யாழ்.மீசாலையில் சொகுசு பேருந்துடன் மோதுண்டு இளைஞர் பலி!

யாழ்.சாவகச்சேரி – ஏ 9 வீதி மீசாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றதாக சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தனியார் சொகுசு பேருந்துடன் மோட்டார் சைக்கிளில் மோதியதாலேயே விபத்து நேர்ந்துள்ளது.

சம்பவத்தில் பளை வேம்படுகேணியைச் சேர்ந்த 28 வயதுடைய சுப்பிரமணியம் ரஜீதரன் என்ற இளைஞரே பலியாகியுள்ளார்.

சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Related posts