தமிழர்களை நாங்கள் கொல்லவில்லை : கோத்தா

போரை நடத்தி, தமிழ் மக்­களை நாங்கள் தான் கொன்­றொ­ழித்தோம் என்ற தோற்­றப்­பா­டொன்று இன்­ற­ளவில் தமிழர் மத்­தி­யிலே ஏற்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது. உண்­மையில் நாங்கள் போரை உரு­வாக்­க­வில்லை. அது உரு­வா­கு­வ­தற்கு கார­ண­மா­கவும் இருக்­க­வில்லை. நாங்கள் செய்­த­தெல்லாம் நீண்­ட­கால யுத்­த­மொன்றை முடி­விற்குக் கொண்­டு­வந்­தமை மாத்­தி­ரமே என்று ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ரான முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­தா­பய ராஜபக் ஷ தெரி­வித்தார்.

அப்­பாவி பொது­மக்­களை கொன்­ற­தாக எம்­மீது பழி சுமத்தி, மக்கள் மத்­தியில் தவ­றான கருத்­து­ரு­வாக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு போரை தோற்­று­வித்­த­வர்கள் முயற்­சிக்­கின்­றார்கள். எனவே அத்­த­கைய தவ­றான புரி­தலை முறி­ய­டித்து, நாம் போரை முடி­விற்குக் கொண்­டு­வந்து நாட்­டிற்கு நல்­ல­தையே செய்தோம் என்­பதை மலை­யகம் உள்­ளிட்ட பிர­தே­சங்­களில் வாழும் தமிழ் மக்­க­ளுக்கு எடுத்­துக்­கூற வேண்டும் என்றும் கூறினார்.

மலை­யக இளை­ஞ­ர­ணி­யினால் நேற்று சனிக்­கி­ழமை பத்­த­ர­முல்­லை­யி­லுள்ள வோட்டர்ஸ் எட்ஜில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த மலை­யக இளைஞர் கருத்­த­ரங்கில் பிர­தம விருந்­தி­ன­ராகக் கலந்­து­ கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு குறிப்­பிட்டார்.

கோத்­தாபய ராஜபக் ஷ எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்­தலில் வேட்­பா­ள­ராகக் கள­மி­றங்­கி­யுள்ள நிலையில் மலை­யக மக்­களின் கல்வி, பொரு­ளா­தாரம், சமூகம் உள்­ளிட்ட அனைத்து துறை­க­ளிலும் வளர்ச்­சியை ஏற்­ப­டுத்தும் வகையில் அவர் முன்­வைப்­ப­தற்கு எதிர்­பார்த்­தி­ருக்கும் திட்­டங்கள் தொடர்பில் கருத்­த­ரங்­கிற்கு வருகை தந்­தி­ருந்த மலை­யக இளைஞர் யுவ­தி­களால் கோத்­தா­பய ராஜபக் ஷவிடம் கேள்­விகள் எழுப்­பப்­பட்­டன. அவற்­றுக்­கான பதில்­க­ளையும் தன்­னு­டைய உரையில் வழங்­கினார்.

அங்கு அவர் மேலும் கூறு­கையில்,

ஒவ்­வொரு முறையும் தேர்தல் நெருங்கும் போது உங்­க­ளு­டைய தேவை­களை பூர்த்­தி­செய்­வ­தாக அர­சி­யல்­வா­தி­களால் வாக்­கு­று­திகள் வழங்­கப்­ப­டு­வதும், பின்னர் அவை மறக்­க­டிக்­கப்­ப­டு­வதும் வழ­மை­யாக நடை­பெறும் விட­ய­மாகும். எனவே அத்­த­கைய வாக்­கு­று­தி­களை விடுத்து மலை­யக இளைஞர், யுவ­தி­க­ளா­கிய உங்­க­ளு­டைய எதிர்­கா­லத்தை எவ்­வாறு உங்­க­ளு­டைய கைக­ளுக்குள் கொண்­டு­வ­ரு­வது என்­பது குறித்து பேச­வி­ரும்­பு­கின்றேன்.

மலை­யக மக்­க­ளுக்­கான கல்­வித்­தேவை இது­வ­ரையில் முறை­யாக பூர்த்தி செய்­யப்­ப­ட­வில்லை. அதே­போன்று கடந்த 100 வரு­டங்­க­ளுக்கு முன்பு காணப்­பட்ட வீடு­களே இன்­னமும் உள்­ளன.

எனவே மலை­ய­கத்தின் அபி­வி­ருத்தி தொடர்பில் குறு­கிய மற்றும் நீண்­ட­கால அடிப்­ப­டையில் சிந்­திக்க வேண்டும். அதேபோன்று பெருந்தோட்டத்துறை மற்றும் தேயிலை உற்பத்தி பொருளாதாரத்தை மேம்படுத்தல் குறித்து மாத்திரம் திட்டங்களை வகுக்காமல், அங்கு வாழும் மனிதர்களை மையப்படுத்தி, அவர்களுடைய தேவைகளை பூர்த்திசெய்து, வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் வகையில் திட்டங்களை உருவாக்க வேண்டும் என்றார்.

Related posts