“பிகில்” ரூ.250 கோடி வசூலை கடந்து சாதனை

நடிகர் விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படம் ரூ.250 கோடியை கடந்து வசூல் சாதனை படைத்துள்ளது. விஜய்-அட்லி கூட்டணியில் மூன்றாவது முறையாக வெளியாகியுள்ள படம் 'பிகில்'. 180 கோடி ரூபாய் பொருட்செலவில் இந்தப் படத்தை பிரம்மாண்டமாக ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்தது. ஆந்திரா, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே இந்தப் படம் வெளியானது. ஆனால், விமர்சன ரீதியாக கலவையாக இருந்தாலும், வசூல் ரீதியாகப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மெர்சல் மற்றும் சர்க்காருக்குப் பிறகு விஜயின் ரூ.200 கோடியை எட்டிய மூன்றாவது படம் பிகில். இந்த திரைப்படம் அவரது சினிமா வாழ்க்கையின் மிகப்பெரிய வெற்றிகளில் ஒன்றாக மாறுவதற்கான அறிகுறிகளைக் காட்டுகிறது. இந்நிலையில் தற்போது, பிகில் திரைப்படம் உலகம் முழுவதும் 250 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் நடப்பாண்டில்…

முகமூடி அணிந்து புகைப்படம் வெளியிட்ட பிரியங்கா

டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசுவினால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர். வாகன போக்குவரத்து முடங்கி உள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டு உள்ளது. தொழிற்சாலை பணிகளை நிறுத்தி உள்ளனர். முகமூடிகள் அணிந்தே வெளியில் நடமாடுகின்றனர். காற்று மாசுவை குறைக்கும் நடவடிக்கையில் அரசு எந்திரம் முடுக்கி விடப்பட்டு உள்ளது. டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசு குறித்து பிரபல இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா கவலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், “காற்று மாசு சூழ்நிலையில் இங்கு எப்படி வாழமுடியும். காற்று சுத்திகரிப்பும் முகமூடியும் நமக்கு தேவையாக இருக்கிறது. வீடு இல்லாதவர்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள். எல்லோரும் பாதுகாப்பாக இருங்கள்” என்று கூறியிருந்தார். அதோடு முகமூடி அணிந்த புகைப்படத்தையும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருந்தார். அதை பார்த்த பலரும், “புகைப்பிடிக்கும் உங்களுக்கு வாய்க்கு முகமூடி போட்டது சரியான…

சினிமாவில் நான் செய்த பெரிய தவறு – நயன்தாரா

தமிழ் பட உலகில் நம்பர்-1 நடிகையாக இருக்கிறார் நயன்தாரா. தெலுங்கு, மலையாள படங்களிலும் நடிக்கிறார். ஒரு படத்துக்கு ரூ.4 கோடி வாங்குகிறார். ரேடியோ ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தான் செய்த பெரிய தவறை வெளிப்படுத்தி இருக்கிறார். அவர் கூறியதாவது:- “சூர்யாவின் கஜினி படத்தில் நடித்ததுதான் எனது சினிமா வாழ்க்கையில் நான் செய்த பெரிய தவறு. அந்த படத்தில் சித்ரா என்ற மருத்துவ மாணவியாக வந்தேன். கஜினி படத்தின் கதையை இயக்குனர் என்னிடம் சொன்னபோது வேறு மாதிரி இருந்தது. ஆனால் படப்பிடிப்பு நடந்தபோது எனது கதாபாத்திரத்தை வேறு விதமாக மாற்றி எடுத்து விட்டனர். இதனால் என்னை மோசடி செய்து விட்டதாக உணர்ந்தேன். அதன்பிறகு கதைகளை கவனமாக தேர்வு செய்து நடிக்க ஆரம்பித்தேன். இவ்வாறு நயன்தாரா கூறியுள்ளார். கஜினி படத்தில் இன்னொரு கதாநாயகியாக நடித்த அசின் கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு…

ஒரே தடவையில் 3 ஆயிரம் சிப்பாய்களை இணைத்து போர் செய்தேன்

இராணுவத்திற்கு ஒரே தடவையில் 3000ற்கும் அதிகமான படைவீரர்களை இணைத்துக் கொண்டு யுத்தத்தினை நிறைவு செய்தோம். இதனடிப்படையில் ஏன் உயர்தரம் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களை பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்ய முடியாது. அனைத்து மாணவர்களும் பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பினை ஏற்படுத்துவேன் என பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார். கலவானை நகரில் இன்று தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அரசியல்வாதிகளின் தேவைகளுக்காகவும், சர்வதேச அமைப்புகளின் கோரிக்கைகளுக்காகவும் புலனாய்வு பிரிவினர் பயன்படுத்திக் கொள்ளப்பட்டார்கள். இதன் விளைவு தேசிய பாதுகாப்பினை இன்று பலவீனப்படுத்தியுள்ளது. தேவையற்ற விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அமைச்சரவையினால் மக்களின் பாதுகாப்பினை பலப்படுத்த முடியாது. வெளியிடப்பட்டுள்ள தேர்தல் கொள்கை பிரகடனத்தில் தேசிய பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. எக்காரணிகளுக்காகவும் தேசிய பாதுகாப்பினை இரண்டாம் பட்சமாக்கமாட்டேன். பலவீனப்படுத்தப்பட்டுள்ள புலனாய்வு பிரிவு குறுகிய காலத்திற்குள் பலப்படுத்தப்படும்.…

ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அழிவிற்கு மைத்திரி பொறுப்பு

ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அழிவிற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொறுப்புக் கூற வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமார துங்க தெரிவித்துள்ளார். ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியை பாதுகாக்கும் அமைப்பின் பொது சம்மேளனத்தில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனத்தினை விட சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனம் மிகவும் வெற்றிகரமான திட்டங்களை கொண்டுள்ளது. எமது தலைவர் கட்சியினை இந்த நிலைக்கு கொண்டு வந்து, நடுநிலை வகிப்பதாக தெரிவித்து, கட்சியின் தலைவர் பதவியில் இருந்தும் விலகி சட்ட விரோதமாக பதில் தலைவர் ஒருவரை நியமித்துள்ளமை தொடர்பில் நான் வருத்தமடைகிறேன். எம்மை நீக்குவதாக ஏழு முறை கட்சி மாறிய பொதுச் செயலாளர் கூறுகிறார். நீக்குவதென்றால்…

சந்திரிக்கா சுதந்திர கட்சியின் ஒரு செல்லாக்காசு !

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஒரு செல்லாக்காசு என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அட்டன் பிரதேசத்தில் இன்று (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அனைத்து சந்தர்ப்பத்திலும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கு எதிராகவே செயற்பட்டார். அவரின் தாய் சுதந்திர கட்சியின் தலைவராக செயற்பட்ட போது, அவரது கணவரான விஜய குமாரதுங்க, கட்சியின் பொதுச் செயலாளர் ரத்னசிறி விக்கிரமநாயக்க, கட்சியின் முன்னாள் பிரதித் தலைவர் டி.பி.இலங்கரத்ன ஆகியவர்களுடன் கட்சியில் இருந்து விலகி இலங்கை மக்கள் கட்சியினை உருவாக்கியதாக அவர் சுட்டிக்காட்டினார். சந்திரிக்கா அம்மையார் ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கும், அவரது தாயாரான சிறிமாவோ பண்டாரநாயக்க, அவரது சகோதரரான அனுர…