இது ஒரு பொன்மாலைப் பொழுது ராஜசேகர் காலமானார்

தமிழ் சினிமாவின் சிறந்த படங்களில் ஒன்றாக 81ல் வெளிவந்த 'பாலைவனச் சோலை'யைத் தந்த இயக்குநர் ராஜசேகர் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 59. இயக்குநர் பாரதிராஜாவால் 'நிழல்கள்' திரைப்படத்தின்மூலம் அறிமுகப்படுத்தப்பட்டவர் ராஜசேகர். இப்படத்தில் நான்கு ஹீரோக்களில் ஒருவராக நடித்திருப்பார். கவிஞர் வைரமுதத்துவின் ரசிகர்களால் கொண்டாடப்படும் முதல் தமிழ் திரையிசைப் பாடலான 'இது ஒரு பொன்மாலைப் பொழுது' பாடல் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாட திரைப்படத்தில் ராஜசேகர் நடித்திருப்பார். இதுவே இவருக்கு ஒரு அடையாளமானது. பின்னர் திரைப்படங்கள் இயக்குவதில் ஆர்வம் காட்டியவர் இயக்குநர் ராபர்ட்டுடன் இணைந்து 'பாலைவன ரோஜக்கள்' திரைப்படத்தை 1981ல் இயக்கினார். தமிழில் 'சின்னப் பூவே மெல்லப் பேசு' (1987), 'பறவைகள் பலவிதம்' (1988), உள்ளிட்ட சிறந்த வெற்றிப் படங்களை இவர் ராபர்ட்டுடன் இணைந்து இயக்கினார். சினிமாவில் மீண்டும் நடிகராக வலம் வந்த ராஜசேகர் சின்னத்திரை ரசிகர்களின் மனதிலும்…

12 பாடல்களுடன் உருவாகும் பொன்னியின் செல்வன்

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் 'பொன்னியின் செல்வன்' படத்துக்காக வைரமுத்து 12 பாடல்கள் எழுதவுள்ளார். 'செக்கச்சிவந்த வானம்' படத்தைத் தொடர்ந்து 'பொன்னியின் செல்வன்' படத்தை இயக்கவுள்ளார் மணிரத்னம். மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. லைகா நிறுவனம் முதல் பிரதி அடிப்படையில் தயாரிக்கிறது. ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், அமலாபால், கீர்த்தி சுரேஷ், பார்த்திபன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கவுள்ளனர். த்ரிஷாவையும் நடிக்க வைக்கப் பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது. யாரெல்லாம் நடிக்கிறார்கள் உள்ளிட்ட எந்தவொரு விவரத்தையுமே படக்குழு அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. இந்நிலையில், இந்தப் படத்துக்காக 12 பாடல்களை எழுதவுள்ளதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். மேலும், அந்தக் காலத்தில் உள்ள வார்த்தைகளை இந்தக் காலத்தில் உள்ள மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ள இந்தப் படத்துக்கு…

ந்தியாவில் சட்டவிரோத குடியேறிகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்

சட்ட விரோதமாக குடியேறியவர்கள் யாரும் இனி நாட்டில் தங்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார். உச்ச நீதிமன்ற உத்தரவுபடி, அசாம் மாநிலத்தில் சட்டவிரோதமாக குடியேறிய வங்க தேசத்தவர்களை கண்டறியும் தேசிய குடிமக்கள் பதிவேட்டின் இறுதிபட்டியல் கடந்தமாதம் வெளியிடப்பட்டது. வரைவுப் பட்டியலில் 40 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பெயர்கள் விடுபட்டுள்ளதாக கூறப்பட்ட நிலையில் இறுதிபட்டியலில் 19 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். தேசிய குடிமக்கள் பதிவேட்டில் தங்கள் பெயரை பதிந்துகொள்ள மொத்தம் 3,30,27,661 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில், 3,11,21,004 பேர் மட்டும் புதுப்பிக்கப்பட்ட இறுதி பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். மீதமுள்ள 19,06,657 பேர் விலக்கப்பட்டுள்ளனர் என்று (தேசிய குடிமக்கள் பதிவேடு) என்.ஆர்.சி மாநில ஒருங்கிணைப்பாளர் அலுவலகம் ஆகஸ்ட் 31 அன்று தெரிவித்தது. கவுகாத்தியில் எட்டு வடகிழக்கு மாநிலங்களின் முதல்வர்கள் கலந்துகொண்ட வடகிழக்கு கவுன்சிலின் (என்இசி)…

500 பாடசாலை கட்டடங்களை ஒரே நாளில் ..

அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டத்தின் கீழ் 10,000மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட பாடசாலை கட்டடங்கள் 500ஒரே நாளில் மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு நாளை (09) திங்கட்கிழமை கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசத்தின்அழைப்பின் பேரில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் கஹதுடுவ வெனிவெல்கொல சிஷ்யோதா விசேட கல்வி மற்றும் உள்ளக கல்வி தொடர்பான தேசிய நிறுவகத்தில் நடைபெறவுள்ளது. இதன்படி இந்த நிகழ்வுடன் நாடுபூராகவும் நிர்மாணிக்கப்பட்ட பாடசாலை கட்டடங்கள் நாளை தினம் மாணவர்களிடம் கையளிக்கப்படும் அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத்திட்டமானது 65,000 மில்லியன் ரூபா முதலீட்டில் 18,000 செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதுடன் இதன்மூலம் 9064 பாடசாலைகள் பயனடைகின்றன. அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக 200 பாடசாலை கட்டடங்களும் இரண்டாம் கட்டமாக 250 பாடசாலை கட்டடங்களும் ஒரே நாளில் பாடசாலை கட்டமைப்புக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இந்நிலையில்…

ரணில் – சஜித் முக்கிய பேச்சுவார்த்தை இன்று

ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் வேட்பாளரை தேர்ந்தெடுப்பதற்கான முக்கிய சந்திப்பு இன்று இரவு நடைபெறவுள்ளது. கட்சிக்குள் உருவாகி இருக்கும் முறுகல் நிலையை முடிவுக்குக்கொண்டுவரும் வகையில் கட்சித் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் பிரதித்தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாஸவும் தனியாக இன்று இரவு சந்திக்கவிருக்கின்றனர். இவர்களின் இன்றைய சந்திப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையப்போகின்றது. கடந்த வெள்ளிக்கிழமை அலரி மாளிகையில் கட்சி உயர்மட்டங்களுக்கிடையிலான சந்திப்பின்போது இருதரப்பினருக்குமிடையிலான பிரச்சினையை தீர்ப்பதற்கு இருதலைவர்களும் தனித்துப் பேசி முடிவுக்கு வரவேண்டுமென வலியுறுத்தப்பட்ட நிலையிலேயே இன்று ஞாயிற்றுக்கிழமை சந்தித்துப்பேச இருதரப்பும் இணக்கம் தெரிவித்திருக்கின்றன. கட்சியின் வேட்பாளரை அறிவிக்கப்படாத நிலையில் ஜனநாயக தேசிய கூட்டணி அமைப்பதில் பெரும் பின்னடைவு கண்டிருப்பதாக கூட்டணி பங்காளிக்கட்சிகளில் ஒன்றான தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் அமைச்சர் மனோ கணேசனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் தினகரன் வார மஞ்சரிக்குத்…

டிப்ளோமாதாரிகள் 4286 பேருக்கு ஆசிரியர் நியமனம்

கல்வி துறையை தற்போதைய அரசாங்கம் நவீனமயப்படுத்தியுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நாடளாவிய ரீதியிலுள்ள ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பும் நோக்கில் 2015/2017கல்வியாண்டுக்கான போதனா கல்வி பாடநெறியை பூர்த்தி செய்த டிப்ளோமாதாரிகள் 4286பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று (08) அலரிமாளிகையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நியமனங்களை வழங்கிவைத்து உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்படி இந்நிகழ்வில் 4286 டிப்ளோமாதாரிகளில் சிங்கள மொழிமூலமான டிப்ளோமாதாரிகள் 2340 பேருக்கும் தமிழ் மொழி மூலமானவர்கள் 1300 பேருக்கும் ஆங்கில மொழிமூலமானவர்கள் 646 பேருக்கும் ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்டன.

புதிய யாழ்ப்பாணம் கட்டியெழுப்பப்படும்

பாரிய அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து புதிய யாழ்ப்பாணத்தைக் கட்டியெழுப்புவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார். புதிய யாழ்ப்பாணத்தைக் கட்டியெழுப்ப சகல தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்றும் பிரதமர் அழைப்புவிடுத்தார். யாழ்ப்பாணத்தில் நேற்று ஆரம்பமான என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா கண்காட்சியை ஆரம்பித்து வைப்பதற்காக யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த பிரதமர் யாழ். நகரை மீளக்கட்டியெழுப்புவதற்கான பல்வேறு அபிவிருத்தி திட்டங்களையும் ஆரம்பித்து வைத்தார். அதற்கமைய யாழ். மாநகர சபைக்கு புதிய கட்டடத்தை நிர்மாணிப்பதற்கான அடிக்கல்லை பிரதமர் நாட்டி வைத்தார். அதற்காக நடைபெற்ற வைபவத்தில் உரையாற்றிய பிரதமர் இலங்கை தமிழ் மக்களின் கேந்திர மையமாக நல்லூர்; விளங்குவதாகவும் அதன் அடையாளமாக பல மாளிகைகள் இருந்தமைக்கான ஆதாரங்கள் இன்னும் காணப்படுவதாகவும் குறிப்பிட்டார். அந்த பாரம்பரியத்தோடு யாழ்.மாநகரத்தை மீளக்கட்டியெழுப்ப அனைத்து நடவடிக்கையும் எடுப்பதாக பிரதமர் உறுதியளித்தார். விசேடமாக பலாலி விமான நிலையத்தை யாழ்ப்பாண விமான…

நேர்முகத்தேர்வு குறித்து ஆளுநரின் அதிரடி பணிப்புரை

சுகாதார பணி உதவியாளர்கள் 454 பேரை நியமிப்பதற்காக கடந்த மாதம் இடம்பெற்ற நேர்முகத்தேர்வுகள் அதனுடைய பெறுபேறுகள் அனைத்தையும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நிறுத்துமாறு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் இது தொடர்பான அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். இந்த வெற்றிடத்துக்கு தோற்றிய 1,923 பேருக்கும் மீண்டும் நேர்முகத்தேர்வினை நடத்துமாறும் ஆளுநர் பணிப்புரை வழங்கியுள்ளார். சுகாதார பணி உதவியாளர்களின் ஆட்சேர்ப்பின்போது சில தவறுகள் இடம்பெற்றுள்ளதை கண்டறிந்துள்ள ஆளுநர் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார். இதேவேளை நேர்முகத்தேர்வுக்கு வருகைதருபவர்கள் போலியான சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களுடன் வருகை தந்து அவை பொய்யானவை என்று உறுதி செய்யப்பட்டால் அவர்களுக்கு எதிராக தகுந்த சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஆளுநர் எச்சரித்துள்ளார். ஒரு மாதத்திற்குள் இந்த நேர்முகத்தேர்வினை நடாத்தி அவர்களை குறித்த வெற்றிடங்களுக்கு நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஆளுநர் தெரிவித்துள்ளார். இதற்காக 24 குழுக்களை நியமிக்குமாறும் ஒரு…