அலைகள் வாராந்த பழமொழிகள் 29.10.2019

01. எதுவும் சாத்தியம் என்று நம்புங்கள் படைப்பாற்றல் மிக்க சிந்தனைக்கு இதுவே அடித்தளமாகும்.

02. சாத்தியமில்லை என்ற வார்த்தையை உங்கள் சிந்தனை பேச்சில் இருந்து அகற்றுங்கள்.

03. ஒரு விடயத்தை செய்ய முடியும் என்று நினையுங்கள், ஏன் செய்ய முடியாது என்று சிந்திக்க வேண்டாம்.

04. பாரம்பரிய சிந்தனையாளரின் மனம் செயலிழந்துள்ளது. சராசரி மக்கள் எப்போதுமே முன்னேற்றத்தை வெறுப்பர்.

05. மனிதன் எங்கே போக விரும்புகிறானோ அதுதான் அவனுக்கு சொந்தமான இடம்.

06. ஒரு பொருளை விற்பதற்கு தலை சிறந்த வழி இருக்கிறது. அதை கண்டு பிடியுங்கள்.

07. ஒரு வேலையை செய்வதற்கு எத்தனையோ வழிகள் இருக்கின்றன. படைப்பாற்றல் மிக்க எத்தனை மனங்கள் உள்ளனவோ அத்தனை வழிகள் உள்ளன.

08. பனிக்கட்டி மீது எதுவும் வளர்வதில்லை. பாரம்பரியம் மனங்களை பனிக்கட்டி போல உறைய செய்துவிடும். ஆகவே புதுமைக்கு மாறுங்கள்.

09. புதிய யோசனைகளை கேட்டு யாராவது சிரித்தால், பார்க்கலாம் என்று நழுவினால் அவர்கள் பாரம்பரிய சிந்தனைகளால் பாதிக்கப்பட்டு விடுபட முடியாதிருக்கிறார்கள். அவர்களை கைவிட்டு விலகுவது நல்லது.

10. ஒரு புதிய கருத்தை கேட்கும் ஒருவர் இது ஒரு சுவாரஸ்யமான சிந்தனை மேலும் கூறுங்கள் என்றால் அவர் படைப்பாற்றல் மிக்கவர்.

11. புதிய சிந்தனைகளை வேலை செய்யாது கிறுக்கு தனமானது என்று கூறுவதை தவிருங்கள்.

12. எந்தவொரு புதிய சிந்தனையையும் பரிசோதனை செய்து பார்க்க தவறாதீர்கள்.

13. என்றாவது ஒரு நாள் புதிய வழியால் வேலைக்கு செல்லுங்கள்.

14. இந்த வாரம் ஏதாவது புதிதாகவும், வித்தியாசமாகவும் செய்யுங்கள்.

15. முன்பு செய்ததைவிட சிறப்பாக செய்வது எப்படியென்று சிந்தியுங்கள்.

16. முற்போக்கு சிந்தனைகள் உங்களுக்கு முன்னேற்றம் கொடுக்கும்.

17. எதிலுமே முழுமையடைய முடியாது என்று கலங்க வேண்டாம்.. அதனுடைய பொருள் எல்லையற்ற வாய்ப்புக்கள் இருக்கின்றன என்பதாகும்.

18. வெற்றி பெற்ற மனிதர்கள் எப்போதும் தேடிக்கொண்டே இருக்கின்றனர். இதை என்னால் சிறப்பாக செய்ய முடியுமா என்று அவர்கள் கேட்பதே இல்லை.

19. ஒவ்வொரு வாரமும் முன்னைய வாரத்தைவிட சிறப்பாக இயங்குவதே வெற்றிக்கு வழியாகும்.

20. முன்னேறுவதற்கான யோசனைகளை செய்ய நேரம் ஒதுக்குங்கள்.

21. உங்களுடைய உற்பத்தியை மேம்படுத்த என்ன செய்யலாம் என்று உங்களை நீங்களே கேளுங்கள் வழி பிறக்கும்.

22. வியாபாரத்தை ஆரம்பிக்கும் போது உங்களுக்கு என்ன தெரிந்துள்ளது என்பது முக்கியமல்ல நீங்கள் தொடர்ந்து முன்னேறியுள்ளீர்களா என்பதே முக்கியம்.

23. முன்னேற்றம்தான் எங்கள் முக்கியமான விற்பனை பொருள் என்று ஜெனரல் மோட்டேர்ஸ் நிறுவனம் கூறுகிறது.

24. என்னால் சிறப்பாக செய்ய முடியும் என்ற தத்துவம் மாஜா ஜாலத்தை நிகழ்த்துகிறது.

25. ஒரு வாய்ப்பை ஒரு போதும் உதறி தள்ளுவதால் பயன் எதுவும் கிடைக்காது.

அலைகள் வாராந்த பழமொழிகள் வரும்.

29.10.2019

Related posts