நடிகர்களுக்கு மட்டும் முக்கியத்துவமா? நயன்தாரா பேட்டி

திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் நயன்தாரா. நடிகர்களுக்கு மட்டும் முக்கியத்துவமா? நயன்தாரா பேட்டி அளித்துள்ளார்.

திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் நயன்தாரா வட இந்திய ஆங்கில இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

“சினிமாவில் எல்லா முடிவுகளையும் நானே எடுக்கிறேன். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்கும் நீங்கள் மற்ற நடிகர்கள் படங்களில் ஏன் கவர்ச்சியாக நடிக்கிறீர்கள் என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர். சில நேரங்களில் என்னையும் மீறி அப்படி நடிக்க வேண்டிய நெருக்கடிகள் ஏற்படுகின்றன. கவர்ச்சியாக நடிக்க முடியாது என்று எத்தனை நாட்கள்தான் சொல்லிக்கொண்டே இருக்க முடியும். சவாலான வேடங்களில் துணிந்து நடிப்பேன். வெற்றியை எனது தலையில் ஏற்றிக்கொண்டது இல்லை. எப்போதும் ஒருவிதமான பயத்தில்தான் இருக்கிறேன். நான் நடித்தது சரியான படமாக இருக்காதோ என்ற பதற்றமும் இருக்கும்.

என்னை ஏளனம் செய்பவர்களுக்கு வெற்றி படங்களில் நடிப்பதன் மூலம் பதிலடி கொடுக்கிறேன். தனிமையை விரும்புகிறேன். இந்த உலகம் என்னை பற்றி என்ன நினைக்கிறது என்று கவலைப்படுவது இல்லை. என்னுடைய சில பேச்சுகள் திரித்து வெளியிடப்பட்டதால் 10 ஆண்டுகளாக பேட்டி அளிக்காமல் தள்ளியே இருக்கிறேன்.

படங்களில் நடிப்பது மட்டும்தான் எனது வேலை. அதை ஒழுங்காக செய்து பெயர் வாங்க விரும்புகிறேன். சினிமாவில் நடிகர்களுக்கு மட்டுமே அதிகாரங்களும் முக்கியத்துவமும் இருக்க வேண்டுமா? நடிகைகள் தங்களுக்கு என்ன வேண்டும் என்பதை கேட்க தயங்கக் கூடாது.” இவ்வாறு நயன்தாரா கூறினார்.

Related posts