உன்னதத்தின் ஆறுதல்! வாரம் 19. 44

எல்லாவற்றையும் புதிதாக மாற்றும் தேவன்.
சகோதரன். பிரான்சீஸ் அந்தோனிப்பிள்ளை.
ரெகொபோத் ஊழியங்கள் – டென்மார்க்கிற்காக பிரார்த்திப்போம்.
இதோ, நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன் என்றார். வெளிப்படுத்தல் 21:5.

இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன், இப்பொழுதே அது தோன்றும், நீங்கள் அதை அறியீர்களா? நான் வனாந்தரத்திலே வழியையும், அவாந்தர வெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன். ஏசாயா 43:19.

நமது கர்த்தராகிய தேவன் தாம்படைத்த மக்களின் வாழ்க்கையில் எல்லா வற்றையும் புதிதாக்க விரும்புகிறவர். அவர்தான் சிங்காசனத்தில் வீற்றிருக்கிறவர். இதோ நான் புதியகாரியத்தை செய்கிறேன் என்று வாக்களிக்கிறார். பழைய துயரங் கள், பழையவேதனைகள், பழையதோல்விகள், பழையகஸ்டநட்டங்கள் எல்லா வற்றையும் நீக்கி புதியகாரியமாக அமைதியான, ஆறுதலான, ஆசீர்வாதமான வாழ்க்கையைத் தர விரும்புகிறார்.

தொல்காப்பியர் பின்வருமாறு கூறுகிறார். பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவன கால வகையினானே. இதன் கருத்து இலையுதிர் காலத்தில் பழுத்த இலைகள் உதிர்கின்றன. இளவேனிற் காலத்தில் புதிய துளிர்கள் தோன்றுகின்றன. இதே போன்றதுதான் தேவனை அறிந்து, அவரை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டு, அவருடன் வாழும் வாழ்க்கை.

நாம் வாழும் டென்மார்க்கில் சங்கான்ஸ் பெற்ஸ் என ஓர்விழாவை கொண்டாடு வார்கள். பழைய பொருட்களை, குப்பைகளை ஒன்றுசேர்த்து தீயிட்டுக் கொளுத்து வார்கள். காரணம் நாம் புதிய ஆரம்பத்தைக் கொண்டாடுகிறோம் என்று. தீபாவளி விழாவிலும் இதே கருத்தை நாம் நினைவுபடுத்திக கொள்வது வழக்கம். அதைவிட மேலானது தேவனோடு சேரும்போது எமது பழைய காரியங்கள் எல்லாம் எம்மை விட்டு நீங்குகிறது. அதே நேரம் புதிய ஆரம்பம் ஆரம்பமாகிறது. இதனை நீங்கள் உங்களைச் சூழவுள்ள கிறிஸ்த்தவர்களிடத்தில் காணலாம்.

உலகத்தின் காலங்களை கிறிஸ்த்துவிற்குமுன், கிறிஸ்த்துவிற்குப்பின் என இருவகையாக பிரிப்பர். ஆனால் நம் ஒவ்வொருவரின் வாழ்விலும் இரு காலங்கள் உண்டு. ஒன்று தேவனை அறியாததற்கு முன் வாழ்ந்த பழைய வாழ்க்கை. மற்றது தேவனை அறிந்த பிற்பாடுள்ள புதிய வாழ்க்கை. அந்த வாழ்க்கை எல்லாம் புதிதான வாழ்க்கை.

இதனை வேதம் இவ்வாறு கூறுகிறது. பழைய பாவ மனுசன் மரித்து கிறிஸ்து விற்குள் புதிய சிருஸ்டியாகிவிடுகிறோம். பாவத்திற்கு மரித்து நீதிக்குப் பிழைத் திருக்கிறோம். ஆகவே புதுத்தீர்மானத்தோடு தேவன்தரும் புதிய வாழ்க்கைக்கான காரியங்களை அறிந்து, அவைகள் நமது வாழ்க்கையில் நிலைத்திருக்க நம்மை விட்டுக்கொடுப்போம்.

புதிய இருதயம்.

தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும். சங். 51:10. சுத்த புதிய இருதயம் என்றால், புதிய சிந்தை, புதிய எண்ணம், புதிய கிருபை, இரக்கம் கொண்ட இருதயம். பழைய இருதயம் வேண்டாம். காரணம், எல்லாவற்றைப் பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகாகேடுள்ளது மாயிருக்கிறது,

எப்படியெனில், மனுஷருடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாத சிந்தனை களும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும், களவுகளும், பொருளாசைகளும், துஷ்டத்தனங்களும், கபடும், காமவிகாரமும், வன்கண்ணும், து}ஷணமும், பெருமையும், மதிகேடும், புறப்பட்டுவரும். பொல்லாங்கானவைகளாகிய இவைகளெல்லாம் உள்ளத்திலிருந்து புறப்பட்டு மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்றார் இயேசு. மாற்கு 7:21-23.

ஆகவே மனிதன் தேவனுக்குஏற்றபடி வாழவிரும்பினால் புதிதான இருதயத்தை தரித்துக்கொள்ள வேண்டும். அதைத்தான் தேவன் மனிதருக்கு தர விரும்புகிறார்.

புதிய ஆவி. (புதிய வாழ்க்கை)

தேவவழி நடத்துலுடன்கூடிய வாழ்க்கை. அதாவது உண்மையான, நீதி, பரிசுத்தம், தேவசாயலுக்கேற்ற வாழ்க்கையாகும். புதிய வாழ்க்கை என்பது, நமக்குளிருக்கிற வேண்டாத பழக்கவழக்கங்களை, வேண்டாத செயற்பாடுகளை, தீமையான காரியங் களை நம்மை விட்டு அகற்றி வாழும் வாழ்க்கையாகும்.

பாடசாலையில் இரசாயனம் படிக்கும்போது கண்ணாடிக் குடுவையில் இருக்கும் விசவாயுவை அகற்ற வேண்டுமானால், அதை முழுவதும் தண்ணீரால் நிரப்பிவிட்டால் போதும். வாயு முழுவதும் வெளியேறிவிடும். அதே போன்றதுதான் புதிய வாழ்க்கை. நாமும் தேவனிடம் எம்மை ஒப்புக்கொடுக்கும்போது எமக்குள் இருக்கும் எல்லாம் வெளியேறி விடுதலையான புது வாழ்வைப் பெறுவோம்.

புதிய பெலன்.

கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள். அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள் ஏசாயா40:31. கழுகு வயது முதிரும்போது அமைதி யாக மலையின் வெடிப்பில் போய்த்தங்கிவிடும். தனது சிறகுகள் விழும்படியாக ஒன்றும் சாப்பிடாமலும், குடியாமலும் பலநாட்கள் அமர்ந்திருக்கும். பிற்பாடு புதிய இறகுகள் முளைக்கும்போது புதுபெலன் அடைந்து இளைமையைப் பெற்றுக் கொள்ளும். இதே போன்றது தான் தேவன் தரும் புதியபெலன்.

ஆகவேதான் கழுகுக்குச் சமானமாய் உன் வயது திரும்ப வாலவயது போலாகிறது என்கிறார் கர்த்தர். நாம் தேவனை அண்டி, அவரின் வார்த்தைக்கு செவிகொடுத்து நடக்கும்போது, தேவன் நமது இருதயங்களில் செவ்வையான வழிகளில் நடக்கும் படியான ஓர் தெரிந்து கொள்ளுதலைத் தருவார். அந்த தெரிந்து கொள்ளுதல் நமக்கு பாய்கியமான வாழ்வைத்தரும். (சங்கீதம் 84:5)

புதிய சந்தோசம்.

நாம் தேவனை அண்டி புதுசிருஸ்டியாக மாறும்போது புதுசந்தோசம் நமக்குள் குடிவருகிறது. இது தேவனுடனான வாழ்க்கையால் (தேவ ஆவியால்) வரும் பலன் ஆகும். இயேசு உலகத்திற்கு வந்தது துயரப்படுகிறவர்களுக்கு ஆனந்தத்தை, சந்தோசத்தைக் கொடுப்பதற்காகவே. இதனை நாம் ஏசாயா 61:3 இல் காணலாம். சீயோனிலே துயரப்பட்டவர்களைச் சீர்ப்படுத்தவும், அவர்களுக்குச் சாம்பலுக்குப் பதிலாகச் சிங்காரத்தையும், துயரத்துக்குப் பதிலாக ஆனந்த தைலத்தையும் கொடுக்கவும் என உள்ளது.

அநேகர் கிறிஸ்தவ மார்க்கம் சந்தோசமற்ற, மகிழ்ச்சியற்றதென்று கூறுவார்கள். அது 100வீதம் பிழையானது. இயேசுவோடு உள்ள ஐக்கியமும், தேவபிள்ளைகளோடு உள்ள ஐக்கியமும், தேவனை ஆராதிக்கும்போது உள்ள மகிழ்ச்சியும் வார்த்தையால் சொல்ல முடியாதது. அதை நாம் தேவ பிரசன்னத்தின் ஊடாக மாத்திரம்தான் கண்டுகொள்ளலாம்.

புதிய கனிகள். (வாழ்க்கைத்தரத்தின் உயர்வு – தன்மை)

நாம் தேவனை அண்டிவாழும் போது நமது சுபாபம் மாற்றம் அடையும். அதாவது தீமையான வழிகளை விட்டு நன்மையான வழிகளை நாடும். அதனால் துயரப்படுகிற மக்களுக்கு ஆறுதலுக்கான வழியைகாட்ட முடியும். அவர்களின் துயரத்தில் பங்குகொண்டு அவர்களை ஆற்றித்தேற்ற முடியும்.

இதனை வேதம் மிகத்தெளிவாக கூறுகிறது. நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிப10ரணமுமானசித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூப மாகுங்கள். இதனுடைய கருத்து தேவசாயலாக, தேவ குணமுள்ளவர்களாக (இரக்ககுணமுள்ளவர்களாக) மாறுவதாகும்.

இந்த எண்ணங்களை, குணங்களை அடைந்து தாம்படைத்த மக்கள் வாழ வேண்டும்; என்று தேவன் விரும்புகிறார். அந்த தேவனின் இருதயத்தின் விருப்பத்தை நிறைவேற்ற உன்னை ஒப்புக்கொடுக்கிறியா? அப்படியாயின் என்னுடன் சேர்ந்து இந்த ஜெபத்தை தேவனிடம் அர்ப்பணிப்போம்.

அன்பான இயேசு சுவாமி, இன்று உமது விருப்பத்தை அறிந்து கொள்ள உதவியதற்காக நன்றி அப்பா. உம்மை அறிகிற அறிவின் நிமித்தம் எனது வாழ்க்கையில் உள்ள சகல பழையவைகiளும் என்னை விட்டு அகற்றி, உம்முடைய விருப்பத்திற்கேற்ப புதியவைகளை அடைந்து புது சிருஸ்டியாக வாழ உதவிசெய்து, என்னைக்காத்து வழிநடத்திக்கொள்ளும் படியாக இயேசுவின் நாமத்தில் வேண்டிநிற்கிறேன் நல்ல பிதாவே, ஆமென்.

கர்த்தர் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக!
Bro. Francis T. Anthonypillai. Rehoboth Ministries – Praying for Denmark

Related posts