அருணாசலம் செல்வக்கதிரமலை அவர்கள் மரணமடைந்தார்

டென்மார்க் பிலுண்ட் நகரில் வாழ்ந்தவரும், தாயகத்தில் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகக் கொண்டவருமான அருணாசலம் செல்வக்கதிரமலை அவர்கள் இன்று 08.10.2019 டென்மார்க் பிலுண்ட் நகரில் மரணமடைந்தார். டென்மார்க்கில் குடியேறிய நாள் முதல் சமுதாய மேம்பாட்டுக்காக அருந்தொண்டாற்றிய அன்னாரின் பிரிவு தமிழ் மக்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். தாயகத்தில் மக்கள் படும் துயர் கண்டு நெஞ்சு பொறுக்க முடியாது கலங்கி, அவர்களுக்கு உதவுவதற்காக நீண்ட காலமாக அருந்தொண்டாற்றியவர். சைவத்தமிழ் பண்பாட்டு பேரவையில் முக்கியமான உறுப்பினராக பணியாற்றி சைவமும் தமிழும் மேம்பட தன்னாலான அத்தனை பணிகளையும் மேற்கொண்டவர். தமிழ் பாடசாலைகளில் நவராத்திரி விழாக்களை சிறப்பாக நடத்த தொடர்ந்து பணியாற்றியவர், முத்தமிழ் விழாக்கள் டென்மார்க்கில் நடைபெற்ற போது அவற்றோடு இணைந்து செயலாற்றியவர். கிறீன்ஸ்ரெல் நகரத்தின் கலாச்சார கலையகத்தில் இவருடைய பங்களிப்பு அளப்பெரியது.. வல்வை மண்ணுக்காக ஆற்றிய தொண்டுகள், கந்தவன கடவை முருகன் மேல்…

பிரபல நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி காலமானார்

தேனி மாவட்டம் குமுளியில் நடந்த படப்பிடிப்பின்போது நகைச்சுவை நடிகர் கிருஷ்ணமூர்த்தி மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த நடிகர் கிருஷ்ணமூர்த்தி, நடிகர் வடிவேலுவுடன் இணைந்து நடித்த காமெடி காட்சிகள் ரசிகர்களை கவர்ந்தவை. அவர் தவசி படத்தில் ``எஸ்க்யூஸ்மி, சாரி ஃபார் த டிஸ்டபென்ஸ், இந்த அட்ரஸ் எங்க இருக்கு கொஞ்சம் சொல்றீங்களா” என்று நடிகர் வடிவேலுவிடம் பேசும் ஒற்றை வசனத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடம் பிடித்தவர் ஆனார். குணச்சித்திர வேடங்களிலும் அவர் நடித்துள்ளார். விளம்பர தயாரிப்பு உதவி மேலாளராக சினிமாவில் தன் வாழ்க்கையை தொடங்கியவர். நடிகர் வடிவேலுவின் குழுவில் இணைந்து சிறு சிறு வேடங்களில் நடித்து பின்னர் பிரபல நகைச்சுவை நடிகரானார். நெருங்கிய நண்பர்களான நடிகர் வடிவேலு மற்றும் கிருஷ்ணமூர்த்தி இணைந்து நடித்துள்ள காட்சிகள் அதிக வரவேற்பு பெற்றன. நான், நான்…

நடிகர்களுக்கு மட்டும் முக்கியத்துவமா? நயன்தாரா பேட்டி

திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் நயன்தாரா. நடிகர்களுக்கு மட்டும் முக்கியத்துவமா? நயன்தாரா பேட்டி அளித்துள்ளார். திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் நயன்தாரா வட இந்திய ஆங்கில இதழுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- “சினிமாவில் எல்லா முடிவுகளையும் நானே எடுக்கிறேன். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளில் நடிக்கும் நீங்கள் மற்ற நடிகர்கள் படங்களில் ஏன் கவர்ச்சியாக நடிக்கிறீர்கள் என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர். சில நேரங்களில் என்னையும் மீறி அப்படி நடிக்க வேண்டிய நெருக்கடிகள் ஏற்படுகின்றன. கவர்ச்சியாக நடிக்க முடியாது என்று எத்தனை நாட்கள்தான் சொல்லிக்கொண்டே இருக்க முடியும். சவாலான வேடங்களில் துணிந்து நடிப்பேன். வெற்றியை எனது தலையில் ஏற்றிக்கொண்டது இல்லை. எப்போதும் ஒருவிதமான பயத்தில்தான் இருக்கிறேன். நான் நடித்தது சரியான படமாக இருக்காதோ என்ற பதற்றமும் இருக்கும். என்னை ஏளனம் செய்பவர்களுக்கு வெற்றி படங்களில் நடிப்பதன் மூலம்…

பிகில் படத்தின் டிரைலர் அக்.12ம் தேதி

நடிகர் விஜய் நடிக்கும் பிகில் படத்தின் டிரைலர் அக்.12ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. அட்லி இயக்கத்தில் விஜய் தந்தை, மகனாக நடித்துள்ள ‘பிகில்’ படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுத்துள்ளனர். இதில் மகன் விஜய் கால்பந்து பயிற்சியாளராக வருகிறார். ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இப்படத்தில் ஜாக்கி ஷெராப், விவேக், யோகிபாபு, கதிர் போன்றோர் நடித்துள்ளார்கள். ஒளிப்பதிவு - ஜி.கே. விஷ்ணு, பாடல்கள் - விவேக், படத்தொகுப்பு - ரூபன் எல். ஆண்டனி, கலை - முத்துராஜ், சண்டைப் பயிற்சி - அனல் அரசு. தீபாவளிக்கு வெளியாகவிருக்கும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த செப்டம்பர் 19-ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில், பிகில் படத்தின் டீஸர் குறித்த அறிவிப்பு இன்று வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.…

அதிக நிலவுள்ள கிரகம் சனி மேலும் 20 புதிய நிலவுகள்

சனி கிரகத்திற்கு மேலும் 20 புதிய நிலவுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.அதிக நிலவுள்ள கிரகம் வியாழன் பெயரை சனி கிரகம் பெற்றது. சனி கிரகத்தை சுற்றி இருபது புதிய நிலவுகள் (துணை கோள்கள்) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் வளைய கிரகமான சனி கிரகத்திற்கு மொத்தம் 82 நிலவுகள் உள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். சூரிய குடும்பத்தில் அதிக நிலவுகள் வைத்து இருந்த கிரகம் வியாழன் ( 79 நிலவுகள்) என்ற பெருமையை தற்போது சனிக்கிரகம் பெற்று உள்ளது. கார்னகி இன்ஸ்டிடியூஷன் பார் சயின்ஸ் நிறுவனத்தின் வானியலாளர் ஷெப்பர்டும் அவரது குழுவும் ஹவாய் தீவில் ஒரு நவீன தொலைநோக்கியைப் பயன்படுத்தி சனியின் 20 புதிய நிலவுகளைக் கண்டுபிடித்து உள்ளனர். நமது சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய கிரகமான வியாழன் மட்டுமே மிகப்பெரிய சந்திரனைக் கொண்டுள்ளது. வியாழனின் மிகப்பெரிய நிலவின்…

இலங்கையர் நால்வர் லண்டனில் கைது

இலங்கையர்கள் நால்வர் லண்டன் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அந்நாட்டில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனும் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளதாக, வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த சனி மற்றும் ஞாயிறு தினங்களில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் பெண்ணொருவர் அடங்குவதாகவும் அவர் 35 வயதுடையவர் எனவும், பிரித்தானிய பொலிஸார் தெரிவித்தனர். ஏனைய மூவரும் 35, 39 மற்றும் 41 வயதுடையவர்கள் ஆவர். இவர்கள் பிரித்தானிய பொலிஸ் மற்றும் குற்ற சாட்சிய சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள ஆண்கள் மூவரும் விசாரணையின் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதோடு, குறித்த பெண் விடுவிக்கப்பட்டுள்ளார்.