ந்தியாவில் சட்டவிரோத குடியேறிகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்

சட்ட விரோதமாக குடியேறியவர்கள் யாரும் இனி நாட்டில் தங்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

உச்ச நீதிமன்ற உத்தரவுபடி, அசாம் மாநிலத்தில் சட்டவிரோதமாக குடியேறிய வங்க தேசத்தவர்களை கண்டறியும் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் இறுதிபட்டியல் கடந்தமாதம் வெளியிடப்பட்டது.

வரைவுப் பட்டியலில் 40 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பெயர்கள் விடுபட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில் இறுதிபட்டியலில் 19 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
தேசிய குடிமக்கள் பதிவேட்டில் தங்கள் பெயரை பதிந்துகொள்ள மொத்தம் 3,30,27,661 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில், 3,11,21,004 பேர் மட்டும் புதுப்பிக்கப்பட்ட இறுதி பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். மீதமுள்ள 19,06,657 பேர் விலக்கப்பட்டுள்ளனர் என்று (தேசிய குடிமக்கள் பதிவேடு) என்.ஆர்.சி மாநில ஒருங்கிணைப்பாளர் அலுவலகம் ஆகஸ்ட் 31 அன்று தெரிவித்தது.

கவுகாத்தியில் எட்டு வடகிழக்கு மாநிலங்களின் முதல்வர்கள் கலந்துகொண்ட வடகிழக்கு கவுன்சிலின் (என்இசி) 68வது கூட்டம் இன்று நடைபெற்றது.
வடகிழக்கு கவுன்சிலின் தலைவரான ஷா, கூட்டத்தைத் தொடங்கிவைத்தார்.
அப்போது, மத்திய அரசின் திட்டவட்டமான முடிவுகுறித்து அவர் பேசியதாவது:
“தேசிய குடிமக்கள் பதிவேட்டு குறித்து பல்வேறு வகையான மக்கள் அனைத்து வகையான கேள்விகளையும் எழுப்பியுள்ளனர். அவர்களுக்கு சொல்லக்கூடிய ஒரே விளக்கம் இதுதான்,

தேசிய குடிமக்கள் பதிவேட்டுப் பணிகள் தொடங்கப்பட்டு உரிய கால வரையறையிலேயே முடிக்கப்பட்டுவிட்டiது. இனி சட்ட விரோதமாக குடியேறிய ஒருவரும் இந்திய நாட்டில் தங்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதை நான் தெளிவாகக் கூற விரும்புகிறேன். அதுதான் எங்கள் திட்டம்”
இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் மத்திய அரசின் வட கிழக்கு பிராந்திய வளர்ச்சி அமைச்சகத்தின் பொறுப்பு அமைச்சரும் மற்றும் என்இசியின் துணைத் தலைவருமான ஜிதேந்திர சிங் உள்ளிட்ட பலரும் உரையாற்றினர்

Related posts