சமல் ராஜபக்‌ஷவும் ஜனாதிபதித் தேர்தல் களத்தில்

பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சுயாதீன வேட்பாளராக கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

முன்னாள் சபாநாயகரான சமல் ராஜபக்‌ஷ, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷவின் மூத்த சகோதரராவார்.

ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பு (‘ஸ்ரீ லங்கா நிதஹஸ் பொதுஜன சந்தானய’) சார்பான வேட்பாளராக அவருக்காக கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இன்றைய தினம் (04) சஜித் பிரேமதாஸவுக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டதோடு, தேசிய மக்கள் கட்சி சார்பில் மகேஷ் சேனாநாயக்கவுக்கும் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.

இதேவேளை முன்னாள் பிரதியமைச்சர் பஷீர் சேகுதாவூத், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஐ.எம். இல்யாஸ் ஆகியோருக்கான ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணம், சுயேச்சை வேட்பாளர்களாக செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. ரஜீவ விஜேசிங்க, குமார வெல்கம, ஆகியோரும் சுயேச்சை வேட்பாளராக கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

முன்னிலை சோசலிச கட்சி சார்பில் துமிந்த நாகமுவ, சிங்களஜாதிக பெரமுன கட்சி சார்பில் ஜயந்த லியனகே ஆகியோரும் இன்று (04) ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.

அதற்கமைய இது வரை, அங்கீகாரம் பெற்ற 16 கட்சிகளும், 03 ஏனைய கட்சிகள் மற்றும் 14 சுயேச்சை வேட்பாளர்கள் சார்பிலும் ஜனாதிபதித் தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts