நாளை என்.ஈ.பி.எல் இறுதியாட்டம் : வல்வை எப்.சி எதிர் டில்கோ கெங்கியுரயஸ்..!

வடக்கு கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கிய என்.ஈ.பி.எல் உதை பந்தாட்டப் போட்டியின் இறுதியாட்டம் நாளை 05.10.2019 சனிக்கிழமையன்று இலங்கை நேரம் இரவு 20.00 மணிக்கு யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.

தென்னாசியாவிலேயே இரண்டாவது பெரிய பரிசு தொகைக்குரிய போட்டி இதுவாகும். முதல் மூன்று பரிசுகளும் ஒரு கோடி இலங்கை ரூபா வழங்கப்படும். முதல் பரிசு 50 இலட்லம் ரூபாய்களாகும்.

இந்த ஆட்டத்தில் மொத்தம் 12 அணிகள் மோதி இறுதியாட்டம் நெருங்கியுள்ளது. அத்தருணம் விளையாட்டுத்துறை அமைச்சர், கிரிக்கட் ஆட்டக்காரர் சங்கக்கார, வடக்கு ஆளுநர் சுரேந் ராகவன் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் பங்கேற்கிறார்கள்.

சர்வதேச தரத்தில் உதைபந்தாட்டத்தை உருவாக்கி வருமானம் தரும் தொழிலாக மாற்றி, முன்னெடுக்கப்பட்ட பெரு முயற்சியாகும்.

வல்வை எப்.சி அணி உரிமையாளர் டென்மார்க் ரவிசங்கர் சுகதேவன் தற்போது இந்த போட்டிகளை காண சென்றுள்ளார். தாயக நிர்வாகி டிவனியா முகுந்தன், டென்மார்க் கஜன் ஆகியோரும் இப்போ அங்கு நிற்கிறார்கள்.

நாளை ஐ.பி.சி இதை நேரடியாக ஒளிபரப்ப இருக்கிறது.. முகநூலிலும் இதை நீங்கள் காண முடியும். டில்கோ கெங்கியுரயஸ் அணியும் மோதுகின்றன.

போருக்கு பின் நடக்கும் புதிய நம்பிக்கை தரும் முயற்சி என்று இதை பாராட்ட முடியும். இளைஞர்களை தன்னம்பிக்கை மிக்கவர்களாக உருவாக்குவோம் என்று வெறுமனே பேசுவதில் பயன் எதுவும் இல்லை. அவர்கள் முன்னேற களத்தை அமைத்துக் கொடுக்க வேண்டியது ஒரு நாட்டின் கடமையாகும்.

இப்பணி போல மற்றைய விளையாட்டுக்களும் முன்னெடுக்கப்பட்டு சமுதாயம் நல்வழி பெற புலம் பெயர் தமிழர் மேலும் மேலும் ஆதரவு வழங்க வேண்டும்.

வடக்கையும் கிழக்கையும் இணைத்தது யார் என்று கேட்டால் அது என்.ஈ.பி.எல் உதைபந்தாட்டம் என்றால் மிகைக்கூற்றல்ல..

அலைகள் 04.10.2019 வெள்ளி மாலை

Related posts