சினிமாவில் நான் செய்த பெரிய தவறு – நயன்தாரா

தமிழ் பட உலகில் நம்பர்-1 நடிகையாக இருக்கிறார் நயன்தாரா. தெலுங்கு, மலையாள படங்களிலும் நடிக்கிறார். ஒரு படத்துக்கு ரூ.4 கோடி வாங்குகிறார்.

ரேடியோ ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தான் செய்த பெரிய தவறை வெளிப்படுத்தி இருக்கிறார். அவர் கூறியதாவது:-

“சூர்யாவின் கஜினி படத்தில் நடித்ததுதான் எனது சினிமா வாழ்க்கையில் நான் செய்த பெரிய தவறு. அந்த படத்தில் சித்ரா என்ற மருத்துவ மாணவியாக வந்தேன். கஜினி படத்தின் கதையை இயக்குனர் என்னிடம் சொன்னபோது வேறு மாதிரி இருந்தது. ஆனால் படப்பிடிப்பு நடந்தபோது எனது கதாபாத்திரத்தை வேறு விதமாக மாற்றி எடுத்து விட்டனர். இதனால் என்னை மோசடி செய்து விட்டதாக உணர்ந்தேன். அதன்பிறகு கதைகளை கவனமாக தேர்வு செய்து நடிக்க ஆரம்பித்தேன்.

இவ்வாறு நயன்தாரா கூறியுள்ளார்.

கஜினி படத்தில் இன்னொரு கதாநாயகியாக நடித்த அசின் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இருந்தது. இந்த படம் அசின் திரையுலக வாழ்க்கையில் திருப்பு முனையை ஏற்படுத்தியது. கஜினியை இந்தியில் ரீமேக் செய்து அமீர்கான் நடித்தபோது அதில் அசினையே நடிக்க வைத்தார். அதன் பிறகு இந்தியில் சல்மான்கான், அக்‌ஷய்குமார், அபிஷேக் பச்சன் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

Related posts