பச்சை நிறமாக மாறிய பாம்பன் கடல்

பாம்பன் குந்துக்கால் கடற்கரைப் பகுதியில் பூங்கோரை பாசியால் கடல் நீரின் நிறம் பச்சையாக மாறி பல்லாயிரக்கணக்கான மீன்கள் இறந்து மிதந்தன. இதனால் மீனவர்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். ராமேசுவரம் அருகே பாம்பன் குந்துக்கால் கடற்பகுதியில் ஆழ்கடல் மீன்பிடி முறையை ஊக்குவிக்க மத்திய, மாநில அரசுகள் இணைந்து புதிய மீன்பிடித் துறைமுகத்தை அமைத்து வருகின்றனர். இந்த குந்துக்கால் கடற்பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக கடல் நீர் பச்சை நிறத்தில் காணப்பட்டது. மேலும் பல்லாயிரக்கணக்கான மீன்களும் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளன. மேலும் இதே போல் குந்துக்கால் கடற்கரைக்கு எதிரே உள்ள மன்னார் வளைகுடா தீவுகளான குருசடை தீவு மற்றும் சிங்கிள் தீவுப் பகுதிகளிலும் மீன்கள் உயிரிழந்த நிலையில் மிதந்துள்ளன. இதனால் அச்சமடைந்த மீனவர்கள் இதுகுறித்து மரைக்காயர் பட்டிணத்திலுள்ள மத்தியக் கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையத்தைச் சார்ந்த ஆராச்சியாளர்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.…

தர்பார் திரைப்படம் பொங்கல் அன்று வெளியீடு

தர்பார் திரைப்படம் பொங்கலன்று வெளியாகும் என நடிகர் ரஜினிகாந்த் பேட்டியளித்து உள்ளார். ரஜினிகாந்த் மற்றும் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணியில் 'தர்பார்' படம் உருவாகி வருகிறது. இதன் 3வது கட்ட படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ரஜினி என்கவுண்டர் சிறப்பு போலீசாகவும், தாதாவாகவும் இரட்டை வேடத்தில் நடிப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இதில் ரஜினிக்கு மகளாக நிவேதா தாமஸ் நடிக்கிறார். சந்திரமுகி, குசேலன் படத்தை அடுத்து ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இந்த படத்தின் தொடக்கத்திலேயே தர்பார் என்ற தலைப்புடன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ரிலீஸ் செய்துதான் படக்குழு ஷூட்டிங்கை தொடங்கியது. இதனை அடுத்து ஷூட்டிங்கில் இருந்து ரஜினியின் பல புகைப்படங்கள் கசிந்து கொண்டே இருந்தன. இதனால் படக்குழு இரண்டு நல்ல புகைப்படங்களை வெளியிட்டு ஃபர்ஸ்ட் லுக்கை உருவாக்குங்கள் என்று ரசிகர்களுக்கு அறிவுறுத்தியது. இந்நிலையில்…

நடிகை தமன்னாவின் அழகு ரகசியம்

நடிகை தமன்னா தனது அழகு ரகசியம் குறித்து தெரிவித்துள்ளார். நடிகை தமன்னா ஆக்‌ஷன், பெட்ரோமாக்ஸ் என்று 2 தமிழ் படங்களிலும் ‘தட் இஸ் மகாலட்சுமி’ என்ற தெலுங்கு படத்திலும், ஒரு இந்தி படத்திலும் நடிக்கிறார். சினிமா வாழ்க்கை குறித்து அவர் கூறியதாவது:- “என்னை பாக்கிறவர்கள் அழகு குறையவே இல்லை என்கிறார்கள். அது என் குடும்பத்தில் இருந்து வந்தது. நடிப்பு தொழிலை நேசிப்பதால் வித்தியாசமான கதாபாத்திரங்களை செய்ய முடிகிறது. 10 ஆண்டுகளில் எவ்வளவோ முதிர்ச்சி அடைந்து இருக்கிறேன். அதனால்தான் நல்ல கதைகளை தேர்வு செய்ய முடிகிறது. கதாபாத்திரங்களுக்கு ஏற்ப உடம்பை மாற்றிக்கொள்வேன். நடிகையாக ஒவ்வொரு கணத்தையும் மகிழ்ச்சியாக கடத்துகிறேன். சினிமாவில் அழகாக இருந்தால் மட்டும் போதாது. நடிக்க தெரிந்தால்தான் நிலைக்க முடியும். மற்றவர்களுடன் என்னை ஒப்பிடுவது பிடிக்காது. எனது பாதையில் போகிறேன். வெற்றி, தோல்வி நம் கையில் இல்லை.…

இளையராஜா இசையில் விஷாலின் துப்பறிவாளன் 2-ம் பாகம்

இளையராஜா இசையில் விஷாலின் துப்பறிவாளன் 2-ம் பாகம் தயாராக உள்ளது. மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்த துப்பறிவாளன் படம் 2017-ல் வெளியானது. கணியன் பூங்குன்றன் என்ற போலீஸ் உளவாளி கதாபாத்திரத்தில் வந்தார். கதாநாயகியாக அனு இம்மானுவேல் நடித்து இருந்தார். பாக்யராஜ், பிரசன்னா, வினய், வின்சென்ட் அசோகன், ஆண்ட்ரியா, சிம்ரன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் வந்தனர். இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. நல்ல வசூலும் பார்த்தது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் விஷால்-மிஷ்கின் கூட்டணியில் தயாராக உள்ளது என்று ஏற்கனவே தகவல் கசிந்தது. இந்த நிலையில் விஷால் சினிமாவுக்கு வந்து 14 ஆண்டுகள் முடிந்து 15-வது ஆண்டு தொடங்கி இருப்பதையொட்டி துப்பறிவாளன்-2 படத்துக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இந்த படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார். அவர் இசையமைக்கும் முதல் விஷால் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இளையராஜாவை…

புதிய படத்தில் போலீஸ் அதிகாரியாக அஜித்?

புதிய படத்தில் போலீஸ் அதிகாரியாக அஜித் நடிக்க உள்ளதாக சமூக வலைத்தளத்தில் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. ‘நேர்கொண்ட பார்வை’ படத்துக்கு பிறகு மீண்டும் வினோத் இயக்கும் படத்தில் அஜித்குமார் நடிக்கிறார். மறைந்த ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கிறார். இது அஜித்குமாரின் 60-வது படமாக தயாராகிறது. இந்த படத்துக்காக அஜித் உடல் எடையை குறைத்து இளமை தோற்றத்துக்கு மாறி இருக்கிறார். முந்தைய படங்களில் இருந்த இளநரை தலைமுடியையும் கருப்பாக்கி இருக்கிறார். அதிரடி சண்டை கதையம்சம் உள்ள படமாக தயாராகிறது. படத்தில் கார் பந்தயம், மோட்டார் பைக் பந்தய காட்சிகள் இடம் பெறும் என்று போனிகபூர் கூறியுள்ளார். இதில் அஜித்குமார் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக ஏற்கனவே தகவல் கசிந்தது. இந்த நிலையில் படத்தில் அஜித்குமார் தோற்றம் என்ற அறிவிப்போடு போலீஸ் அதிகாரி சீருடையில் அவர் பைக்கில் செல்வது போன்ற…

அலைகள் வாராந்த பழமொழிகள் 12.09.2019

01. பொருளாதார வீழ்ச்சியில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக செழிப்பைப்பற்றி யோசிப்பது மிகமிக நல்லது. 02. பிரமாதமாக இருக்கிறேன் நீங்கள் எப்படியுள்ளீர்கள் என்று பதில் கொடுங்கள்.. ஏதோ காலம் போகுது என்று கூறவேண்டாம். 03. உங்களுக்கு கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பிலும் நீங்கள் அற்புதமான உணர்வை கொண்டிருப்பதாக கூறுவதை ஒரு பழக்கமாக்கி கொள்ளுங்கள். 04. எப்போதும் உற்சாகமாக இருப்பவர்களை தேடியே நண்பர்கள் வருவார்கள். 05. ஒருவர் இல்லாத நேரத்தில் அவரை சிறுமைப்படுத்துவதை தவிர்த்துக்கொள்ளுங்கள். 06. தினமும் உங்கள் வாழ்க்கை துணைக்கு ஒவ்வொரு பாராட்டு வழங்குங்கள். 07. உண்மையான பாராட்டுக்கள் வெற்றிக்கான கருவியாகும். அதை அடிக்கடி பயன்படுத்துங்கள்..! 08. ஒரு நல்ல செய்தி எமக்கு ஒரு நல்ல வாய்ப்பை தருகிறது. 09. வெற்றி நமக்கே என்ற உத்தரவாதம் கொடுக்கும்போது மற்றவர்கள் கண்களில் ஒளி வீச காண்பீர்கள். 10. பிரமாண்டமான கோட்டைகளை கட்டுங்கள்…