எம்.ஜி.ஆர். வேடத்தில் அரவிந்தசாமி

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை தலைவி என்ற பெயரில் படமாகிறது. பதிவு: அக்டோபர் 05, 2019 04:48 AM தமிழில் ‘தாம்தூம்’ படத்தில் கதாநாயகியாக வந்த பிரபல இந்தி நடிகை கங்கனா ரணாவத் ஜெயலலிதா வேடத்தில் நடிக்கிறார். கதாபாத்திரத்துக்காக அவர் பரதநாட்டியம் மற்றும் தமிழ் கற்று வருகிறார். ஏ.எல்.விஜய் டைரக்டு செய்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் தயாராகிறது. இந்தி பதிப்புக்கு ‘ஜெயா’ என்று தலைப்பு வைத்தனர். ஆனால் கங்கனா ரணாவத் பெயரை மாற்ற வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதால் இந்தியிலும் தலைவி பெயரிலேயே தயாராகிறது. இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடந்தது. எம்.ஜி.ஆர். வேடத்தில் அரவிந்தசாமி நடிக்க இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் கசிந்தன. தற்போது அதை உறுதிப்படுத்தி உள்ளனர். இவர் ரோஜா, பம்பாய் உள்ளிட்ட படங்களில் நடித்து…

பொன்னியின் செல்வனில் இருந்து சத்யராஜ் திடீர் விலகல்!

‘பொன்னியின் செல்வனில்’ இருந்து சத்யராஜ் விலகிக் கொண்டதாக கூறப்படுகிறது. இந்திய சினிமாவில் இதுவரை பார்த்திராத பிரமாண்டமான படங்களாக ‘பாகுபலி,’ ‘பாகுபலி-2’ ஆகிய 2 படங்களும் அமைந்தன. அதில், ‘கட்டப்பா’ என்ற முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடித்து இருந்தார். அது, கதாநாயகனுக்கு இணையான குணச்சித்ர வேடம். 2 படங்களிலும் சத்யராஜின் திறமையான நடிப்பு பேசப்பட்டது. இதையடுத்து மணிரத்னம் டைரக்டு செய்யும் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில், சத்யராஜ் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அந்த படத்தில், ‘பழுவேட்டரையர்’ என்ற முக்கிய வேடத்தில் சத்யராஜ் நடிக்க இருந்தார். இந்த நிலையில், ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் இருந்து சத்யராஜ் திடீரென்று விலகிக் கொண்டார். ‘‘6 மாதங்கள் கால்ஷீட் வேண்டும்...இடையில் வேறு எந்த படத்திலும் நடிக்க கூடாது’’ என்று நிபந்தனை விதிக்கப்பட்டதால், சத்யராஜ் விலகிக் கொண்டதாக கூறப்படுகிறது. ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ஆதித்ய கரிகாலன் வேடத்தில் விக்ரம்,…

தமிழர்களை நாங்கள் கொல்லவில்லை : கோத்தா

போரை நடத்தி, தமிழ் மக்­களை நாங்கள் தான் கொன்­றொ­ழித்தோம் என்ற தோற்­றப்­பா­டொன்று இன்­ற­ளவில் தமிழர் மத்­தி­யிலே ஏற்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது. உண்­மையில் நாங்கள் போரை உரு­வாக்­க­வில்லை. அது உரு­வா­கு­வ­தற்கு கார­ண­மா­கவும் இருக்­க­வில்லை. நாங்கள் செய்­த­தெல்லாம் நீண்­ட­கால யுத்­த­மொன்றை முடி­விற்குக் கொண்­டு­வந்­தமை மாத்­தி­ரமே என்று ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் ஜனா­தி­பதி வேட்­பா­ள­ரான முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­தா­பய ராஜபக் ஷ தெரி­வித்தார். அப்­பாவி பொது­மக்­களை கொன்­ற­தாக எம்­மீது பழி சுமத்தி, மக்கள் மத்­தியில் தவ­றான கருத்­து­ரு­வாக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு போரை தோற்­று­வித்­த­வர்கள் முயற்­சிக்­கின்­றார்கள். எனவே அத்­த­கைய தவ­றான புரி­தலை முறி­ய­டித்து, நாம் போரை முடி­விற்குக் கொண்­டு­வந்து நாட்­டிற்கு நல்­ல­தையே செய்தோம் என்­பதை மலை­யகம் உள்­ளிட்ட பிர­தே­சங்­களில் வாழும் தமிழ் மக்­க­ளுக்கு எடுத்­துக்­கூற வேண்டும் என்றும் கூறினார். மலை­யக இளை­ஞ­ர­ணி­யினால் நேற்று சனிக்­கி­ழமை பத்­த­ர­முல்­லை­யி­லுள்ள வோட்டர்ஸ் எட்ஜில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த மலை­யக இளைஞர் கருத்­த­ரங்கில்…

சமல் ராஜபக்‌ஷவும் ஜனாதிபதித் தேர்தல் களத்தில்

பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சுயாதீன வேட்பாளராக கட்டுப்பணம் செலுத்தியுள்ளார். முன்னாள் சபாநாயகரான சமல் ராஜபக்‌ஷ, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்‌ஷவின் மூத்த சகோதரராவார். ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பு (‘ஸ்ரீ லங்கா நிதஹஸ் பொதுஜன சந்தானய’) சார்பான வேட்பாளராக அவருக்காக கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்றைய தினம் (04) சஜித் பிரேமதாஸவுக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டதோடு, தேசிய மக்கள் கட்சி சார்பில் மகேஷ் சேனாநாயக்கவுக்கும் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது. இதேவேளை முன்னாள் பிரதியமைச்சர் பஷீர் சேகுதாவூத், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஐ.எம். இல்யாஸ் ஆகியோருக்கான ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணம், சுயேச்சை வேட்பாளர்களாக செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. ரஜீவ விஜேசிங்க, குமார வெல்கம, ஆகியோரும் சுயேச்சை வேட்பாளராக கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். முன்னிலை சோசலிச கட்சி சார்பில் துமிந்த நாகமுவ, சிங்களஜாதிக…

சுபவேளை பார்த்து வேட்புமனுவில் கையொப்பமிட்டார் கோட்டாபய

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுண (SLPP) தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபக ராஜபக்ஷ இன்று (06) காலை தனக்கான வேட்புமனு விண்ணப்பத்தில் கையெழுத்திட்டார். ஏற்கனவே பார்க்கப்பட்ட சுப வேளையான முற்பகல் 9.46 மணிக்கு மிரிஹானவில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச்சந்தர்ப்பத்தில் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுணவில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரசன்னமாகியிருந்ததோடு, ஶ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பு சார்பில் கட்டுப்பணம் செலுத்திய, கோட்டாபயவின் மூத்த சகோதரரான சமல் ராஜபக்‌ஷவும் பிரசன்னமாகியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள 8ஆவது ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் நாளை (07) மு.ப. 9.00 மணி முதல் 11.00 மணி வரை தேர்தல்கள் செயலகத்தில் ஏற்றுக்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

கால எல்லை நிறைவு – 41 வேட்பாளர்கள் களத்தில்

ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் நடவடிக்கை இன்று மதியம் 12 மணியுடன் நிறைவுக்கு வந்துள்ளது. அதனடிப்படையில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக 41 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர். இவர்களுக்குள் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் ஆகியவர்களும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

தமிழ் அரசியல் தலைவர்கள் முன்வரவேண்டும் ?

கட்சி அரசியலுக்காக பேரினவாதிகளுக்கு களம் அமைத்துக்கொடுக்காமல் தமிழ் மக்களின் நலனை முன்னிலைப்படுத்தி ஒன்றுமையாக ஓரணியில் நின்று ஜனாதிபதி தேர்தலை எதிர்கொள்ள வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் அரசியல் தலைவர்கள் முன்வரவேண்டும் என ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவரும், இந்து சமய விவகார அமைச்சின் கண்காணிப்பு பாராளுமன்ற உறுப்பினருமான வேலுகுமார் தெரிவித்தார். ஜனநாயக மக்கள் முன்னணியின் அரசியல் செயற்பாட்டாளர்களுடன் இன்று (06) காலை கண்டி அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், தமிழர்களின் ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டபின்னர் ‘ஒற்றுமை’ என்ற ஆயுதமே தமிழர்களுக்கு எஞ்சியிருக்கின்ற இறுதி அஸ்திரமாகும். எனவே, அந்த ஒற்றுமையை சிதைத்து, தமிழர்களை கூறுபோடுவதற்காக பேரினவாதிகள் பலவழிகளிலும் பொறிகளை வைத்துவருகின்றனர். இந்த கபடநோக்கத்தை – சூழ்ச்சித் திட்டத்தை அறியாமல், வடக்கு, கிழக்கிலுள்ள அரசியல் தலைவர்கள், கொள்கைகளுக்கு…