பட அதிபர் புகார்இன்னொரு சிம்பு படம் நிறுத்தம்?

சிம்பு நடிக்க இருந்த படம் கைவிட்டவிட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. சிம்பு நடிப்பில் கடந்த வருடம் செக்க சிவந்த வானம், காற்றின் மொழி, வந்தா ராஜாவாதான் வருவேன் ஆகிய படங்கள் வெளிவந்தன. அதன்பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் மாநாடு படத்தில் சிம்பு நடிப்பதாக அறிவித்து பட வேலைகளை தொடங்கினர். ஆனால் அந்த படம் திடீரென்று கைவிடப்பட்டது. இதுகுறித்து தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வெளியிட்ட அறிக்கையில், “சிம்பு நடிக்க இருந்த மாநாடு பட வேலைகளை தொடங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது. அதனால் மாநாடு படம் கைவிடப்படுகிறது. வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படம் புதிய பரிமாணத்தோடு தொடங்கும் என்றார். தயாரிப்பாளர் சங்கத்தில் சிம்பு மீது அவர் புகார் அளித்துள்ளதாகவும் கூறப்பட்டது. மாநாடு படத்துக்கு போட்டியாக மகாமாநாடு படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது. இந்த…

விஜய், நயன்தாராவின் புதிய ‘போஸ்டர்’

பிகில் படத்தின் புதிய போஸ்டரை படக்குழுவினர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர். தீபாவளிக்கு திரைக்கு வரும் விஜய்யின் பிகில் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. இதில் விஜய் தந்தை, மகனாக 2 வேடங்களில் வருகிறார். நாயகியாக நயன்தாரா நடித்துள்ளார். அட்லி இயக்கி உள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையாக வைத்து படத்தை எடுத்துள்ளனர். படத்தின் பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளன. டீசர் கடந்த 4-ந்தேதி வெளியாக இருந்தது. ஆனால் அன்றைய தினம் வெளியாகதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். டுவிட்டர் ஹேஷ்டேக்கில் இதுகுறித்து கேள்வி எழுப்பினார்கள். ஒலி வடிவமைப்பை மெருகேற்ற வேண்டி இருந்ததால் இந்த தாமதம் ஏற்பட்டதாக தயாரிப்பாளர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அத்துடன் பிகில் டிரெய்லர் வருகிற 12-ந்தேதி வெளியாகும் என்றும் படக்குழுவினர் அறிவித்தனர். தீபாவளிக்கு 2 வாரங்களே உள்ளதால் படத்தின் தொழில்…

மதுவுக்கு அடிமையாக இருந்தேன் நடிகை சுருதிஹாசன்

மதுவுக்கு அடிமையாக இருந்தேன் என நடிகை சுருதிஹாசன் கூறி உள்ளார். நடிகர் கமல்ஹாசனின் மகளான நடிகை சுருதிஹாசன் தற்போது நடிகர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக லாபம் படத்தில் நடித்து வருகிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு உள்ளிட்ட பிறமொழி படங்களிலும் பிசியாக நடித்து வந்த சுருதிஹாசன், பிரிட்டிஷ் நடிகர் மைக்கேல் கோர்சல் என்பவருடன் நட்பாக பழகி வந்தார். இருவருக்குள்ளும் இருந்த நட்பு காதலாக மாறிய நிலையில் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக தங்களுக்குள் நிலவிய கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து விட்டனர். இதையடுத்து சினிமாவில் இருந்து சிறிது காலம் ஒதுங்கி இருந்தார் சுருதிஹாசன். இந்நிலையில் காதல் முறிவு குறித்து தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த சுருதிஹாசன், நான் மிகவும் கூலான நபர். உணர்வுப்பூர்வமானரும் கூட. நல்லவர்கள் நல்ல…

காதலை முறித்தது ஏன்?நடிகை சுருதிஹாசன் விளக்கம்

லண்டன் இளைஞருடன் காதல் முறிவுக்கான காரணம் குறித்து சுருதிஹாசன் விளக்கம் அளித்துள்ளார். கமல்ஹாசனின் மூத்த மகளான சுருதிஹாசன் ‘லக்’ இந்தி படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து ஒரு ரவுண்ட் வந்தார். பின்னர் லண்டனை சேர்ந்த மைக்கேல் கார்சலை காதலித்தார். அவரை சென்னைக்கு அழைத்து வந்து தந்தையிடமும், மும்பைக்கு சென்று தாய் சரிகாவிடமும் அறிமுகப்படுத்தினார். தற்காலிகமாக நடிப்பதையும் நிறுத்தி இருந்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு உள்ளதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு திடீர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு காதலை முறித்துக்கொண்டனர். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய அத்தியாயம் தொடங்குகிறது என்று சுருதிஹாசன் பதிவிட்டார். இதுபோல் மைக்கேலும் தனித்தனி பாதையில் பயணிக்க உள்ளோம் என்று பதிவிட்டார். காதல் முறிவுக்கான காரணம் குறித்து சுருதிஹாசன் வெளிப்படையாக…

சீன அதிபர் வருகை நடிகர் ரஜினிகாந்திற்கு அழைப்பு

நாளை (11-ம் தேதி) பிற்பகல் ஒன்றரை மணிக்கு சென்னை வரும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு, விமான நிலையத்தில் கலாச்சார வரவேற்பு அளிக்கப்படுகிறது. தொடர்ந்து 1.55 மணிக்கு சென்னை நட்சத்திர விடுதியில் உணவு அருந்துகிறார். அங்கு சற்று ஓய்வெடுத்து விட்டு, மாலை 4.10 மணிக்கு ஜி ஜின்பிங் மாமல்லபுரம் புறப்படுகிறார். மாலை 5 மணிக்கு அர்ஜுனன் தபசு பகுதியில் பிரதமர் மோடி சீன அதிபரை வரவேற்கிறார். அர்ஜுனன் தபசு வரலாற்றை ஜி ஜின் பிங்கிடம் பிரதமர் மோடி எடுத்துரைக்கிறார். அங்கிருந்து வெண்ணை திரட்டி பாறைக்கு சிறிது தூரம் நடந்து செல்கின்றனர். 5.18 மணிக்கு ஐந்து ரதம் பகுதிக்கு சென்று வரலாற்றுச் சின்னங்களை பார்வையிடுகின்றனர். 5.43 மணிக்கு கடற்கரை கோயிலை சென்று பார்வையிடுகின்றனர். அங்கு கலாஷேத்ராவின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. கடற்கரை கோயிலின் புல் தரையிலேயே இரு தலைவர்களும்…

நாட்டின் அபிவிருத்திக்கு முதலிடம் கொடுப்பேன்: சஜித்

நாட்டில் மீண்டும் ஏகாதிபத்தியம் நிறைந்த ஒரு குடும்ப அரசியலுக்கு நாம் வழிகொடுக்க மாட்டோம் என்று குறிப்பிட்ட ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச சகோதரத்துவத்துடன் நாட்டை நாம் கட்டியெழுப்புவோம் என்றும் தெரிவித்தார். ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை வரவேற்கும் நிகழ்வு நேற்று புதன்கிழமை அழுத்கடை பிரதேசத்தில் இடம்பெற்ற முஜிபுர் ரஹ்மான் தலைமையில் இடம்பெற்றிருந்தது அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார். மேலும் அவர் தெரிவித்ததாவது, மதவாதம்,ஏகாதிபத்தியம் நிறைந்த ஒரு ஆட்சியை மீண்டும் ஒரு முறை நாட்டில் இடம்பெற நாங்கள் ஒரு போதும் இடமளிக்க போவதில்லை. ரணசிங்க பிரேமதாச ஒரு போதும் மக்களிடையே ஜாதி பேதம் பார்ப்பதில்லை அனைத்து மக்களையும் ஒன்றிணைத்து முன்னோக்கி செலவதே அவரின் ஆசை,அவர் நாட்டிற்கு செய்த அபிவிருத்திகளை போல் தொடர்ந்தும் நாட்டிற்கு நான் அபிவிருத்திகளை…

கோட்டாபய ராஜபக்‌ஷ சிங்கப்பூர் பயணமானார்

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ இன்று (10) காலை சிங்கப்பூருக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். வைத்தியப் பரிசோதனைக்காகவே அவர் சிங்கப்பூருக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். டி.ஏ. ராஜபக்‌ஷ நூதனசாலை வழக்கு விவகாரம் தொடர்பில் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ தனது சிகிச்சை தொடர்பில் வெளிநாடு செல்வதற்கு அனுமதி வழங்கமாறு விடுத்த வேண்டுகோளுக்கமைய, கடந்த ஒக்டோபர் 03 ஆம் திகதி விசேட மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்ற விசாரணைகளின்போது, நீதிமன்றம் இதற்கான அனுமதியை வழங்கியிருந்தது. அதற்கமைய இம்மாதம் 09ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை சிகிச்சை நிமித்தம் சிங்கப்பூர் செல்ல அவருக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. கோட்டாபய நாளைய தினம் (11) சிங்கப்பூரிலிருந்து நாடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, அவரது இரண்டாவது பிரதான தேர்தல் கூட்டம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (13) மஹர -…

மாற்றுக் கருத்துக்கள் தீர்க்கப்பட்டு விட்டன பொன்சேகா

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் முதலாவது பொதுக்கூட்டம் இன்று (10) பிற்பகல் 02.00 கொழும்பு காலி முகத்திடலில் இடம்பெறவுள்ளது. தனது முதலாவது பிரச்சார கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்னர் இன்று முற்பகல் களனி ரஜமகா விகாரைக்கு சென்ற சஜித் பிரேமதாச அங்கு அவர் ஆசிர்வாரதம் பெற்றுக் கொண்டார். இந்த சந்தர்ப்பத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவும் கலந்து கொண்டிருந்தார். இதன்போது, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு சஜித் பிரேமதாச இவ்வாறு பதிலளித்திருந்தார். கேள்வி - இன்றைய கூட்டம் தொடர்பில்? பதில் - உங்களுக்கும் அழைப்பு விடுக்கிறேன். வந்து பாருங்கள். கேள்வி - எவ்வாறான எதிர்ப்பார்ப்பு உள்ளது? பதில் - நாட்டு மக்களின் எதிர்ப்பார்ப்புதான் எனது எதிர்ப்பார்ப்பு. இன்றைய தினம் இடம்பெறவுள்ள கூட்டம் கட்சியை வெற்றிப் பெறச் செய்வதற்கான…