­கூட்­டங்­களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் கட்­சியின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்­கிரஸ்…

தேர்தல் பிரசாரத்துக்கு அதிகம் செலவிட்டவர் யார்?

ஜனாதிபதித் தேர்தலில் பிரதான கட்சிகளின் மூன்று வேட்பாளர்களின் பிரச்சார செலவினங்கள் தொடர்பிலான தகவல்களை தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் (CMEV) உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட தேர்தல் கண்காணிப்பு நிலையமான தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையம் கொழும்பில் கடந்த 05ஆம் திகதியன்று ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து இந்த விடயத்தை வரலாற்றில் முதல் தடவையாக வெளியிட்டது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, புதிய ஜனநாயக முன்னணி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளினால் கடந்த ஒக்டோபர் மாதம் 14ஆம் திபதி முதல் 31ஆம் திகதி வரையான செலவினங்களை அந்த நிலையம் வெளியிட்டது. குறித்த காலப் பகுதியில் மாத்திரம் மூன்று பிரதான கட்சிகளும் சுமார் 962 மில்லியன் ரூபா செலவிட்டுள்ளதாக அந்த நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன்படி, கோட்டாபய ராஜபக்ஷ போட்டியிடும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன…

இரு பிரதான கட்சி வேட்பாளர்களின் கருத்துடன் நான் உடன்படவில்லை

21 ஆம் நூற்றாண்டில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட பாரிய நீர்ப்பாசன புரட்சியாக கருதப்படும் மொரகஹகந்த நீர்த்தேக்கத்துடன் இணைந்ததாக நிர்மாணிக்கப்பட்ட மற்றுமொரு பாரிய நீர்த்தேக்கமான களுகங்கை நீர்த்தேக்கத்தில் சேமிக்கப்பட்ட நீரினை சுபவேளையில் திறந்துவிடும் மங்கள நீரோட்டம் மற்றும் புதிய அம்பன நகரத்தை மக்களிடம் கையளித்தல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நேற்று (07) முற்பகல் இடம்பெற்றது. மாத்தளை மாவட்டத்தின் தும்பர பள்ளத்தாக்கில் நக்கில்ஸ் மலைத் தொடரின் களுபஹன பிரதேசத்தில் ஊற்றெடுக்கும் களுகங்கையை இடைமறித்து லக்கல, பல்லேகம பிரதேசத்தில் களுகங்கை நீர்த்தேக்கம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இதன் மொத்தக் கொள்ளளவு 248 மில்லியன் கனமீற்றர்களாகும். அதாவது 200,880 ஏக்கர் அடிகளாகும். களுகங்கை பள்ளத்தாக்கு பிரதேசத்தில் மீளக் குடியேற்றப்படும் 3,000 குடும்பங்களுக்கு களுகங்கை நீர்த்தேக்கத்திலிருந்து நீர் வழங்கப்படுவதுடன், பழைய ஹத்தொட்ட கால்வாயினால் நீரைக் கொண்டு சென்று அபிவிருத்தி செய்யப்பட்ட சுமார் 2,000 ஏக்கர் அளவிலான காணியில்…

14 வயது சிறுமியை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய சிறிய தந்தை உட்பட இருவர் கைது

மட்டக்களப்பு, ஆயித்தியமலை பிரதேசத்தில் 14 வயது சிறுமியை விபச்சார நடவடிக்கையில் ஈடுபடுத்திய மற்றும் பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் சிறுமியின் சிறிய தந்தை மற்றும் தரகர் உட்பட இருவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற பதில் நீதவான் நேற்று (07) உத்தரவிட்டார். ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிலுள்ள கற்பானைக் குளப்பகுதியில் தரம் 8 ம் ஆண்டில் கல்வி கற்றுவரும் 14 வயது சிறுமி ஒருவரை விபச்சார நடவடிக்கையில் ஈடுபடுத்தி வருவதாக மட்டக்களப்பு மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து கடந்த 6 ஆம் திகதி இரவு மாவட்ட புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.எஸ். எஸ். சமந்த தலைமையிலான புலனாய்வு பிரிவினர் குறித்த தரகரை கையடக்க தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு சூட்சுமமாக பேசி அவரை கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து குறித்த…