மதத்தையும், இனத்தையும் சார்ந்து எமது அரசியல் நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்க மாட்டோம்

இனவெறியும், மதவெறியும் தோல்வியுற்ற அரசியலின் ஒரு உடமையாக மாறியுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று (11) நடைபெற்ற சம்மேளன கூட்டம் ஒன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை கூறினார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அநுர குமார திசாநாயக்க, ´இன்று கற்சிலைகள் மறைக்கப்பட்டு வேறு வகையாக சிலைகள் வெளியில் தென்படுகின்றன.

பல அரசியல்வாதிகள் நமது வரலாற்று பாரம்பரியங்களை தங்கள் அரசியல் மேடைகளில் பேசு பொருளாக மாற்றியுள்ளனர்.

அதனை மையப்படுத்தி சகல செயற்பாடுகளும் அமைவதால் நாட்டை முன்னோக்கி நகர்த்த முடியவில்லை.

சமய சொற்பொழிவுகள் சிலவற்றில் தைரியமாக செயற்படுமாறு கூறப்படுகின்றது.

அதேபோல் பொறுமையாகவும், ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துமாறும், சமூகத்தில் நல்ல பிரஜையாக எவ்வாறு வாழ்வது என்பது குறித்தும் சமய போதனைகள் கூறுகின்றன.

ஆனால் சில அரசியல்வாதிகள் தமது இயலாமை தோற்றதன் பின்னர் மேற்சொன்ன விடயங்களுக்கு எதிராக மக்களை தூண்டிவிடுகின்றனர்.

இவ்வாறான செயல்களால் இன்று பௌத்த தர்மத்தை பின்பற்றும் சிங்கள மக்கள் ஆபத்தான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மக்களின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதாகவும், ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதாகவும், சாதாரண மனிதனை அரசனாக்குவதாகவும் சொன்னால் மாத்திரம் போதாது.

அதற்காக அவர்கள் இனவெறி மற்றும் மதவெறி ஆகியவற்றை இறுதி ஆயுதமாக பயன்படுத்துகின்றனர்.

அதனால் மதத்தையும், இனத்தையும் சார்ந்து எமது அரசியல் நிகழ்ச்சி நிரலை முன்னெடுக்க மாட்டோம்.

என்பதை தேரர்கள் முன்னாள் உறுதியாக கூறிக்கொள்கின்றேன்´ என தெரிவித்தார்.

Related posts