பிகில் படத்தின் டிரெய்லர் டுவிட்டரில் வெளியீடு

நடிகர் விஜய் நடித்து, அட்லி இயக்கிய ‘பிகில்’ படம் தீபாவளிக்கு வருவது உறுதி என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இதில் விஜய் ஜோடியாக நயன்தாரா நடித்து இருக்கிறார். ‘வில்லு’ படத்துக்கு பின், இருவரும் ஜோடி சேர்ந்து நடித்துள்ள படம், இது. இந்த படத்தில், விவேக், கதிர், ஜாக்கி ஷராப், டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், யோகி பாபு, மனோபாலா, தேவதர்ஷினி, இந்துஜா, அமிர்தா ஐயர், ரெப்பா மோனிகா ஜான், வர்ஷா பொல்லம்மா ஆகியோரும் இடம் பெறுகிறார்கள். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். கல்பாத்தி எஸ்.அகோரம், கல்பாத்தி எஸ்.கணேஷ், கல்பாத்தி எஸ்.சுரேஷ் ஆகிய மூவரும் தயாரித்துள்ளனர். படத்தில், கால்பந்து பயிற்சியாளராக விஜய் நடித்து இருக்கி றார். பிசியோதெரபிஸ்ட் ஆக நயன்தாரா நடித்துள்ளார். படம், மிகப்பெரிய பொருட்செலவில் தயாராகி இருக்கிறது. அதற்கு இணையாக வியாபாரமும் ஆகியிருக்கிறது. படம், விஜய்…

உலக இளையோர் செஸ் போட்டி சென்னை வீரர் தங்க பதக்கம்

உலக இளையோர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி மும்பையில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 10வது சுற்று ஆட்டத்தில், 18 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் கிராண்ட்மாஸ்டரான சென்னையை சேர்ந்த பிரக்யானந்தா (வயது 14), லிதுவேனியாவின் பாவ்லிஸ் பல்டினிவிசியசை எதிர்கொண்டார். இதில் வெள்ளை நிற காய்களுடன் ஆடிய பிரக்யானந்தா 63வது காய் நகர்த்தலில் வெற்றி பெற்றார். இதனால் மொத்தம் 8.5 புள்ளிகளுடன் தங்கப்பதக்கம் வெல்லும் வாய்ப்பை நெருங்கினார். அடுத்த இடத்தில் ஆர்மேனியா வீரர் ஷந்த் சர்க்ஸ்யான் (8 புள்ளி) இருந்துள்ளார். இதனிடையே, இன்று 11வது மற்றும் கடைசி சுற்று ஆட்டம் நடந்தது. இந்த போட்டியில் பிரக்யானந்தா வெற்றி பெற்று தங்க பதக்கம் தட்டி சென்றார். இதுபற்றி செஸ்.காம் வெளியிட்டுள்ள செய்தியில், 18 வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் வெற்றி பெற்றுள்ள சிறுவன் பிரக்யானந்தாவுக்கு மனப்பூர்வ வாழ்த்துகள். இந்தியா உன்னால் பெருமை அடைகிறது…

விடுதலை புலிகள் தொடர்புடைய 5 பேர் கைது !

தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டின் கீழ் மேலும் ஐந்து பேர் மலேசிய பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக அந் நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இவ்வாறு கைதுசெய்யப்பட்ட ஐவரும் மலாக்கா பேன்னெங், மற்றும் சிலாங்கூரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டின் பேரில் மலேசியாவில் இரண்டு அரசியல்வாதிகள் உள்ளிட்ட ஏழு பேர் கடந்த வியாழக்கிழமை அந்நாட்டு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவர் கோலாலம்பூரில் உள்ள இலங்கை தூதரகத்தை தாக்க திட்டமிட்டிருந்ததாகவும் அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் இலங்கை துணைத்தூதர் தாக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவர்களும் தற்போது கைதாகி இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. இதேவேளை இவர்களது கைதுதொடர்பில் கூறிய, மலேசிய பொலிஸ் துறையின் பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவின் தலைமை துணை ஆணையர்…

முன்னாள் LTTE உறுப்பினர் வீட்டிலிருந்து ஆயுதங்கள் மீட்பு

திருகோணமலையில் நேற்றிரவு கைதான கிளிநொச்சி, அம்பாள்குளம் இளைஞனின் வீட்டிலிருந்து ரி56 துப்பாக்கிகள், கைக்குண்டுகள் உள்ளிட்ட வெடிபொருட்கள் மற்றும் பல்வேறு கருவிகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார். நேற்றைய தினம் (11) திருகோணமலை, சேருநுவர, கிளிவெட்டி பாலத்திற்கு அருகில், சேருநுவர இராணுவ முகாம் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கமைய, சந்தேகநபர் ஒருவர் ரி56 துப்பாக்கி ஒன்றுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து குறித்த சந்தேகநபர், சேருநுவர பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் குறித்த நபர் கிளிநொச்சி, அம்பாள்குளத்தைச் சேர்ந்த ஜோசப் பீட்டர் எனவும், அவர் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளி எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளார். இதனையடுத்து இன்று (12) கிளிநொச்சி அம்பாள் குளத்தில் அமைந்துள்ள குறித்த நபரின் வீட்டில் கிளிநொச்சி பொலிசாரும் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து மேற்கொண்ட சோதனையில், அவரது வீட்டில் மறைத்து…

தேர்தல் வெற்றி குறித்து மஹிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள அறிக்கை

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் கிடைத்த வெற்றி ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஒன்றிணைந்த எதிர்க் கட்சி உள்ளிட்ட எதிர்க் கட்சி கூட்டமைப்புக்கு கிடைத்த வெற்றி என எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் 17 தேர்தல் தொகுதிகளிலும் பொதுஜன முன்னணி வெற்றிப் பெற்றுள்ளது. இந்த வெற்றி குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு மஹிந்த ராஜபக்ஷ இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார். ´கடந்த வருட ஆரம்பத்தில் செய்யப்பட்ட வேட்பு மனு தாக்கலுக்கமைய நடத்தப்பட்ட தேர்தல் இதுவாகும். அதனால் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனித்து வேட்பு மனுவை தாக்கல் செய்திருந்தது. எனினும் தற்போது ஜனாதிபதி வேட்பாளரை ஆதரிக்க அனைவரும் கூட்டணி ஒன்றை அமைத்து ஒரே சக்தியாக மாறியுள்ளோம். ஒட்டுமொத்தமாக எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலில் எதிர்கட்சி கூட்டமைப்புக்கு 69…