சுபஸ்ரீ குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு

பேனர் விழுந்ததால் உயிரிழந்த சுபஸ்ரீ குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இடைக்கால நிவாரண நிதியாக தர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிவாரணத் தொகையை, தவறு செய்த அதிகாரிகளிடம் இருந்து வசூலிக்கவும் உத்தரவிட்டுள்ளது. அதிமுக பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்தது பற்றி சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை இன்று நடைபெற்றது. சென்னை பள்ளிக்கரணையில் லாரியில் சிக்கி இளம்பெண் உயிரிழந்த சுபஸ்ரீ தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இது தொடர்பாக, வழக்கறிஞர் லட்சுமிநாராயணன் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. முன்னதாக, இந்த வழக்கு தொடர்பாக, காவல்துறை மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டது. அதன்படி, மாநகர காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் மற்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆகியோர் நீதிமன்றத்திற்கு…

பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான்?

தபாங் 3’ படத்தைத் தொடர்ந்து பிரபுதேவா இயக்கும் அடுத்த படத்திலும் சல்மான் கான் ஹீரோவாக நடிக்கப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. பிரபுதேவா இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ‘சிங் இஸ் பிளிங்’. 2015-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில், அக்‌ஷய் குமார், எமி ஜாக்சன், லாரா தத்தா உள்ளிட்ட பலர் நடித்தனர். இந்தி மொழியில் வெளியான இந்தப் படம், பாக்ஸ் ஆபீஸில் நல்ல வசூலைப் பெற்றது. அதன்பிறகு நடிப்பில் கவனம் செலுத்திய பிரபுதேவா, இயக்கத்துக்கு ஓய்வு கொடுத்தார். கடந்த மூன்றரை ஆண்டுகளில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் 10 படங்களுக்கும் மேல் நடித்துவிட்டார். தற்போதும் சில படங்களில் நடித்து வருகிறார். தற்போது மறுபடியும் இயக்கத்தைக் கையில் எடுத்துள்ள பிரபுதேவா, சல்மான் கான் நடிப்பில் ‘தபாங் 3’ படத்தை இயக்கி வருகிறார். இந்தியில் உருவாகிவரும் இந்தப் படத்தில்,…

பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ மரணமடைந்ததை

பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ மரணமடைந்ததைத் தொடர்ந்து கடற்கரை சாலையில் உள்ள அதிமுக கொடிகளை நீக்கும் பணிகள் நடந்து வருகின்றன. சென்னை, கோவிலம்பாக்கம் திருமண மண்டபத்தில் நடத்த அதிமுக பிரமுகர் இல்லத் திருமண விழாவுக்கு வரும் அதிமுக பிரமுகர்களை வரவேற்க துரைப்பாக்கம், வேளச்சேரி 200 அடி ரேடியல் சாலையின் இருபுறமும் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. சாலைத் தடுப்புகளிலும் வரிசையாக பேனர்கள் கட்டப்பட்டிருந்தன. இதில் ஒரு பேனர், சாலையில் சென்ற குரோம்பேட்டையைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் சுபஸ்ரீ ரவி மீது விழுந்தது. பேனர் விழுந்ததால் நிலை தடுமாறிய சுபஸ்ரீ சாலையில் விழுந்தார். அப்போது பின்னால் வந்த தண்ணீர் லாரி அவர் மீது ஏறியதில் காயமடைந்த சுபஸ்ரீ மரணமடைந்தார். இதனைத் தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலின், அமமுக பொதுச் செயலாளர் தினகரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன்…

இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி பலவீனமாக உள்ளது

இந்தியாவில் சமீபத்திய பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்ததை விட மிகவும் பலவீனமாக உள்ளது என சர்வதேச நாணய நிதிய செய்தி தொடர்பாளர் ஜெர்ரி ரைஸ் கூறி உள்ளார். சர்வதேச நாணய நிதிய (ஐ.எம்.எஃப்) செய்தி தொடர்பாளர் ஜெர்ரி ரைஸ் கூறி உள்ளதாவது:- இந்தியாவில் சமீபத்திய பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்ததை விட மிகவும் பலவீனமாக உள்ளது. முக்கியமாக பெருநிறுவன மற்றும் சுற்றுச்சூழல் ஒழுங்குமுறை நிச்சயமற்ற தன்மை மற்றும் சில வங்கி சாரா நிதி நிறுவனங்களில் நீடித்த பலவீனம் மற்றும் கண்ணோட்டத்திற்கான அபாயங்கள் ஆகியவை நாம் சொல்ல விரும்புவது போல எதிர்மறையாக உள்ளன. சமீபத்திய மொத்த உள்நாட்டு உற்பத்தியின் புள்ளிவிவரங்கள் இந்தியாவுக்கான மெதுவான வளர்ச்சி விகிதத்தை பிரதிபலிக்கின்றன. சர்வதேச நாணய நிதியத்தின் மதிப்பீடு என்ன? எங்களிடம் புதிய புள்ளிவிவரங்கள் வந்து கொண்டிருக்கின்றன, ஆனால் இந்தியாவில் சமீபத்திய பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்ததை விட…

அமெரிக்கா நிதியளிக்க ஜிஹாதிகளுக்கு பாகிஸ்தான் பயிற்சி

1980களில் அமெரிக்கா நிதியளிக்க ஜிஹாதிகளுக்கு பாகிஸ்தான் பயிற்சி அளித்தது என பிரதமர் இம்ரான் கான் ஒப்புக்கொண்டார். ரஷ்யா டுடேக்கு அளித்த சிறப்பு பேட்டியில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறியதாவது:- ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் 'பயங்கரவாதத்திற்கு எதிரான போரை' ஆதரிப்பதற்கு பதிலாக பாகிஸ்தான் நடுநிலை நிலைப்பாட்டை எடுத்திருக்க வேண்டும். இதனால் நாங்கள் 70,000 மக்களை இழந்துள்ளோம். நூறு பில்லியன் டாலர்களை பொருளாதாரத்திற்கு இழந்தோம். இறுதியில் ஆப்கானிஸ்தானில் வெற்றிபெறவில்லை என்று நாங்கள் அமெரிக்கர்களால் குற்றம் சாட்டப்பட்டோம். இது பாகிஸ்தானுக்கு மிகவும் நியாயமற்றது என்று நான் உணர்ந்தேன் என்று கூறினார். பாகிஸ்தான் மண்ணில் பிறந்து, ஆப்கானிஸ்தானில் 'ஜிஹாத்' நடத்துவதற்கு அமெரிக்காவால் நிதியளிக்கப்பட்ட பயங்கரவாத குழுக்கள் இப்போது பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பியுள்ளதை இம்ரான் கான் ஒப்புகொண்டார். அக்டோபரில் நடைபெறவுள்ள பாரீஸை தளமாகக் கொண்ட நிதி நடவடிக்கை பணிக்குழு (எஃப்ஏடிஎஃப்) கூட்டத்திற்கு முன்னதாக இம்ரான்…

இந்தியாவுடன் எதிர்பாராத விதமாக போர் மூளும் வாய்ப்பு

சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் கலந்து கொண்ட ஷா மஹ்மூத் குரேஷி, கூட்டத்திற்கிடையே நிருபர்களுக்கு பேட்டியளித்தார் அப்போது அவர் கூறியதாவது:- ஜம்மு-காஷ்மீரை முன்வைத்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே எதிர்பாராத விதமாக போர் மூளும் வாய்ப்பு உள்ளது. போர் நடைபெற்றால், என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை பாகிஸ்தானும், இந்தியாவும் புரிந்து கொள்ளும். ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் ஆணையர் மிஷெல் பேச்லெட்டை சந்தித்து, இந்தியா மற்றும் பாகிஸ்தான் கட்டுப்பாடுகளின்கீழ் இருக்கும் ஜம்மு-காஷ்மீர் பகுதிகளுக்கு வந்து உண்மை நிலவரத்தை பார்வையிட்டு அறிக்கை அளிக்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. அழைப்பை ஏற்று, இந்தியா மற்றும் பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள ஜம்மு-காஷ்மீர் பகுதிகளுக்கு வந்து நிலவரத்தை பார்வையிட மிஷெல் பேச்லெட்டும் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளார். தற்போதைய சூழ்நிலை மற்றும் இந்தியாவின்…