மாற்றுக் கருத்துக்கள் தீர்க்கப்பட்டு விட்டன பொன்சேகா

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் முதலாவது பொதுக்கூட்டம் இன்று (10) பிற்பகல் 02.00 கொழும்பு காலி முகத்திடலில் இடம்பெறவுள்ளது.

தனது முதலாவது பிரச்சார கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்னர் இன்று முற்பகல் களனி ரஜமகா விகாரைக்கு சென்ற சஜித் பிரேமதாச அங்கு அவர் ஆசிர்வாரதம் பெற்றுக் கொண்டார்.

இந்த சந்தர்ப்பத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவும் கலந்து கொண்டிருந்தார்.

இதன்போது, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு சஜித் பிரேமதாச இவ்வாறு பதிலளித்திருந்தார்.

கேள்வி – இன்றைய கூட்டம் தொடர்பில்?

பதில் – உங்களுக்கும் அழைப்பு விடுக்கிறேன். வந்து பாருங்கள்.

கேள்வி – எவ்வாறான எதிர்ப்பார்ப்பு உள்ளது?

பதில் – நாட்டு மக்களின் எதிர்ப்பார்ப்புதான் எனது எதிர்ப்பார்ப்பு.

இன்றைய தினம் இடம்பெறவுள்ள கூட்டம் கட்சியை வெற்றிப் பெறச் செய்வதற்கான ஆரம்பமாக அமையவுள்ளதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவிடம் ஊடகவியலாளர்கள் இவ்வாறான கேள்விகளை எழுப்பியிருந்தனர்.

கேள்வி – கடந்த காலங்களில் சஜித் பிரேமதாசவிற்கு எதிராக நீங்கள் செயற்பட்டீர்கள் தானே?

பதில் – ” நான் எதிராக இருக்கவில்லை, கட்சியில் பெயர் அறிவிக்கப்பட்டால் அவரின் வெற்றிக்காக உழைப்பேன் என்றுதான் நான் கூறினேன். சில மாற்றுக் கருத்துக்கள் இருந்தன. அவை தற்போது தீர்க்கப்பட்டு விட்டன.

நிச்சமாக சஜித் பிரேமதாச வெற்றிப் பெறுவார் என சரத் பொன்சேகா இதன்போது தெரிவித்தார்.

Related posts