இலங்கையர் நால்வர் லண்டனில் கைது

இலங்கையர்கள் நால்வர் லண்டன் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் அந்நாட்டில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனும் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாக, வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடந்த சனி மற்றும் ஞாயிறு தினங்களில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் பெண்ணொருவர் அடங்குவதாகவும் அவர் 35 வயதுடையவர் எனவும், பிரித்தானிய பொலிஸார் தெரிவித்தனர்.

ஏனைய மூவரும் 35, 39 மற்றும் 41 வயதுடையவர்கள் ஆவர்.

இவர்கள் பிரித்தானிய பொலிஸ் மற்றும் குற்ற சாட்சிய சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள ஆண்கள் மூவரும் விசாரணையின் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதோடு, குறித்த பெண் விடுவிக்கப்பட்டுள்ளார்.

Related posts