மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி

அசுரனைப் பார்த்ததற்கும் பாராட்டியதற்கும் மிக்க நன்றி என மு.க ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் நன்றி தெரிவித்து உள்ளார். நெல்லை மாவட்டம் நாங்குநேரி மற்றும் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதிகளின் இடைத்தேர்தலை ஒட்டி, மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வருகிறார். தேர்தல் பிரச்சாரத்திற்கிடையே, நடிகர் தனுஷ் நடித்துள்ள அசுரன் திரைப்படத்தை தூத்துக்குடி பாலகிருஷ்ணா திரையரங்கில் அவர் பார்த்து ரசித்தார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஸ்டாலின், பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடி சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன் என அசுரன் திரைப்படத்தை பாராட்டியுள்ளார். கதை, களம், வசனம் என வென்று காட்டியிருக்கும் வெற்றி மாறனுக்கும், படத்தில் வாழ்ந்து காட்டியிருக்கும் தனுசுக்கும் பாராட்டுகள் என மு.க.ஸ்டாலின் வாழ்த்தியுள்ளார்.

வடிவேலுவுக்குப் பதில் யோகி பாபு

ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் வடிவேலு நடிக்கப் பூஜை போடப்பட்ட படத்தில், தற்போது யோகி பாபு நடித்து வருகிறார். பிரபுதேவா, பிரபு, நிக்கி கல்ராணி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'சார்லி சாப்ளின் 2'. பல்வேறு காமெடி கதைகளை இயக்கிய ஷக்தி சிதம்பரம் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். இதற்குப் பிறகு வடிவேலு நாயகனாக நடிக்க 'பேய் மாமா' என்ற படத்தை இயக்கவுள்ளதாக அறிவித்தார். ஆனால், 'இம்சை அரசன் 24-ம் புலிகேசி' படத்தின் பிரச்சினையால் ஷக்தி சிதம்பரம் படத்தில் வடிவேலுவால் நடிக்க முடியாமல் போனது. தற்போது இந்தப் பிரச்சினை முடிவுக்கு வந்து, வடிவேலுவுக்கு பல்வேறு இயக்குநர்கள் கதை சொல்லி வருகிறார்கள். இதனிடையே, வடிவேலுவுக்காக எழுதிய 'பேய் மாமா' கதையை தற்போது யோகி பாபுவை நடிக்க வைத்துப் படமாக்கி வருகிறார் ஷக்தி சிதம்பரம். இதன் படப்பிடிப்பு குமுளியில் நடைபெற்று வருகிறது.…

மீண்டும் அஜித் – நயன்தாரா ஜோடி?

'தல 60' படத்தில் மீண்டும் அஜித் - நயன்தாரா ஜோடி இணைந்து நடிப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. 'நேர்கொண்ட பார்வை' படத்தைத் தொடர்ந்து ஹெச்.வினோத் இயக்கத்தில் மீண்டும் நடிக்கவுள்ளார் அஜித். இதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் புதிய படத்தையும் ஜீ ஸ்டூடியோஸ் வழங்க, போனி கபூரே தயாரிக்கவுள்ளார். இதன் கதை விவாதம் உள்ளிட்ட அனைத்துப் பணிகளும் முடிவடைந்து, தற்போது நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே இந்தப் படத்தில் மீண்டும் அஜித்துக்கு நாயகியாக நயன்தாரா நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த இணை இறுதியாக நடித்த 'விஸ்வாசம்' மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. அஜித் ரசிகர்கள் இந்தச் செய்தியைக் கொண்டாடி வந்தாலும், படக்குழுவினரோ அமைதி காத்து வருகிறார்கள். இது தொடர்பாக விசாரித்தபோது, "உண்மையில் நாயகியாக யாரை நடிக்க வைக்கலாம் என்பது தொடர்பாகப் பேச்சுவார்த்தை இன்னும் நடைபெறவில்லை. இதர…

ஸ்டாலினால் பொறுக்க முடியவில்லை; பதவி வெறி

2021-ம் ஆண்டு வரை பொறுக்க முடியாமல் பதவி வெறியில் மு.க.ஸ்டாலின் இருப்பதாக, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். அதிமுகவின் 48-வது ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சி இன்று (அக்.17) சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்குப் பின் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களைச் சந்தித்து, பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார். சசிகலாவை மீண்டும் அதிமுகவில் சேர்த்துக்கொள்வதற்கு வாய்ப்பிருக்கிறதா? ஆடு பகை, குட்டி உறவு என்கிற பேச்சுக்கு இடமில்லை. இது ஏற்கெனவே எடுத்த முடிவு. நடந்து முடிந்தது பற்றி கேட்க வேண்டாம். இப்போது நடப்பதும், வருங்காலமும் முக்கியம். ஜெயலலிதா, எம்ஜிஆர் ஆரம்பித்த கட்சி தொடர வேண்டும். கட்சி நன்றாக போய்க் கொண்டிருக்கிறது. அவசியம் இல்லாதது குறித்து ஏன் விவாதிக்க வேண்டும். முதல்வர் தன்னுடன் நேரடியாக போட்டியிடத் தயாரா என ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளாரே? எந்த சவாலையும் நாங்கள்…

கோட்டாபயவுக்கு இப்போது பதிலளிக்க விரும்பவில்லை

இறுதி யுத்தம் தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ள கருத்துகள் தொடர்பில் இத் தருணத்தில் நான் எதையும் கூற விரும்பவில்லை. ஆனால், அவர்களது தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டதன் பின்னர் அனைத்துக்கும் பதிலளிப்பேன் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தினகரனுக்கு தெரிவித்தார். பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களை நேற்றுமுன்தினம் சந்தித்திருந்தார். இதன்போது இறுதி யுத்தம் தொடர்பில் ஊடகவியலாளர்களால் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டிருந்தன. இதற்கு பதிலளித்திருந்த அவர், இறுதி யுத்தத்தை நான் வழிநடத்தவில்லை. சரணடைந்தவர்கள் எவரும் கொல்லப்படவில்லை என இறுதி யுத்தம் தொடர்பில் அவர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளிலிருந்து நழுவும் வகையில் கருத்துகளை வெளிப்படுத்தியிருந்தார். இவ் விடயம் தொடர்பாக கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

கோட்டாபயவின் கருத்துக்கு தமிழ்த் தலைவர்கள் கண்டனம்

பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் கருத்துகளை தமிழ் தலைவர்கள் கண்டித்துள்ளனர். "சரணடைந்த எவரும் கொல்லப்படவில்லை. சடலங்களை அடையாளம் காண முடியாததால் காணாமல் போனதாக உறவினர்கள் கூறுகிறார்கள்" என கோட்டாபய ராஜபக்ஷ செய்தியாளர்களிடம் கூறியிருப்பதானது எந்த வகையிலும் ஏற்க முடியாதென்றும் தமிழர்களை கொச்சைப்படுத்தும் செயலென்றும் அவர்கள் கூறினர். காணாமல்போனோர் சம்பந்தமாக அவர் கூறிய கருத்து, உறவுகளை இழந்து தவிக்கும் உறவுகளை ஏளனப்படுத்தும் செயலாகும். சடலங்களைக் காணததால் காணாமல்போனோர் பற்றி பேசுகின்றனரென்பது தமிழர்களை இழிவுப்படுத்துவதாக இருக்கின்றதென்றும் தமிழ்த் தலைவர்கள் தெரிவித்தனர். யுத்தகாலத்தில் நடந்தவற்றுக்கு தான் பொறுப்பில்லை, இராணுவத் தளபதிதான் பொறுப்பு என்று கூறிவிட்டு அவர் ஒதுங்க நினைப்பது உலகத்தை ஏமாற்றும் பகிரத முயற்சி என்றும் தமிழ் தலைவர்கள் குற்றஞ்சாட்டினர். பொதுஜனப் பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ ஊடக மாநாட்டில் தெரிவித்துள்ள கருத்துக்கள் தொடர்பில் தமிழ்க் கட்சிகளின்…

யாழ். சர்வதேச விமான நிலையம் ஜனாதிபதியினால் திறப்பு

யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் தலைமையில் இன்று காலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந் நிகழ்வில் போக்குவரத்து சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க, இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் தரன்ஜித் சிங், வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். அடுத்த மாதம் (நவம்பர்) முதலாம் திகதி இந்த விமான நிலையத்தில் இருந்து விமான சேவைகள் ஆரம்பிக்கப்படும் என்று இலங்கை சிவில் விமான சேவை அதிகாரசபை நேற்று தெரிவித்தது. ஏற்கனவே இந்த விமான சேவை இம் மாதம் 27 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும் தற்பொழுது இந்த விமான சேவை அடுத்த மாதம் முதலாம் திகதி ஆரம்பமாகும் என்று அதிகார சபையின் அதிகாரி நேற்று தெரிவித்தார்.…