அலைகள் வாராந்த பழமொழிகள் 03.10.2019

01. நீங்கள் பிரமாண்டமாக சிந்திக்கும் ஒருவராக இருந்தால் பிறர் உங்களை கௌரவப்படுத்தவில்லை என்பது போன்ற சின்ன சின்ன விடயங்களை பெரிது படுத்த மாட்டீர்கள். 02. அற்பமான விடயங்களை சிந்தித்துப் பார்க்காமல் மாபெரும் நோக்கத்தின் மீது உங்கள் பார்வையை திசை திருப்புங்கள். தேவையற்ற வாக்குவாதங்களை தவிருங்கள். 03. திருமணத்தை பொறுத்தவரை அமைதியும் மகிழ்ச்சியும்தான் மாபெரும் நோக்கமே அல்லாது வாய் சண்டையில் வெற்றி பெறுவதோ அல்லது நான்தான் முன்னரே கூறினேனே என்று குத்திக்காட்டுவதோ அல்ல. 04. உங்களின் கீழ் வேலை செய்யும் ஊழியரின் முழுமையான ஆற்றலை வளர்த்தெடுப்பதே உங்கள் நோக்கமாக இருக்க வேண்டுமே அல்லாது அவர்கள் மீது சின்ன சின்ன குறைகளை பிடிப்பதல்ல. 05. ஒரு சண்டையில் வெற்றி பெற்றுவிட்டு ஒட்டு மொத்த போரிலும் தோற்பது முட்டாள்தனம். எத்தனை போரில் தோற்றாலும் கடைசியில் ஒட்டு மொத்த போரிலும் வெல்வதே வெற்றியாகும்.…

ஹீரோக்களை விட ஹீரோயின்களுக்கு அதிக கஷ்டம்; சமந்தா

சினிமாவில் ஹீரோக்களைவிட ஹீரோயின்களுக்கு அதிக கஷ்டம் இருக்கிறது என்றார் சமந்தா. அவர் கூறியதாவது: சினிமாவில் நடிப்பு, தொழில் நுட்பம், தயாரிப்பு எதிலும் பெண்கள் சளைத்தவர் கள் இல்லை. இத்துறையில் ஹீரோக்களை விட ஹீரோயின்கள்தான் அதிக கஷ்டப்படுகிறார்கள். பெண் இயக்குனர், ஆண் இயக்குனர் என்ற வித்தியாசம் போக வேண்டும். நான் நடித்த ‘ஓ பேபி’ தெலுங்கு படத்துக்கு இயக்குனரோடு சேர்ந்து 8 பெண்கள் வேலை செய்தோம். ஆண்களுக்கு இணையாக உழைத்தனர். ஒரு நாள் கூட படப்பிடிப்பில் தாமதம் ஏற்படவில்லை.எனக்கு திருமணம் ஆன பிறகு என்னை சந்திக்கும் பலரும் எப்போது குழந்தை பெற்றுக்கொள்வீர்கள் என்கிறார்கள். எப்போது குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்யும் உரிமை எனக்கு இருக்கிறது. எப்போது தோன்றுகிறதோ அப்போது பெற்றுக்கொள்வேன். இவ்வாறு சமந்தா கூறினார்.

நடிகர் மகனை காதலிக்கும் நடிகை மகள்

காதல் யாருக்கும் எப்போது வேண்டுமானாலும் வரலாம். சினிமா நட்சத்திரங்களுக்கும் அப்படித்தான். படத்தில் நடிக்கும்போது அல்லது இணைந்து பணியாற்றும்போது காதல் முற்றி கடைத்தெருவுக்கு வந்து பின்னர் கல்யாணத்தில் முடிந்திருக்கிறது. சில காதல் பிய்த்துக்கொண்டு ஓட்டமெடுத்தும் இருக்கிறது. நடிகை லிசி, இயக்குனர் பிரியதர்ஷன் மகள் கல்யாணி. இவர் 2 வருடத்துக்கு முன்புதான் நடிக்க வந்தார். ‘ஹலோ’ தெலுங்கு படத்தில் அறிமுகமானவர் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார். தமிழில், சிவகார்த்திகேயன் ஜோடியாக ஹீரோ படத்தில் நடிக்கிறார். கல்யாணியும், நடிகர் மோகன்லால் மகன் பிரணவும் சிறுவயது முதலே பழகி வருகின்றனர். சிறுவயது நட்பு வாலிப வயசானதும் காதலாக மாறியிருக்கிறது. பிரணவும் தற்போது படங்களில் நடித்து வருகிறார். கல்யாணி தந்தையும் இயக்குனருமான பிரியதர்ஷன், நடிகர் மோகன்லால் டிகிரி தோஸ்த்துக்கள். பிரியதர்ஷன் இயக்கத்தில் பல்வேறு படங்களில் மோகன்லால் நடித்திருக்கிறார். இரண்டு குடும்பத்தினரும் அவ்வளவு நெருக்கும். கல்யாணி,…

தனுஷ் படத்தில் கருணாஸ் மகன்

பிரபல நடிகர் கருணாஸ் மகன், கென் ஏற்கனவே ரெட்டை சுழி, நெடுஞ்சாலை, ரகளை புரம், அழகு குட்டி செல்லம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தற்போது ‘அசுரன்’ படத்தில் தனுஷ் மகன் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். படம் முழுவதும் வருவதுபோல் கென் கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டு உள்ளது. இந்த படத்தில் நடித்தது பற்றி கென் கூறியதாவது:- “அசுரன் படத்தில் தனுஷ்-வெற்றி மாறன் ஆகியோருடன் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம், அவர்கள் இருவரிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். சிறிய பையன் என்று இல்லாமல் நன்றாக என்னை கவனித்துக்கொண்டனர். படத்தில் எனது நடிப்பு சிறப்பாக உள்ளதாக பாராட்டும் கிடைத்துள்ளது. தனுஷ் என்னிடம் இனிமையாக பழகினார். அவரது வீட்டு பையன்போல் பார்த்துக்கொண்டார். சிறுவயதிலேயே நடிக்க வேண்டும் என்று ஆசை இருந்தது. கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்றேன். பாடல்கள் பாடினேன். நடனம் ஆடவும் செய்தேன். எனது தந்தை…

கோட்டாவுக்கு வழங்கிய இரட்டை பிரஜாவுரிமை போலி ஆவணம்

கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்ட இரட்டைப் பிரஜாவுரிமை போலி ஆவணமாகும். இதனை அடிப்படையாகக் கொண்டு அவர் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் அது நாட்டின் இறைமை, ஒருமைப்பாடு மற்றும் தேசிய பாதுகாப்புக்கு பெரும் இழுக்காகும் என சட்டத்தரணி சுரேன் பெர்னாண்டோ நீதிமன்றில் சுட்டிக்காட்டினர். கோட்டாபய ராஜபக்ஷக்கு இரட்டைப் பிரஜாவுரிமை இருப்பதாகக் கூறி எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதை தடுக்கும் வகையில் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கக் கோரி 'புரவெசி பலய' அமைப்பின் இணை அமைப்பாளரான காமினி வியங்கொட மற்றும் பேராசிரியர் சந்திரகுப்த தேனுவர ஆகியோர் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த றிட் மனுவானது நேற்றைய தினம் விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதே சட்டத்தரணி இவ்வாறு சுட்டிக்காட்டினார். வழக்கு விசாரணையின் போது 2005 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் திகதியன்று அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்ட இரட்டைப்…

வெளிநாடு செல்ல கோட்டாபயவிற்கு அனுமதி

டீ.ஏ. ராஜபக்ஷ நினைவுத் தூபி மற்றும் நூதனசாலை அமைப்பதற்கு 90 மில்லியன் ரூபா அரச நிதியைப் பயன்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷவிற்கு மருத்துவ பரிசோதனைக்காக வெளிநாடு செல்வதற்கு விசேட நீதாய மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை அவர் வெளிநாடு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கு சம்பத் அபேகோன் (தலைவர்), சம்பத் விஜயரத்ன மற்றும் சம்பா ஜானகி ராஜரத்ன ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டது. கடந்த வழக்கு தினத்தில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது கோட்டாபய ராஜபக்ஷ சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, தனது கட்சிக்காரர் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட திர்மானித்துள்ளதால் அதனுடன்…

உயிர் உள்ளவரை மக்கள் சேவைக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவேன்

உயிர் உள்ளவரை மக்கள் சேவைக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரும், ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இன்று இடம்பெற்ற கட்சியின் விசேட மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். மேலும் தனது ஆற்றலையும், அர்பணிப்புகளையும் மற்றும் பலத்தையும் முழுவதுமாக நாட்டு மக்களின் நலனுக்காக பயன்படுத்துவதாகவும் ஜனாதிபதி வேட்பாளருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். நாட்டு மக்களுக்கு செழிப்பான ஒரு எதிர்காலத்தை ஏற்படுத்தி கொடுக்க தான் முற்றுமுழுதாக தன்னை அர்பணிப்பதாகவும் அவர் கூறினார். ஐக்கிய தேசிய கட்சியின் விசேட மாநாடு கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று இடம்பெற்றது. இதன்போது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரேரித்ததுடன் அதற்கு மாநாட்டில் இருந்தவர்கள் ஏகமனதாக அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடதக்கது.

ஐ.தே.க மாநாட்டில் 5 யோசனைகள் முன்வைக்கப்பட்டு ஏகமனதாக அங்கீரிப்பு

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை பெயரிடுவது குறித்து கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்வைத்த பிரேரணைக்கு ஐக்கிய தேசிய கட்சியின் விசேட மாநாட்டில் ஏகமனதாக இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசிய கட்சியின் விசேட மாநாடு கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று (03) இடம்பெற்றது. இதன்போது கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாசவின் பெயரை கட்சியின் தலைவர் முன்மொழிந்தார். அதன் பின்னர் அந்த கட்சியின் பொதுச் செயலாளர் அக்கில விராஜ் காரியவசத்தினால் மேலும் 5 யோசனைகள் முன்வைக்கப்பட்டு அவையும் ஏகமனதாக அங்கீரிக்கப்பட்டன. 2019 ஆம் ஆண்டு செப்டெம்பர் 26 ஆம் திகதி கட்சி செயற்குழு 3 பிரதான யோசனைகளுக்கு அனுமதி வழங்கியிருந்தது. அதன்படி அதிகார பகிர்வு, தேர்தல் முறைமையை மாற்றி…

பலாலி விமான நிலையம் – யாழ். சர்வதேச விமான நிலையமாக பெயர் மாற்றம்

போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க சமர்ப்பித்த பரிந்துரை அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதேச விமான நிலையமாக இருந்து வந்த யாழ்ப்பாண பலாலி விமான நிலையம் பிராந்திய மற்றும் சர்வதேச விமான நிலையமாக அபிவிருத்தி செய்யும் பணி போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவின் தலைமையில் கடந்த ஜுலை மாதம் 5 ஆம் திகதி ஆரம்பமானது. இந்த அபிவிருத்தி பணிகள் இந்த மாதம் 10 ஆம் திகதி அளவில் பூர்த்தி செய்வதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. பலாலி சர்வதேச விமான நிலையத்தின் விமான சேவைகளுக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் நல்லாசியுடன் எதிர்வரும் 17 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னதாக ஆரம்பிப்பதற்கு…