முகமூடி அணிந்து புகைப்படம் வெளியிட்ட பிரியங்கா

டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசுவினால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். வாகன போக்குவரத்து முடங்கி உள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டு உள்ளது.

தொழிற்சாலை பணிகளை நிறுத்தி உள்ளனர். முகமூடிகள் அணிந்தே வெளியில் நடமாடுகின்றனர். காற்று மாசுவை குறைக்கும் நடவடிக்கையில் அரசு எந்திரம் முடுக்கி விடப்பட்டு உள்ளது.

டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசு குறித்து பிரபல இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா கவலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், “காற்று மாசு சூழ்நிலையில் இங்கு எப்படி வாழமுடியும். காற்று சுத்திகரிப்பும் முகமூடியும் நமக்கு தேவையாக இருக்கிறது. வீடு இல்லாதவர்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள். எல்லோரும் பாதுகாப்பாக இருங்கள்” என்று கூறியிருந்தார்.

அதோடு முகமூடி அணிந்த புகைப்படத்தையும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருந்தார். அதை பார்த்த பலரும், “புகைப்பிடிக்கும் உங்களுக்கு வாய்க்கு முகமூடி போட்டது சரியான செயல்தான். காற்று மாசு குறித்து இரட்டை வேடம் போட வேண்டாம். காற்று மாசு பற்றி பேசுவதற்கு முன்னால் புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிடுங்கள்” என்றெல்லாம் அவரை வலைத்தளத்தில் விமர்சித்து வருகிறார்கள்.

சமீபத்தில் பிரியங்கா சோப்ரா புகைப்பிடித்தபடி குடும்பத்தின ருடன் தனது பிறந்த நாளை கொண்டாடிய புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts