போலீஸ் அதிகாரி வேடத்தில் நயன்தாரா?

தென்னிந்திய பட உலகில் தொடர்ந்து நம்பர் 1 இடத்தில் இருக்கும் நயன்தாரா நடிப்பில் இந்த வருடம் விஸ்வாசம், ஐரா, மிஸ்டர் லோக்கல், கொலையுதிர் காலம் ஆகிய தமிழ் படங்களும் லவ் ஆக்‌ஷன் டிராமா என்ற மலையாள படமும் சைரா நரசிம்ம ரெட்டி என்ற தெலுங்கு படமும் திரைக்கு வந்தன.

ரஜினிகாந்த் ஜோடியாக தர்பார் படத்திலும் விஜய்யுடன் பிகில் படத்திலும் நடித்து முடித்துள்ளார். பிகில் தீபாவளிக்கும் தர்பார் பொங்கல் பண்டிகையிலும் வெளியாகிறது.

இந்த நிலையில் பாகுபலி படத்தில் நடித்து பிரபலமான ராணா தயாரிக்கும் புதிய தெலுங்கு படத்தில் நடிக்க நயன்தாராவிடம் பேசியுள்ளனர். இந்த படத்தில் கதையை கேட்டதும் நயன்தாரா ஒப்புக்கொண்டார்.

இதில் நயன்தாரா போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக் கிறார்.

முதலில் நித்யாமேனனைத்தான் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க அணுகினர். ஆனால் படக்குழுவினர் கேட்ட தேதிகளை அவரால் ஒதுக்க முடியாததால் நயன்தாரவை தேர்வு செய்துள்ளனர்.

படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று கூறப்படுகிறது.

Related posts