மணிரத்னம் தேசத் துரோக வழக்கு ரத்து

கும்பல் வன்முறை தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய இயக்குநர் மணிரத்னம், ராமச்சந்திர குஹா, அபர்ணா சென் உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீது தேசத்துரோகம் உள்ளிட்ட பிரிவுகளில் பதிவு செய்யப்பட்ட வழக்கை பிஹார் காவல்துறையினர் ரத்து செய்துள்ளனர். நாட்டில் நடக்கும் கும்பல் வன்முறையைக் கண்டித்தும், பிரதமர் மோடி தலையிடக்கோரியும், கடந்த ஜூலை 23-ம் தேதி இயக்குநர் மணிரத்னம், திரைப்படத் தயாரிப்பாளர் ஷியாம் பெனகல், அபர்ணா சென், பாடகர் சுபா முத்கல், வரலாற்று ஆய்வாளர் ராமச்சந்திர குகா, பிரபல வங்க திரைப்பட நடிகர் சவுமித்ரா சாட்டர்ஜி, இயக்குநர் மணிரத்னம், நடிகை ரேவதி, சமூக சேவகர் பினாயக் சென், சமூகவியலாளர் ஆஷிஷ் நந்தி உட்பட முக்கியமான பிரபலங்கள் 49 பேர் பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் எழுதினர். இந்தக் கடிதத்துக்கு எதிராக பிஹார் மாநிலம், முசாபர்பூரைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதிர்…

மீண்டும் சர்ச்சைக் கதையில் நடிக்கும் அமலா பால்!

ஆடை படத்தை தொடர்ந்து மீண்டும் அந்த மாதிரி ஒரு சர்ச்சைக் கதையில் நடிக்கும் அமலா பால்! ஆடை படம் வெளியான பிறகு நிர்வாணமாக நடித்திருந்த அமலா பால் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த நிலையில் அமலா பால் மீண்டும் ஒரு ஆபாச படத்தைத் தேர்ந்தெடுத்து நடிக்க உள்ளார். நெட்பிலிக்ஸ் இணையத்தில் ’லஸ்ட் ஸ்டோரீஸ்’ எனும் வெப்சீரிஸ் பெண்களுக்குக் காமத்தின் மீது இருக்கும் ஈடுபாட்டைச் சொல்லும் விதமாகக் கடந்த ஆண்டு வெளியானது. இந்தியில் வெளியான இதில் கியாரா அத்வானி, ராதிகா ஆப்தே, மனிஷா கொய்ராலா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அதில் கியாரா அத்வானி தனது கணவர் மற்றும் மாமியார் முன்பு சுய இன்பத்தில் ஈடுபட்டு சிக்கிக் கொள்வது போன்ற காட்சியில் நடித்திருந்தது கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது. ஆனால் விமர்சனங்களை எல்லாம் தாண்டி இந்திய அளவில் அதிக பேரால் பார்க்கப்பட்ட…

மரணஅறிவித்தல் : அமரர் அருணாச்சலம் செல்வக்கதிரமலை (செல்வா அண்ணா)

அன்னையின் மடியில் ஆண்டவன் அடியில் 18.03.1935 08.10.2019 யாழ் வல்வெட்டித்துறை பொலிகண்டியை பிறப்பிடமாகவும், டென்மார்க் பில்லுண்ட் ஜ வதிவிடமாகவும் கொண்ட அருணாச்சலம் செல்வக்கதிரமலை அவர்கள் 08.10.2019 அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான அருணாச்சலம், செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை (சுவீப), செல்வரெத்தினம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும், வசந்தமலர் அவர்களின் அன்புக் கணவரும், தவச்செல்வன், ரூபராணி, சத்யப்பிரியா ஆகியோரின் பாசமிகு தந்தையும், சஜிதா, பரணீதரன், ரமேஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்றவர்களான வேலும்மயிலும், செல்வரெட்ணம், இராசமாணிக்கம் ஆகியோரின் அன்பு சகோதரரும், செல்வமலர், நிர்மலாதேவி, காலஞ்சென்ற சாந்தகுமாரி, யோகேந்திரன், காலஞ்சென்ற சந்திரகுமாரி, சிவகுமார், பாலகுமார், காலஞ்சென்ற செல்வகுமாரி ஆகியோரின் அன்பு மைத்துணரும், பிரீத்திகா, மதுமிதா, சினேகா, பானுஷா, தூயவன், கீர்த்தன், சயன், நிதன், ஆதன் ஆகியோரின் அருமைமிகு பேரனும் ஆவார். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர்…