படப்பிடிப்புக்கு தயாராகும் விஜய், அஜித்தின் புதிய படங்கள்

பிகில்’ படத்தை முடித்து விட்டு புதிய படத்தில் நடிக்க விஜய் தயாராகி உள்ளார். இந்த படத்தை மாநகரம், கைதி படங்களை இயக்கி பிரபலமான லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இதில் நாயகியாக நடிக்க கியாரா அத்வானி, மாளவிகா மோகனன் ஆகியோர் பெயர்கள் அடிபடுகின்றன. விஜய் சேதுபதி வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது. தற்போது படத்துக்கான லொகேஷன் பார்க்கும் பணியில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இந்த படத்தின் முக்கிய காட்சிகளை ராமேசுவரத்தில் படமாக்குகின்றனர். அங்கு படப்பிடிப்பு நடத்த உள்ள இடங்களை இயக்குனர் லோகேஷ் கனகராஜும், அவரது குழுவினரும் நேரில் சென்று பார்த்தனர். அந்த புகைப்படங்கள் வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. அதிரடி சண்டை படமாக தயாராகிறது. இது விஜய்க்கு 64-வது படமாகும். படத்தை அடுத்த வருடம் கோடையில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர். நேர்கொண்ட பார்வை படத்துக்கு…

மும்பை தொழில் அதிபருடன் திருமணமா? தமன்னா விளக்கம்

தமன்னா 2005-ல் ‘கேடி’ படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து கதாநாயகியாக நீடிக்கிறார். விஜய், அஜித்குமார், சூர்யா, கார்த்தி, தனுஷ், ஜெயம் ரவி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். தமிழ், தெலுங்கில் வெளியான பாகுபலி திருப்பு முனையாக அமைந்தது. தற்போது பெட்ரோமாக்ஸ் என்ற கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வருகிறது. தமிழ் தெலுங்கில் திரைக்கு வர உள்ள சைரா நரசிம்ம ரெட்டி என்ற சரித்திர படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தட் இஸ் மகாலட்சுமி என்ற இன்னொரு படமும் தமன்னா நடிப்பில் வெளியாக இருக்கிறது. இந்தி படமொன்றில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார். தமன்னாவுக்கு தற்போது 29 வயது ஆகிறது. அவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் அவசரப்படுவதாகவும், மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் சமூக…

இளையராஜாவுடன் மோதலா? டைரக்டர் சீனுராமசாமி விளக்கம்

விஜய் சேதுபதி நடிக்கும் ‘மாமனிதன்’ படத்தை சீனுராமசாமி இயக்கி வருகிறார். இந்த படத்துக்கு இளையராஜாவும் யுவன் ஷங்கர் ராஜாவும் இசையமைக்கின்றனர். பாடல்களை வைரமுத்துவை வைத்து எழுத வைக்க சீனுராமசாமி விரும்பியதாகவும் இளையராஜா தரப்பில் அதை ஏற்காததால் இருவருக்கும் மோதல் என்றும் தகவல்கள் பரவின. இதற்கு விளக்கம் அளித்து சீனுராமசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- “நான் இயக்கும் மாமனிதன் படத்தில் இளையராஜா பாடல்களுக்கு மெட்டு போடுகிறார். யுவன் இசைகோர்க்கிறார். இது இருவரும் சேர்ந்து வேலை செய்யும் படம். இசை சேர்ப்பில் அவருக்கு நான் யோசனை சொல்ல முடியுமா? படத்தில் பாடல்கள் என்று வந்தபோது பழனிபாரதிக்கும், ஏகாதசிக்கும் கொடுக்கலாம் என்றேன். யுவன் தரப்பில் பா.விஜய் என்றார்கள். நான் சம்மதித்தேன். இது நான், யுவன் ஷங்கர் ராஜாவுடன் பணிபுரியும் 4-வது படம் இளையராஜாவுடன் முதல் படம். இளையராஜா மீது எனக்கிருக்கிற நேசத்தால்…

காவி ஆவி நடுவுல தேவி படத்தில்11 தோற்றங்களில், யோகி பாபு

பல படங்களுக்கு வசனம் எழுதிய புகழ்மணி, ‘காவி ஆவி நடுவுல தேவி’ என்ற புதிய படத்தை டைரக்டு செய்து இருக்கிறார். இதில், யோகி பாபு 11 தோற்றங்களில் வந்து காதலர்களை சேர்த்து வைக்க துடிப்பது போல் நடித்துள்ளார். இந்த படத்தில், கதாநாயகனாக ராம்சுந்தர்அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக பிரியங்கா நடித்து இருக்கிறார். இவர்களுடன் தம்பிராமய்யா, டைரக்டர் புகழ்மணி ஆகிய இருவரும் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்கள். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்து இருக்கிறார். படத்தின் கதாசிரியர் வி.சி.குகநாதன் கூறிய தாவது:- “இது, முழுக்க முழுக்க நகைச்சுவை படம். காதலர்களை சேர்த்து வைக்கும் குழலூதும் கண்ணனாக யோகி பாபுவும், அவருக்கு எதிராக காதலர்களை பிரித்து வைப்பவராக மொட்டை ராஜேந்திரனும், மலையாள மந்திரவாதியாக இமான் அண்ணாச்சியும் நடித்துள்ளனர். படம், விரைவில் திரைக்கு வர இருக்கிறது.”

கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு 25 கோடி ரூபாய் பணம்

கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு 25 கோடி ரூபாய் நன்கொடை கொடுத்த விவகாரம் தொடர்பாக வருமான வரித்துறை, தேர்தல் ஆணையத்திடம் ஏற்கனவே பதில் அளிக்கப்பட்டு விட்டதாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட முத்துகுமரன் தெருவில் ரூபாய் 37 லட்சம் மதிப்பீட்டில் புதிய கான்கிரீட் சாலை அமைக்கும் பணியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கொளத்தூர் தொகுதியில் பல்வேறு பகுதிகளில் அவர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், தமது முன்முயற்சியில் கொளத்தூர் தொகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டுப் பணிகளை விரிவாகக் குறிப்பிட்டார். நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு 25 கோடி ரூபாய் நன்கொடை கொடுத்தது பற்றி தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளது பற்றி செய்தியாளர்கள் கேட்டனர். வருமான வரித்துறைக்கும் தேர்தல் ஆணையத்திற்கும் இதுபற்றி ஏற்கனவே பதில்…

நீராவியடிப் பிள்ளையார் ஆலய விவகாரம் ?

முல்லைத்தீவு நாயாறு விகாரையின் விகாராதிபதியின் பூதவுடலைத் தகனம் செய்வது தொடர்பில் நீதிமன்றத்தில் இரு மணித்தியாலங்களுக்கும் மேலாக விசாரணை நடைபெற்ற அதேவேளை, மறுபக்கத்தில் மரணமடைந்த தேரரின் பூதவுடல் அழுகிக்கொண்டிருந்தது. வெகு நேரத்தின் பின்னர் அங்கு பூதவுடலைத் தகனம் செய்வதற்கான பிரதேசத்தைத் தெரிவு செய்யுமாறு தீர்ப்பு வழங்கப்பட்டது. எனினும் அதற்குள் தேரரின் பூதவுடல் தகனம் செய்யப்பட்டுவிட்டது. தற்போது இவையனைத்தும் நடைபெற்று முடிந்துவிட்ட நிலையில், அதனை அப்படியே விட்டுவிட வேண்டும். இவ்விகாரத்தினால் அங்கு தமிழ் - சிங்கள மக்களுக்கு இடையில் எவ்வித முரண்பாடுகளும் வெடிக்கவில்லை. எனவே தேவையின்றிப் போராட்டங்களை நடத்த வேண்டிய அவசியமில்லை என்று பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். முல்லைத்தீவு செம்மலை நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள விகாரையில் விகாராதிபதி கொலம்பகே மேதாலங்காதர தேரரின் பூதவுடலை ஆலயத்திற்கு அண்மையாகவுள்ள கடற்கரையில் தகனம் செய்வதற்கு…

கடவுள் சொன்னதால் தான் என் மகளை ஆற்றில் வீசினேன்

அசாம் மாநிலம் பாஸ்கா மாவட்டத்தில் உள்ள லஹாபாரா கிராமத்தைச் சேர்ந்தவர் பீர்பால் பாரோ. இவருக்ககு வயது 35. இவரின் மனைவி ஜூனுக்கு வயது 30. இவர்களுக்கு ரிஷிகா என்ற 2 வயது மகளும் இருந்துள்ளார். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை குழந்தையை அழைத்துக்கொண்டு வெளியே சென்ற தந்தையான பீர்பால், சிறிது நேரத்துக்குப் பின் வீட்டுக்குத் தனியாக வந்தார். அப்போது, அவரின் மனைவி, குழந்தை எங்கே? என்று கேட்டபோது, அருகில் ஓடும் ஆற்றில் மகளை விட்டதாகத் தெரிவித்துள்ளார். இதனை கேட்டு, அதிர்ச்சி அடைந்த மனைவி ஜூனு உறவினர்களிடம் கூற, அவர்கள் விரைந்து சென்று குழந்தையை ஆற்றில் தேடினர். கிடைக்கவில்லை. இதையடுத்து பொலிஸில் புகார் செய்யப்பட்டது. பின்னர் தீயணைப்பு துறையினர் வந்து தேடி, குழந்தையின் சடலத்தை மீட்டுள்ளனர் இந்நிலையில், பொலிசார் பீர்பாலை கைது செய்து விசாரித்தபோது, தனது கனவில் கடவுள் வந்ததாகவும்,…